24 special

உளவுத்துறை ரிப்போர்ட்டே உதயநிதிக்கு தான் செல்லுதாம்..! பரபரக்கவிட்ட திருச்சி சூர்யா சிவா!

Udhayanithi,surya siva
Udhayanithi,surya siva

சமுதாயத்தில் ஒருவரால் அரசியல் கட்சியில் அடுத்தடுத்த கட்டங்களை குறுகிய காலத்தை எட்டி அமைச்சராக ஒரு வருட காலத்திலே அமர முடியும் என்றால் அது நிச்சயம் தன் சொந்தக் கட்சியாக இருக்க வேண்டும். இந்த வழியிலேயே தற்போது அரசியலில் நுழைந்து இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி பெற்றுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இவர் முதல் முதலாக தமிழ் சினிமாவில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நிறுவி சில படங்களை தயாரித்து வந்தால் அதன் மூலமே சினிமா வட்டாரங்களில் அறியப்பட்டார்.


அதற்கு பிறகு ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தில் நடித்து சந்தானம் மற்றும் அவரது காமெடியால் மக்கள் மத்தியில் கவனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து தனது இரண்டு மூன்று படங்களில் சந்தானத்தை விடாமல் பிடித்துக் கொண்ட உதயநிதி ஸ்டாலின் உங்கள் தந்தையை போன்று நீங்களும் அரசியலில் நுழைவீர்களா என்று கேள்விகளுக்கு இல்லை என்றும் தனக்கு அதில் விருப்பமில்லை ஆர்வமில்லை என்ற வகையிலான பதில்களை கூறி வந்தார். ஆனால் 2017 மற்றும் 18 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்திலேயே அவ்வப்போது அரசியலில் நுழைந்து தலைகாட்ட ஆரம்பித்தார் உதயநிதி. 

அதற்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக முழுவதும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு திமுகவின் கட்சி வெற்றிக்கு துணையாக நின்றார். அதே நேரத்தில் இதே தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் நின்ற உதயநிதி ஸ்டாலின் வெற்றியும் பெற்றார். அதனை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக உதயநிதி தேர்ந்தெடுக்கப்படுவதாக சட்டமன்றத்தில் சபாநாயகர் எம் அப்பாவு அறிவிப்பை வெளியிட்டார். மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தனது தந்தையின் அமைச்சரவையிலேயே ஒரு அமைச்சராக இடம் பெற்றார். தற்போது விரைவில் அவர் துணை அமைச்சராகவும் தனது தந்தைக்குப் பிறகு கட்சியை நடத்தக்கூடிய இடத்திற்கு வர போகிறார் என்ற பேச்சுகளும் பலமாக அறிவாலய வட்டாரங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 

மேலும்,  நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பெரும்பாலான தேர்தல் வேலைகளையும் கட்சி வேலைகளையும் முன் நின்று நடத்திய உதயநிதி ஸ்டாலின் தேர்தல் முடிந்தவுடன் இளைபாறுவதற்காக பத்து நாட்கள் லண்டன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். ஆனால் அந்த சுற்று பயணத்தின் போது தமிழகத்தில் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடியது. மக்கள் தண்ணீருக்காக குடங்களை ஏந்தி மயில் கனக்க நடந்து செல்லும் அவலங்கள் ஒரு பக்கம் செய்தியாக வெளிவர மறுபக்கம் லண்டனில் சுற்றுலா பயணத்தில் உள்ள அமைச்சர் உதயநிதியின் செய்தியும் வெளியானது. இதனால் மீண்டும் விமர்சன வளையத்திற்குள் சிக்கிக்கொண்டார் உதயநிதி! 

இந்த நிலையில் பாஜக ஓபிசி பிரிவு மாநிலச் செயலாளர் சூர்யா சிவா சாதாரணமாக டக்கென்று அரசியலுக்கு வர விருப்பமில்லை விருப்பமில்லை எனை கூறிவிட்டு அரசியலுக்கு வந்து அமைச்சராகி தற்போது துணை முதல் அமைச்சராகவும் மாற உள்ளார். அதோடு தற்போது முழுசாக அவரிடம் ஆட்சியை கொடுத்தால் மட்டுமே 2026 வரக்கூடிய தேர்தலிலும் தலைமை ஏற்க முடியும். ஒருவேளை நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியை திமுக கண்டுவிட்டாலும் துணை முதலமைச்சர் ஆக உதவி பொறுப்பேற்கப்பட்டாலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இதுவரை அவர்கள் ஆடாத பல ஆட்டங்களை செயல்படுத்துவார்கள். எப்படி எந்த தொகுதியிலும் இல்லாத வகையில் மிகக் குறைந்த மக்கள் தொகையை கொண்ட ஒரு தொகுதியில் அதுவும் அவர்களின் கோட்டையாக கருதப்படுகின்ற சேப்பாக்கம் தொகுதியில் நிற்க வைத்து வெற்றி பெற்று கொள்கிறீர்கள்!

கலைஞர் கருணாநிதி கூட அடுத்த முதல்வர் மற்றும் தலைவர் யார் என்று கேட்கும் போது தனது மகனை கூறவில்லை பொறுத்திரு என்று தான் கூறினார். ஆனால் தற்பொழுது முதல்வர் மு க ஸ்டாலின் உளவுத்துறை ரிப்போர்ட்டையே தனது மகனிடம் கொடுத்து தான் சரி பார்க்க சொல்கிறார்! என்று பரபரப்பான தகவலை கூறியுள்ளார் அதோடு அடிப்படையாக சொந்த முன்னேற்றத்தில் அரசியலில் முன்னேற வேண்டும் அதை விடுத்து தன் சொந்த கட்சி என்பதற்காக அடுத்தடுத்த படைகளை ஒருவர் நோக்கி சென்றால் மக்களுக்காக எப்படி அவர் உழைப்பார் என்றார் கேள்வியையும் அவர் முன் வைத்துள்ளார். திருச்சி சூர்யா சிவா கூறிய இந்த விவகாரம் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது .