24 special

ஆட்டம் ஆரம்பம்..முதல்வரிடம் பேசியது உட்பட உண்மையை வெளியில் சொல்ல ஆளுநர் மாளிகை முடிவு..!

Rn ravi and stallin
Rn ravi and stallin

தமிழகத்தில் ஊடகங்களில் ஆளும் அரசு சொல்வது மட்டுமே வெளியில் சொல்லப்படுவதாகவும், மக்களுக்கு தெரியவேண்டும் என்பதற்காக இது வரை என்ன நடந்ததி என்ற விவரத்தை வெளியில் சொல்ல ஆளுநர் மாளிகை முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.


தமிழகத்தில் நிறைவேற்றபட்ட நீட் விலக்கு மசோதா, பத்திரப்பதிவுக்கான திருத்த சட்ட மசோதா, பாரதியார் பல்கலை திருத்த சட்ட மசோதா கூட்டுறவு சங்கங்கள் இரண்டாம் திருத்த சட்ட மசோதா என, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட, 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு, கவர்னர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார்.

இதற்கான முறையான காரணம் அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாம் ஆனால் அது குறித்து அரசு எங்குமே தெரிவிப்பது இல்லை, மேலும் கடந்த முறை நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என ஆளுநர் மாளிகை தெரிவித்த பின்புதான் மக்களுக்கு விஷயம் தெரியவந்தது. இதே போல் பல விவகாரங்களை ஆளும் அரசு மூடி மறைப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

மேலும் ஆளுநரை இரண்டுமுறை சந்தித்த தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் ஏன் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்ற காரணத்தையும் ஆளுநர் விளக்கமாக தெரிவித்து விட்டாராம், இப்படி இருக்க தமிழக ஆளுநரை மாற்ற வேண்டும் என பாராளுமன்றத்தில் இந்த முறையும் திமுக எம். பி கள் கோஷம் எழுப்பியது ஆளுநரை அதிருப்தி அடைய செய்துள்ளது.

எனவே தமிழக முதல்வர் உட்பட இதுவரை ஆளுநர் மாளிகையில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து நடைபெற்ற அனைத்து இருவழி செய்திகளையும் வெளியிட ஆளுநர் மாளிகை முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் கசிய விடபட்டுள்ளன. இனி வருகின்ற நாட்களில் ஆளுநரின் ஆட்டம் அதிகமாக இருக்கும் என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசு அனுப்பி, நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு, ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறித்து, வெளிப்படையாக தெரிவிக்க, ஆளுநர் ஆலோசித்து வருவதாக வெளியான தகவலால் ஆளும் தரப்பு கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாம்.