இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி நடிகர் விஜய்யின் அடுத்த படமான லியோ விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இப்படத்தை பான் இந்தியா படமாக கொண்டு சேர்க்கவேண்டும் என படக்குழு தீவிரமாக உழைத்து வருகிறது! படத்தின் இறுதி கட்ட வேலைகள் முடிந்துள்ள நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் காட்சிகளை முடித்துள்ளதாக படக்குழு தரப்பில் தகவல்கள் கசிந்துள்ளன!
விஜய் நடித்துள்ள லியோ சிங்கிள் முதல் பாடல் விஜய் பிறந்தநாள் அன்று விமர்சையாக வெளியிடப்பட்டது, வெளியான பாடலில் வேறு விஜய் தம்மடிக்கும், தண்ணியடிக்கும் வரிகளை பாடியதால் வேறு பாடலுக்கே பல சர்ச்சைகள் எழுந்தது. லியோ படத்தின் ஓடிடி மற்றும் ஆடியோ வெளிமாநில மற்றும் வெளிநாட்டு உரிமைகள் ஏற்கனவே விற்கப்பட்ட நிலையில் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் வெளியீட்டு உரிமை மட்டும்தான் மிச்சம் உள்ளது என தகவல்கள் கிடைத்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக வேறு தமிழ் திரையுலகில் பெரும்பாலான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோகம் செய்துவந்த நிலையில் தற்போது விஜய் தன் படங்களை அந்த நிறுவனத்திடம் கொடுக்க விரும்பவில்லை என்ற தகவல்களும் கிடைத்துள்ளன. இதே கதை தான் விஜயின் வாரிசு படத்திலும் நடந்தது. வாரிசு படத்தை விநியோக உரிமை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு கொடுக்காமலே தயாரிப்பாளர் தில் ராஜு அந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் லலித்துக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. பின் லலித்திடம் வசீகரமாக பேசி ரெட் ஜெயண்ட் மூவிஸ் சென்னை கோவை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு இடங்களில் இப்படத்தை வாங்கி வெளியிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் தனது படங்களை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு கொடுக்காத காரணத்தை சில அரசியல் விமர்சகர்களிடம் விசாரித்த போது வேறு மாதிரியான காரணங்களை கூறினார்கள், விஜய் மக்கள் இயக்கம் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு அரசு தரப்பில் சமீப காலமாக அனுமதி தராமல் இழுத்தடித்து வந்த நிலையில் சில நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு தடையாக இருந்த காரணத்தினால் இந்த முடிவை விஜய் எடுத்துள்ளார் எனவும் சினிமா வட்டாரங்களிலேயே பரவலான செய்தி இருந்து வருவதாக கூறினார்கள். வாரிசு திரைப்படம் வெளியான போது ஏற்பட்ட அரசியல் பிரச்சனை தற்போது லியோ படத்திலும் நடந்து விடக்கூடாது என்ற காரணத்தினால் விஜய் தன் எந்த படங்களையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வசம் தயாரிப்பதற்கு கொடுக்க விரும்பவில்லை எனவும் கூறுகின்றனர்.
தற்போது விஜய் அரசியலில் களமிறங்க உள்ளார் என்ற பேச்சும் தீவிரமாக அடிபட்டு வரும் நிலையில் தனது படத்தின் வெளியீட்டில் கண்டிப்பாக அரசியல் தலையீடு இருக்கலாம் என்ற காரணத்தினால் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என விஜய் தரப்பு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
இறுதியாக லியோ திரைப்படத்தை யார் வெளியிடப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் லியோ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை 100 கோடி என லலித் கூறியுள்ளார். ஆனால் ஏஜிஎஸ் நிறுவனம் 80 கோடிக்கு படத்தை வாங்க உள்ளதாக பேசப்பட்டு வருகிறது. எப்படியும் தளபதி 68 படத்தை ரெட் ஜெயன்ட் மூவி தயாரிப்பதற்கு வாய்ப்பே இல்லை எனவும் மீறி இந்த முறை திரையரங்கு ஒதுக்கீடு, ரசிகர் மன்ற சிறப்பு அனுமதி காட்சி போன்ற விவகாரங்களில் எப்படி அரசியல் தலையீடு இருக்கும் பட்சத்தில் அதனை வேறு விதமாக நாம் சந்தித்துக்கொள்ளலாம் என விஜய் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் தனது படத்தில் 'ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்கமாட்டேன்' என கூறும் வசனம் போல அரசியல் பாதைன்னு முடிவு பண்ணியாச்சு இனி இறங்கி பார்த்துட வேண்டியதுதான் என தயாராக இருக்கிறார் போல!