இனி திமுக அவ்வளவுதான் என உளவுத்துறையின் ஷாக் ரிப்போர்ட் காரணமாக அதனை சரிபடுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளாராம் முதல்வர் ஸ்டாலின்.
திராவிட கழகத்திலிருந்து அரசியல் கட்சியாக துவங்கப்பட்ட திமுக தற்பொழுது முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சியில் இருந்து வருகிறது. மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி 5 முறை திமுக தலைவராக இருந்த போதிலும் திமுகவை பொருத்தவரையில் வளர்ச்சி என்பது 1990'களுக்கு பிறகு நின்று விட்டது.
1990களில் திமுகவில் எந்த அளவிற்கு நிர்வாகிகள், உறுப்பினர்கள், இரண்டாம் கட்ட தலைவர்கள் இருந்தார்களோ அவர்களே தான் தற்போதும் இருக்கிறார்கள். மேலும் சில கட்சி நிர்வாகிகளை பிற கட்சிகளில் இருந்து திமுக இழுத்துள்ளதே தவிர திமுகவிலிருந்து 1990க்கு பிறகு பெரிய அளவில் தலைவர்கள் உருவாகவில்லை.
குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் இன்றைக்கு lஅமைச்சரவையில் இருக்கும் செந்தில் பாலாஜி, சேகர்பாபு இவர்கள் எல்லாம் அதிமுகவிலிருந்து வந்தவர்கள் தானே தவிர திமுகவில் உருவானவர்கள் கிடையாது.
திமுகவில் கருணாநிதி மண்டலத்திற்கு ஒரு தலைவரை உருவாக்கி வைத்திருந்தார். ஆற்காடு மாவட்டங்கள் என்றால் ஆற்காடு வீராசாமி இருப்பார், வேலூர் மண்டலங்கள் என்றால் துரைமுருகன் இருப்பார், சேலம் என்றால் வீரபாண்டி ஆறுமுகம் இருப்பார், திருச்சி என்றால் இந்த பக்கம் கே.என்.நேருவும், அந்தப் பக்கம் அன்பில் பொய்யாமொழி ஆகியோரும் இருப்பார்கள்.
மேலும் மதுரை என்றால் தன் மகன் மு.க.அழகிரியை கட்டுப்படுத்த வைத்திருப்பார். தென் மாவட்டங்களில் ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் போன்றோரை வைத்திருப்பார்.
டெல்டாவை எடுத்துக் கொண்டால் கருணாநிதிக்கு எல்லாமே கோசி. மணி தான், விழுப்புரத்தை எடுத்துக் கொண்டால் பொன்முடி தான் எல்லாமே.
இப்படி மண்டலத்திற்கு ஒரு அரசியல்வாதியை வளர்த்து இருந்தார் அது மட்டுமல்லாமல் அவர்களைத்தாண்டி அந்த மண்டலத்தில் எதுவும் நடந்து கொள்ளாதபடி பார்த்துக் கொள்வார். குறிப்பாக கருணாநிதி 2006 மற்றும் 2011 வரை ஆட்சியில் இருந்ததற்கு பிறகு கட்சியின் வளர்ச்சி அப்படியே நின்று விட்டது என கூறலாம்.
அது கடந்த 10 ஆண்டுகளில் எதிர்க்கட்சியாக இருந்தபோது மேலும் சுருங்கியது, இதன் காரணமாகவே வரலாற்றில் இதுவரை திமுகவால் தனியாக எந்த தேர்தலிலும் போட்டி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை வரலாற்றில் எந்த ஒரு தேர்தலிலும் திமுக தனியாக போட்டியிட்டதே கிடையாது.
இதன் காரணமாகத்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூட மைனாரிட்டி திமுக என்று தான் கூறுவார், அந்த அளவிற்கு திமுக பெரிய அளவில் பேசப்பட்டு வந்தாலும் களத்தில் அவை வாங்கும் வாக்குகள் என்னவோ கம்மியாகத்தான் இருக்கும். கூட்டணி கட்சியின் தயவினாலேயே இதுவரை திமுக ஆட்சியை பிடித்துள்ளது.
திமுகவின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் கூட குறைந்த அளவிலேயே இருப்பார்கள். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சியைப் பிடித்தது, திமுக ஆட்சியைப் பிடித்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது.
குறிப்பாக அதிமுகவில் ஏற்பட்ட பிளவு, அதிமுகவில் டிடிவி தினகரன் கணிசமான முக்குலத்தோர் வாக்குகளை பிரித்த காரணம், அரசு ஊழியர்கள் திமுக வந்தால் தங்களுக்கு பழைய ஓய்வூதிய முறை போன்ற ஒரு சில சலுகைகள் கிடைக்கும் என்ற காரணம்,
பிரசாந்த் என்ற தேர்தல் வியூகம் நிபுணர் வகுத்துக் கொடுத்த சில வியூகங்களாலும் மிக சொற்பமானவாக்கு சதவீதத்தில் திமுக ஆட்சியைப் பிடித்தது.
எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக வாங்கிய வாக்குகளை விட திமுக வாங்கிய வாக்குகள் சதவீதத்தை ஒப்பிட்டு பார்த்தால் வித்தியாசம் வெறும் 2.7% மட்டுமே.
தற்பொழுது திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகள் ஆகிறது இந்த இரண்டு ஆண்டு இடைவேளையில் தற்பொழுது திமுக மிகப் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த வீழ்ச்சி என்பது எப்படிப்பட்டது என்றால் புதிதாக திமுகவில் சேர்ப்பவர்கள் யாரும் கிடையாது, இளைஞர்கள் தமிழக பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளில் தான் சேர்கிறார்களே தவிர திமுக பக்கம் வருவதில்லை.
குடும்பத் தலைவிகள் இளம்பெண்கள் போன்றோர் அரசியல் அதிகமாக ஈடுபடுவதில்லை, அப்படியே அவர்கள் ஈடுபாடு காட்டினாலும் பாஜக, நாம் தமிழர், பாமக போன்ற கட்சிகளில் தான் அதிகம் சேருகிறார்கள், திமுக பக்கம் வருவது இல்லை என்பதே கள நிலவரமாகிவிட்டது.
திமுக கடந்த 2021 தேர்தலில் வாங்கிய வாக்கு சதவிகிதத்தை விட அடுத்த தேர்தல் வந்தால் இன்னும் கம்மியாக தான் வாக்குகள் வாங்கும் என உளவுத்துறை மூலம் ரிப்போர்ட் முதல்வருக்கு சென்றுள்ளது.
இப்படி உளவுத்துறையின் மூலமாக முதல்வருக்கு கிடைத்த ரிப்போர்ட் முதல்வரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஏனெனில் அடுத்து வரவிருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க திமுகவை விட பிற கட்சிகளான பாஜக, அதிமுக போன்றவை மிகவும் வலுவாக இருக்கின்றன.
ஏற்கனவே களத்தில் வேலையை துவங்கி விட்டனர். இந்த கட்சிகள் களத்தில் வேலை செய்து அதற்கான தேர்தல் வாக்குகளை வாங்கி விட்டால் இது திமுகவிற்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படும்.
ஏற்கனவே கட்சியில் புதிதாக இணைபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு இப்படியே சென்றால் திமுக தங்களது வாக்கு சதவீதம் மட்டுமல்லாத கட்சி கட்டமைப்பை இழக்க நேரிடும் என்ற காரணத்தினாலே தற்போது அதிக அளவில் ஆட்களை சேர்க்க கட்சியினரை முடுக்கிவிட்டுள்ளாராம் முதல்வர் ஸ்டாலின்.
இதன் காரணமாகவே மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை காரணமாக வைத்து திமுக-வில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் 3ம் தேதி வரை "உடன்பிறப்புகளாய் இணைவோம்" என்ற முன்னெடுப்புடன் நடைபெறவுள்ள உறுப்பினர் சேர்க்கையை, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் துவங்கி வைத்தார்.
1 கோடி வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என சேர்க்கை முகாம்கள், தெருமுனைப் பிரச்சாரம், திண்ணை பிரச்சாரம் என உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்த திமுக தலைமையால் உத்தரவிடப்படுள்ளது.
கட்சி தேய்ந்து வரும் காரணத்தினால் இந்த புதிய உறுப்பினர் சேர்க்கை கட்சி வளர்ச்சிக்கு கை கொடுக்கும் என திமுக தலைமை நம்புகிறதாம் .