
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது ஒரு மாபெரும் அரசியல் போர்க்களமாக மாறியுள்ளது. சமீப காலமாக வெளியாகி வரும் கருத்துக்கணிப்புகள், அரசியல் ஆய்வுகள் மற்றும் கட்சி உள்சர்வேகள் அனைத்தும் ஒரே விஷயத்தை சுட்டிக்காட்டுகின்றன – இந்த தேர்தலில் திமுகவுக்கும், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கும்தான் என் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் திமுகவின் ஓட்டுக்களை சிதறச்செய்வது விஜய் தான் என்கிறார்கள். .
தற்போதைய சூழலில், திமுகவின் வாக்கு வங்கியில் மிகப் பெரிய உடைப்பை ஏற்படுத்தும் சக்தியாக விஜய் உருவெடுத்துள்ளார். இளைஞர்கள், முதன்முறை வாக்காளர்கள், பெண்கள், மேலும் ஆளும் கட்சி மீது அதிருப்தி கொண்ட நகர்ப்புற வாக்காளர்கள் என திமுகவின் பாரம்பரிய ஆதரவு தளமே தவெகவின் இலக்காக மாறியுள்ளது. இதன் தாக்கம் திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கும் விரிந்து, அவர்களது வாக்குகளும் சிதறத் தொடங்கியுள்ளன. காங்கிரஸ் கட்சியும் திமுகவை விட்டு வெளியேற காத்து கொண்டிருக்கிறது.
இதன் விளைவாக, திமுகவின் வாக்குகள் ஒருபுறம் விஜய்யிடம் பறிகொடுக்கப்படுவதும், மறுபுறம் கூட்டணிக்குள் பலவீனம் உருவாவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகியுள்ளது. இதனால் திமுகவும், தவெகவும் தனித்தனியாக பெரும்பான்மைக்கு தேவையான ‘மேஜிக் நம்பர்’-ஐ எட்டுவது என்பது எட்டா கனியே
இந்த இடைவெளியை பயன்படுத்திக் கொள்ளும் நிலையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னேறி செல்கிறது. . ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பல ஏற்றத் தாழ்வுகளை சந்தித்த அதிமுக, இப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் தனது பாரம்பரிய வாக்கு வங்கியை பெரும்பாலும் தக்க வைத்திருப்பதாக அரசியல் கணிப்புகள் கூறுகின்றன. திமுக–தவெக மோதலில் வாக்குகள் சிதறும் போது, அமைதியாகவும் திட்டமிட்ட முறையிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்லும். மேலும் திமுகவின் பாஜக எதிர்ப்பு நிலை தற்போது இந்துக்களை ஒன்றிணைத்து வருகிறது. இந்துக்களுக்கு உள்ள கட்சி பாஜக என்ற பிம்பத்தை மக்களிடையே விதைத்துள்ளது. இது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பலமாகவே பார்க்கப்படுகிறது.
முத்தலாக் ஒழிப்பு முறையால் இஸ்லாமிய பெண்களுக்கும் பா.ஜ. க மீது அதிருப்தி இல்லை , திருப்பரங்குன்றம் விவகாரம் இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் இடையே பகையை ஊட்டும் விதமாக திமுக செயல்பட்டுள்ளது என்பதை அப்பகுதி இஸ்லாமியர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.இந்த முறை இது பிரதிபலிக்கும் ஆளும் திமுக மீது நிலவும் அதிருப்தி அலை, விஜய்யால் ஏற்படும் வாக்கு உடைப்பு, மேலும் அதிமுகவின் ஒற்றுமையான வாக்குகள் – இந்த மூன்றும் சேரும்போது, பெரும்பான்மையை பிடித்து தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உருவாகும் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.
இந்த தேர்தலில் விஜய் ஒரு ‘கேம் சேஞ்சர்’ என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் சில தொகுதிகளில் மட்டுமே தாக்கம் செலுத்தும் தலைவராக இல்லாமல், மாநிலம் முழுவதும் குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தை பெறக்கூடிய சக்தியாக மாறியுள்ளார்.20% வாக்குகள் பெற வாய்ப்புள்ளது. அது உண்மையானால், திமுகவும் அதிமுகவும் தங்களின் பாரம்பரிய கோட்டைகளை பாதுகாப்பதில் கடும் சவாலை சந்திக்க நேரிடும். ஆனால், அந்த வாக்குகள் ஆட்சியாக மாறுமா என்பதே மிகப் பெரிய கேள்விக்குறி.
அரசியல் சதுரங்கத்தில் எப்போதும் போல, இரண்டு சக்திகள் தீவிரமாக மோதும் போது மூன்றாவது சக்தி பலன் அடைவது இயல்பு. திமுக–தவெக மோதலை அதிமுக தனது வாய்ப்பாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. 2026 தேர்தல் தமிழக அரசியலில் இதுவரை காணாத அளவிலான மும்முனை போட்டியின் உச்சகட்டமாக மாறியுள்ளது.
இறுதியாக, 2026 தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான போட்டி மட்டுமல்ல; அது தமிழக அரசியலில் புதிய அரசியல் துருவத்தை உருவாக்கும் தேர்தலாகவும் பார்க்கப்படுகிறது.
