கடந்த அக்டோபர் மாதம் இரு குழுக்களிடையே மோதலை உருவாக்கும் விதமாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டதாக தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமனை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறை கடந்த அக்டோபர்17ம் தேதி கைது செய்தது.
கோபிநாத் என்பவர் கொடுத்த புகாரின்பேரில், அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். சினிமா துணை நடிகையும் விசிகவை சேர்ந்த ஷர்மிளா என்பவர் பிரதமர் மோடி குறித்து உண்மைக்கு புறம்பான தகவலை பரப்பியதால் அவருக்கு புரியும் மொழியில் பதில் கொடுத்தார் கல்யாண் ராமன்.
இதன் காரணமாக கல்யாண் ராமன் கைது செய்யப்பட்டு, இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி மாதம் உத்தரவு பிறப்பித்தார்.இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி அவரின் மனைவி சாந்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பின்.என்.பிரகாஷ், ஏ.ஏ. நக்கீரன் அமர்வு, குண்டர் சட்டத்தில் அடைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர், இதனையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்தார் கல்யாண ராமன், இரண்டு முறை குண்டர் சட்டத்தை எதிக்கொண்டு இருப்பதால் நிச்சயமாக அமைதியாக இருப்பார் என ஆளும் கட்சியினர் கணக்கு போட்டு காத்து இருந்தனர்.
ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்த கல்யாண ராமன் கல்யாணராமன், கிஷோர், மாரிதாஸ், சுப்பையா மற்றும் பல தேசியவாதிகளை கைது செய்வதால் தேசியவாதிகளை முடக்கிவிடலாம் என்ற கற்பனைகள் திராவிட பரிதாபங்களுக்கு இருந்தால் அதை மறந்துவிடுங்கள். 2024-2026ம் வெகுதூரத்தில் இல்லை. திராவிடத்தின் சாவுமணி 24ல் இருந்து வேகமாக அடிக்கத்துவங்கும் என ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.
சிறையில் அடைத்தால் அமைதியாவார்கள் என கணக்கிட்டு இருந்தால் கல்யாண ராமன் வந்த வேகத்தில் திராவிட அரசியலை தீவிரமாக எதிர்க்க துணிந்துவிட்டார், அதே போல் சிறையில் இருந்தே வெளியே வந்த கிஷோர், மாரிதாஸ் போன்றவர்களும் தீவிரமாக முன்பை காட்டிலும் ஆளும் திமுக அரசை எதிர்த்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மொத்தத்தில் அனைவரையும் ஒடுக்கலாம் என சிறையில் அடைத்தால் அவை அத்தனையும் வேஸ்டாக மாறியுள்ளது.
கல்யாணராமன், கிஷோர், மாரிதாஸ், சுப்பையா மற்றும் பல தேசியவாதிகளை கைது செய்வதால் தேசியவாதிகளை முடக்கிவிடலாம் என்ற கற்பனைகள் திராவிட பரிதாபங்களுக்கு இருந்தால் அதை மறந்துவிடுங்கள்.
— KalyaanBJP (@KalyaanBjp) April 6, 2022
2024-2026ம் வெகுதூரத்தில் இல்லை.
திராவிடத்தின் சாவுமணி 24ல் இருந்து வேகமாக அடிக்கத்துவங்கும்