24 special

மேயருக்கு முன்னாள் டிரைவர் பண்ண அடாவடி!!! கடைசில என்னாச்சு தெரியுமா?

ARYA RAJENDRAN
ARYA RAJENDRAN

ஆர்யா ராஜேந்திரன் என்பவர் கேரளாவின்  மிகப்பெரிய குழந்தைகள் அமைப்பான பால சங்கத்தின் மாநில தலைவராக வருகிறார். மேலும் இதற்கு முன்னர் அவர்  இந்திய மாணவர் கூட்டமைப்பின் மாநில குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள  முடவன்முகல் வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக இருந்தார். தனது 23 வயதில் கொல்லம் மேயராக இவர் வெற்றி பெற்றார். அதன் பிறகு  தனது 27 வயதில் மேயராகவும் இருந்து தனது பணியை தொடர்ந்து செய்து வருகிறார். இந்தியாவின் இளைய மேயரான ஆர்யா ராஜேந்திரன், கேரளாவின் இளைய எம் எல் ஏவான சச்சின் தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் ஆயா ராஜேந்திரனுக்கு சகோதரரும் இருந்து வருகிறார். இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்டு இன்று ஒரு மேயராக இருந்து மக்களுக்கு அதிக அளவில் சேவைகளை செய்து வரும் தற்போது ஒரு அரசு பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அது ஏன் என்று விரிவாக காணலாம்!!


வாகனங்களை ஓட்டுபவர்கள் தற்போது மிகவும் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் ஓட்ட வேண்டிய கட்டாயம் தற்போது இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பஸ் போன்ற வாகனங்களை ஓட்டுபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்களை நம்பி அதிக அளவில் மக்கள் அந்த பஸ்ஸில் பயணம் செய்கின்றனர். வர்ஷினி ஓட்டும் டிரைவர் சிறிது கவனம் சிதறினாலும் கூட எதிரில் வரும் வாகனங்கள் மீது மோதி அது விபத்தில் சென்று முடிய கூடிய வகையில் அமைந்து விடுகிறது. இது போன்று தான் தற்போது பஸ் டிரைவர் செய்த காரியத்தை மேயர் ஆர்யா ராஜேந்திரன் தட்டிக் கேட்டுள்ளார். கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கேரளா அரசு அதிவிரைவு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. இந்த பஸ்ஸினை தீபு என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அன்று இரவு 11 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள பட்டம் என்ற இடத்தில் அந்த பேருந்து சென்று கொண்டு இருக்கும் பொழுது பேருந்துக்கு பின்னால் மேயர் ஆர்யா ராஜேந்திரனின் காரும் வந்துள்ளது.

அப்போது மேயர் காருக்கு வழி விடாமல் அந்த பேருந்தானது மிகவும் வளைந்து வளைந்து விபத்து ஏற்படுத்தும் வகையில் சென்று கொண்டிருந்து உள்ளது. அதன் பின் ஒரு வழியாக அரசு பேருந்தினை  முந்தி சென்று பஸ்ஸின் முன்னால் மேயரின் காரணத்தை நிறுத்தப்பட்டு வழிமறிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு காரில் இருந்து இறங்கிய மேயர் ஆர்யா ராஜேந்திரனும் அவருடைய சகோதரரும் இறங்கி பஸ் டிரைவரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.டிரைவரும் மேயர் ஆகிய இருவருமே தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அங்கு விரைந்து வந்த போலீசாரிடம் மேயர் கொடுத்த புகாரின் அடிப்படையில் டிரைவரை கைது செய்து சென்றனர். இதனைத் தொடர்ந்து ஜாமினில் வெளிவந்த டிரைவரும் தனது வேலைக்கு மேயர் ஆர்யா ராஜேந்திரன் இடையூறாக இருந்ததாகவும், தனது வேலையை சரியாக செய்ய விடவில்லை என்றும் அவர் மீது டிரைவர்  தீபு புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த புகார் ஆனது போலீசில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதைத்தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பவர் கொடுத்த புகார் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டது சாதாரண மனிதன் என்பதால் இந்த புகார் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று டிரைவர் தீபுவும் பேட்டியளித்துள்ளார்.இப்படி பெண் மேயரான  ஆர்யா ராஜேந்திரனின் காருக்கு வழி விடாமல் அரசு பஸ் போட்டிய டிரைவர் கைது செய்யப்பட்டது அந்தப் பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இது குறித்து செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.