
அரசியல் மற்றும் சினிமா என்றுமே சில நேரங்களில் ஒன்றுபட்டு செயல்படும், அதே சமயத்தில் அரசியலில் இருக்கும் சில அரசியல்வாதிகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதாக அரசியலில் நுழைந்தவர் என்று கூறப்படும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன். இவரைப் போன்றே சமூக நீதியை நிலைநாட்டவும் தலித் மக்கள் படுகின்ற துன்பங்கள் துயரங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக பல படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் பா ரஞ்சித். ஏன் இவர்கள் இரண்டு பேர் என்று பார்த்தால் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இப்படி அரசியல் மற்றும் சினிமா என இரண்டு துறைகளில் ஒருமித்த கருத்துக்களை வெவ்வேறு வழிகளில் செயல்படுத்தி வரும் இருவரது நோக்கமானது ஒரே நோக்கமாக இருக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாக கூறப்படுகிறது, அதன்படி இயக்குனராக உள்ள பா.ரஞ்சித் 2012 ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
இதனை அடுத்து மெட்ராஸ் என்னும் படத்தில் இயக்குனராக தனது சிறப்பைக் காட்டி அப்படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டாரை வைத்து கபாலி மற்றும் காலா என்று இரண்டு படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் குறிப்பிடத்தக்க வசூலை பெற்றாலும் விமர்சன ரீதியாக மக்கள் மத்தியில் பெருமளவிலான வரவேற்பை பெறவில்லை! இதனைத் தொடர்ந்து நடிகர் ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை என்று படத்தை எடுத்து முடித்தார், மேலும் நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களையும் எடுத்தார். மேலும் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர் போன்ற படங்களுக்கு தயாரிப்பாளராகவும் ரஞ்சித் இருந்துள்ளார். இப்படி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக தமிழ் திரை உலகில் வலம் வரும் ரஞ்சித் தான் எடுத்த படங்கள் ஒவ்வொன்றிலும் சமூகத்தில் உள்ள ஒரு தீண்டாமை, புறக்கணிப்பு ஆகியவற்றை அழுத்தமாக தெரிவித்து வருகிறார், அதோடு திரையுலகம் பக்கம் தன் பங்கிற்கு வேண்டிய அனைத்து முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் படிப்படியாக எடுத்து வரும் பா.ரஞ்சித் அரசியலிலும் திருமாவளவன் தலித் வர்க்கத்திற்கு எதிராக நடைபெற்று வரும் சமூக அவலங்கள் குறித்த கேள்விகளை முன் வைப்பார் தலித் மக்களின் உரிமைகளுக்காக போராடுவார் உரிமைகளுக்காக தனி குரலை முன் வைப்பார் என்று நினைத்த அனைத்தும் தற்போது பொய்யாகி இருப்பதால் கொந்தளித்து பொது மேடையில் திருமாவளவனை குறித்து சரமாரியாக விமர்சனம் செய்துள்ளார்.
அதாவது, தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரஞ்சித் பேசிய பொழுது தேர்தலில் ஏன் தனித்து நிற்க கூடாது ஏன் தனிக் குரலை முன்வைக்க கூடாது, இவ்வளவு ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் பாஜகவை தமிழகத்திற்குள் எப்படி அனுமதித்தீர்கள்? நானா அனுமதித்தேன்!! உங்களால் ஒரு சேரில் கூட நுழைய முடியவில்லையே... சேரியலில் இருந்து எத்தனை ஓட்டுகள் பாஜகவிற்கு சென்றிருக்கும், பொதுச் சமூகத்தில் தானே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதனால் பொது சமூகத்தை சீர்படுத்த வேண்டியது யாருடைய பொறுப்பு? அதனால் உங்களுடைய வேலை திட்டம் ஏன் இவ்வளவு பின் நோக்கியும் பின் தங்கியும் உள்ளது என்று யோசிங்கள்... அதை புரிந்து கொண்டு மாற்ற முயற்சி செய்யுங்கள். மேலும், சேரிகளை சரி செய்ய நீங்கள் முயற்சி எடுக்கவே வேண்டாம், சேரி நன்றாக இருக்கிறது சேரி மொத்தமும் அடிப்படையில் ஜாதியத்திற்கு எதிராகத்தான் உள்ளது, சனாதனத்திற்கும் எதிராக உள்ளது, உங்களைப் பார்த்து தான் நாங்களே கெட்டுப் போகிறோம்! அவன் குடி பெருமையை பேசுங்கள் என்று கூறினால் நாமும் பேச வேண்டுமா! என்று அரசியலில் தனது பாதையை விட்டு வழி தவறி செல்லும் திருமாவளவனனுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இயக்குனர் ரஞ்சித் ஆவேசமாக பேசியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.