நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் அயலான் இந்த படம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தயாரித்து வெளியாக இருந்த நிலையில் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முழுமையாக முடியாத காரணத்தால் படம் வெளியிட பிரச்னை ஏற்பட்ட்டது. எல்லாம் முடிந்து அந்த படத்தில் உள்ள ஏலியனுக்கு வாய்ஸ் கொடுத்தது நடிகர் சித்தார்த் என படக்குழு தெரிவித்ததை அடுத்து படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதற்கிடையில் இன்று அந்த படத்திற்கு முட்டுக்கட்டை போட்டது சென்னை உயர்நீதிமன்றம் அதிரறி தீர்ப்பு வழங்கியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் யோகிபாபு நடிப்பில் ஏலியனை மையமாக கொண்டு இந்தியாவில் முதன் முறையாக உருவான படம் அயலான் இந்த படத்திற்கு இய்குனார் ரவிக்குமார் இயக்கத்தில் 24 ஏம் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவான படம் பண பிரச்சனை காரணமாக பத்தியில் தயாரிப்பு நிறுவனம் கேகேஆர் ஸ்டியோவுக்கு கை மாறியது . மேலும் படம் முழுவதுமாக முடித்து வெளியாக இருந்த நேரத்தில் படம் மீது வழக்கு விழுந்தது. அதாவது, டி.எஸ்.ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து 24 AM ஸ்டுடியோஸ் ரூ.10 கோடி கடனாக பெற்றிருந்தது. கேஜேஆர் ஸ்டுடியோ அந்த கடனை ஏற்று ரூ.3 கோடி மட்டும் திருப்பி செலுத்தியதாக தெரிகிறது. இதனால் மீதமுள்ள தொகையையும் கொடுக்க வேண்டும் என டி.எஸ்.ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கில் சிவகார்த்திகேயனின் அயலான் படம் மற்றும் வைபவ் நடித்து வெளியாகவுள்ள ஆலம்பனா போன்ற இரு படமும் 4 வாரங்களுக்கு வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அடுத்த விசாரணையை ஜனவரி 9ம் தேதிக்கு தள்ளிவைத்தது. ஏற்கனவே 5 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் அயலான் படத்துக்கு தற்போது மேலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் உட்பட மொத்த படக்குழுவினரும் டென்ஷனாக உள்ளனர். சிவகார்திகேயனின் ரசிகர்களும் சோகத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, சிவகார்த்திகேயன் இசையமைப்பாளர் இமான் வாழ்க்கையில் விளையாடியதன் காரணமாக தயாரிப்பாளர்கள் சிவகார்த்திகேயன் கொண்டு படத்தை இயக்க ஆலோசித்து வேண்டாம் என ஓரம் சென்றனர். இந்நிலையில், தற்போது மேலும் அவரது படத்திற்கு தடை நீடிப்பதால் சிவகார்த்திகேயன் மார்க்கெட் குறைந்து வருவதால் படம் வெளியானாலும் லாபமாக எவ்வளவு தொகை ஈட்டும் என தெரியாத சூழல் நிலவுவதாக புலம்ப ஆரம்பித்துள்ளது படக்குழு. இப்படி திரும்பும் பக்கம் எல்லாம் சிவகார்த்திகேயனுக்கு அடி மேல் அடி விழுந்து வருவதாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசப்படுகிறது.