24 special

ஆளுநர் பற்ற வைத்த நெருப்பு..! திமுக அரசை நெருங்கும் மிகப்பெரிய சுனாமி..!

mk stalin, rn ravi
mk stalin, rn ravi

தமிழக ஆளுநர் ஆர் என் ரவிக்கும் தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுகவிற்கும் எப்பொழுதுமே வாக்குவாதம் வருவது குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக நீட் தேர்வு மசோதாவில் ஆளுநர் கையெழுத்திடாமல் இருந்தது திமுகவிற்கு பெரிய ஏமாற்றத்தை  ஏற்படுத்தியது, மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆளுநர் ரவி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதால் அவர் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியாது என்று தெரிவித்தார். 


பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக ஆளுநரை எதிர்த்து கடிதம் எழுதியது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளானது, மேலும் எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் ஆளுநருக்கும் தமிழக முதலமைச்சர்  ஸ்டாலின் முதற்கொண்டு திமுகவில் உள்ள அனைத்து தலைவர்கள் வரை தற்போது ஆளுநர்  என்றாலே பயப்படும் அளவிற்கு அவரது நடவடிக்கை மற்றும் பேச்சுக்கள் அமைந்தது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

இப்படி ஆளுநருக்கும் திமுகவிற்கும் இடையே ஆன மோதல் பல வருடங்களாக நீடித்து வரும் நிலையில் ஆளுநர் கூறும் கருத்துக்கள் அனைத்தும் திமுக அரசுக்கு பின்னடைவைதான் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழக ஆளுநர் ஆர் என் ரவி திமுகவிற்கு அடுத்த பேரிடியை இறக்கியுள்ளார். அதாவது தற்போது தமிழகத்தில் பரபரப்பாக தயாராகி வரும் நிகழ்ச்சி என்றால் அது தேவர் குருபூஜை நிகழ்ச்சி, அதற்காக அனைத்து கட்சி தலைவர்களும் பரபரப்பாக குருபூஜை வேலைகளில் இறங்கியுள்ளனர். அந்த வகையில் ஆளுநர்  ஆர்.என்.ரவி தேவர் குருபூஜையை  வைத்து திமுகவிற்கு எதிராக பேசியது தான் தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. 

அதாவது திருச்சியில் மருது சகோதரர்கள் குருபூஜை விழாவில் ஆளுநர் ரவி கலந்துகொண்டு உரையாற்றினார், அப்போது சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவில் இருந்து அகற்றுவதற்கு மாநில அரசு முயற்சிப்பதாகவும் மருது சகோதரர்கள் குருபூஜையை கொண்டாடக்கூடாது என்று மாநில அரசு நினைத்துக் கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டி ஆளுநர் பேசியது தற்போது திமுகவிற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சுதந்திர போராட்ட வீரர்கள் அரசியல் தலைவர்களால் ஜாதி கட்சிகளாக பிரிக்கப்பட்டு பார்க்கப்படுகின்றனர் மேலும் இது மன வருத்தத்தை அளிப்பதாகவும் தெரிவித்தார். 

இது பள்ளியில் படிக்கும் மாணவர்களை அதிகளவில் பாதிக்கும் வகையில் அமைகிறது என்றும் மாணவர்கள் ஜாதிக்கயிறு என்பதை அணிந்து தற்போது சிக்கிக் கொண்டிருக்கின்றனர் என்று அவர் பேசியது தற்போது அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியது.தொடர்ந்து பேசிய ஆளுநர் அண்மையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நாங்கள் ஆன்மீகத்தை எதிர்க்கவில்லை ஆரியத்தை தான் எதிர்த்தோம் என்று கூறியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக புண்ணிய பூமியாக விளங்கும் தமிழ்நாட்டில் ஆரியம் திராவிடம் என்று எதுவும் கிடையாது என்றும் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய கால்டுவெல் தான் திராவிடம் என்று பிரித்துக் கூறினார் என்று கூறியது முக்கியமாக திமுக கட்சியில் உள்ளவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

மேலும் தேவர் குரு பூஜையில் கலந்து கொள்வதற்கு திமுகவிற்கு மனம் வரவில்லை என்று ஆளுநர் கூறியது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்ணாதுரை மற்றும் முத்துராமலிங்க தேவர் விவகாரத்தை பற்றி பேசியது திமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஆளுநர் பேசியதும் முக்குலத்தோர் சமுதாயத்தினர் மத்தியில் திமுகவிற்கு பின்னடைவை தந்துள்ளது எனவே அண்ணாமலையை தொடர்ந்து தற்போது தமிழக ஆளுநர் ஆர்.என் .ரவியும் திமுகவிற்கு அடிக்கு மேல் அடியை தருவது அரசியலில் பேசு பொருளாகி உள்ளது. சரியாக சமயம் பார்த்து முக்குலத்தோர் சமுதாயத்தை திமுக மதிக்கவில்லை என்கிற தொனியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது கண்டிப்பாக வினையை ஏற்படுத்தும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.