24 special

சின்னப்பய இப்படி ஓடவிடுறானே ...! அண்ணாமலையை திட்டிக்கொண்டே டெல்லி ஓடிய அமைச்சர் துரைமுருகன்...!

Annamalai, duraimurugan
Annamalai, duraimurugan

கர்நாடக மாநில அரசு மேகதாது அணை கட்டுவதற்கான நிதியை ஒதுக்கி அதன் பணிகளில் ஈடுபட திட்டமிட்டு வருகிறது, இந்த நிலையில் இதற்கான எந்த ஒரு பெரிய அளவிலான எதிர்ப்பையும் தமிழகம் அரசு தரப்பிலிருந்து முதல்வர் ஸ்டாலின் முன்வைக்கவில்லை என பாஜக தரப்பில் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன.


இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி கர்நாடக அரசு காவிரியில் இருந்து மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் அதன்படி ஜூலை மாதத்திற்கு தமிழகத்திற்கு 34 டிஎம்சி அளவு தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் ஆனால் இந்த மாதம் காவிரியில் இருந்து தண்ணீருக்கு திறந்து விட வாய்ப்பு இல்லை என்று கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் தெரிவித்தது பெரும் சர்ச்சையாக எழுந்தது. காவிரியில் இருந்து வரும் நீரையே பெரிதும் நம்பி இருந்த விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது இந்த அறிவிப்பு. 

இந்த அறிவிப்பிற்கு தமிழகத்தில் பல அரசியல் தலைவர்கள் விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்களை தெரிவித்தனர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எதிர்ப்பையும் தமிழக அரசு இதில் நிச்சயம் ஒரு தீர்வையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையில் பல வருடங்களாகவே காவிரி நதிநீர் பிரச்சனை நீடித்து வருகிறது பிரச்சினையை போக்குவதற்காகவே நிரந்தர தீர்வு காணும் வகையில் காவேரி நதிநீர் மேலாண்மை வாரியத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமைத்தார், கர்நாடகா காங்கிரஸ் மேகதாது அணையை கட்டுவோம் என்றும் தேர்தல் வாக்குறுதியிலும் குறிப்பிட்டு தற்போது தமிழகத்திற்கு இந்த மாதம் தண்ணீர் தர முடியாது என்றும் கூறியுள்ளனர். 

இந்நிலையில் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுவதாக கூறப்பட்டது! கூட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் செல்லலாம் ஆனால் அவர் திரும்பி வரும்போது அவரை கண்டித்து பாஜக தொண்டர்கள் அனைவரும் வீட்டின் முன்பு, வீதி மற்றும் விமான நிலையத்திற்கு வெளியிலும் நிற்போம் மேலும் கருப்பு பலூன் அவருக்கு எதிராக பறக்க விடுவோம். திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிகள் இது தொடர்பாக என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டனர்?  என்றும் அண்ணாமலை கடும் கோபத்தில் திமுக அரசை கண்டித்தார். 

இப்படி காவிரி நதிநீர் பிரச்சனையை அண்ணாமலை தீவிரமாக தன் கையில் எடுத்தது பாஜகவிற்கு சாதகமாக முடியும், வரும் தேர்தலில் இது நமக்கு அரசியல் ரீதியாக பின்னடைவாக அமையும் என அறிவாலய வட்டாரங்கள் பதறிய காரணத்தால் அடுத்த நாளே காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து எழுந்த கண்டனங்களால் தமிழக முதல்வர் ஸ்டாலினே  நீர்வளத் துறை அமைச்சர் துறைமுகம் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் அதற்கு பிறகு நீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை பெற தேவையான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டம் அனைத்தும் முறியடிக்கப்படும் அதனை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து நீர்வளத்துறை செயலாளர் சக்சேனா காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கு தமிழக அரசின் சார்பாக கடிதத்தையும் எழுதினார் அதில் ஒவ்வொரு மாதமும் வரவேண்டிய நதிநீர் அளவை இந்த மாதமும் திறக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் நேற்று டெல்லி பயணமானார், இந்நிலையில் இன்றைய தினம் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் சிகாவத்தை சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, எங்கே அண்ணாமலை காவிரி நதிநீர் பிரச்சினை மற்றும் மேகதாது அணை விஷயத்தில் தமிழர்கள் மத்தியில் பாஜகவிற்கு பெயர் வாங்கி விடுவாரோ என பயந்து அதனாலேயே திமுக முந்திக்கொண்டு துரைமுருகனை டெல்லிக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.