24 special

"டெல்லி" அம்பேத்கர் சிலையின் சிறப்பையும்..! பிரதமர் மோடியின் ஆலோசனையும் "தெளிவாக" குறிப்பிட்ட பேராசிரியர்..!

Rama srinivasan and modi
Rama srinivasan and modi

மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைக்க பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் "இராம.ஸ்ரீநிவாசன்"  டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் அங்கு பல்வேறு மத்திய அமைச்சர்கள், கட்சியின் முக்கிய தலைவர்களை மரியாதை நிமித்தமாகவும் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கை விஷயமாகவும் சந்தித்து பேசினார்.


இந்த சூழலில் டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலை குறித்தும் பிரதமர் மோடியின் ஆலோசனை குறித்தும் சில தகவல்களை பகிர்ந்துள்ளார் பேராசிரியர் இராம. ஸ்ரீநிவாசன் அது பின்வருமாறு :- மிகச் சிறந்த சிந்தனையாளரை "சிந்தனை சிற்பி" என்று சொல்வார்கள். ஆனால் இங்கே நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிற படம் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சிந்தனையில் உருவான சிற்பம்.



இதில் என்ன தனித்தன்மை இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள, இந்திய வரலாற்றில் நடந்த சில தவறுகளை நாம் தெரிந்துகொண்டால்தான் பிரதமர் மோடி அவர்கள் எப்படியெல்லாம் சிந்திக்கிறார், வரலாற்று தவறுகளை எப்படி எல்லாம் சரி செய்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடியும்.டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களுக்கு இந்தியா முழுவதும் சிலைகள் இருக்கின்றன.

ஆனால் எல்லா இடத்திலும் அவர் நின்றுகொண்டிருப்பது போன்றும் கையில் அரசியல் சாசனப் புத்தகத்தை வைத்திருப்பது போன்றும் அமைக்கப்பட்டிருக்கும்.இங்கே புதுடெல்லியில் உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பன்னாட்டு மையத்தில் அம்பேத்கர் அவர்களின் சிலை வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கிறது - பிரதமர் மோடி அவர்களின் ஆலோசனைப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவிலேயே இந்த ஒரு இடத்தில் மட்டும் தான் மிகவும் பிரமாண்டமாக, கால்மீது கால் போட்டு அமர்ந்திருப்பது போல் இருக்கிறது, இந்த வடிவமைப்பே (கால்மீது கால் போட்டு அமர்ந்திருப்பதே) ஒரு மனிதனின் தன்னம்பிக்கையை, ஒரு சமுதாயத்தின் தலை நிமிர்வை குறிக்கிற ஓர் அடையாள செய்தியாக இருக்கிறது.

தாம் இதுவரை ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக மட்டும் இருந்த அம்பேத்கர் அவர்களை மிக பிரம்மாண்டமான தலைவராக, கம்பீரமாக தன் சிந்தனையின் மூலம் உருவாக்குகிறார் பிரதமர் மோடி அவர்கள்!!!இதன் மூலம் அவருடைய சிந்தனையின் சிறப்பை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. 

இதன் மூலம் இந்தியாவில் சாதி ரீதியாக உயர்வு தாழ்வு இல்லை, மரியாதை குறிய நபர்கள் யாராக இருந்தாலும் எல்லோராலும் போற்றப்பட வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லி உணர்த்துகிறார் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். புதுடெல்லியில் நீங்கள் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று ஜன்பத் சாலையில் உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பன்னாட்டு மையம் என குறிப்பிட்டுள்ளார்.