24 special

மொத்த கதையும் வெளிவந்தது திமுகவை மிரட்டும் காங்கிரஸ் ராகுல் விஜய் ரகசிய மூவ் அதிரும் அறிவாலயம்

MKSTALIN,RAHULGANDHI
MKSTALIN,RAHULGANDHI

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் நெருங்க நெருங்க, திராவிட அரசியலின் அசைக்க முடியாத சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளத் துடிக்கும் திமுகவுக்கும், தேசிய அளவில் இழந்த பெருமையை தமிழக மண்ணில் மீட்டெடுக்கத் துடிக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான மோதல் இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த காலங்களில் நிலவிய 'கூட்டணி தர்மம்' என்ற மெல்லிய திரை இப்போது முழுமையாக விலகி, அதிகாரப் பசிக்கான நிழல் யுத்தம் தெருச்சண்டையாக மாறத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, சமீபகாலமாக ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் சில அரசியல் நகர்வுகள், அறிவாலயத்தின் அதிகார மையத்தையே ஆட்டம் காணச் செய்துள்ளன. 


சமீபத்தில் ராகுல் காந்தி நீலகிரி மற்றும் கூடலூர் பகுதிக்கு வந்திருந்தபோது, முதல்வர் ஸ்டாலினைச் சந்திப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தச் சந்திப்பு நிகழவில்லை.ராகுல் காந்தி, தமிழக முதல்வரைச் சந்திக்காமல் ‘டிஸ்டன்ஸ்’ மெயின்டைன் செய்வது அறிவாலய வட்டாரத்தில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்  ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரிய சில நிர்வாகிகள், நடிகர் விஜய்யின் டீமுடன் ‘டச்சில்’ இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.மிரட்டல் வியூகம்: "32 முதல் 40 தொகுதிகள் மற்றும் அமைச்சரவையில் பங்கு" என்ற காங்கிரஸின் டிமாண்டிற்கு திமுக பணியவில்லை என்றால், ராகுல் காந்தி தனது ஆதரவை விஜய்க்குத் திருப்பத் தயாராகிவிட்டாரோ என்ற அச்சம் திமுகவிடம் உள்ளது.

"காங்கிரஸ் என்பது ஒரு சுமை அவர்கள் ஒற்றை இலக்க இடங்களில் நின்றாலே போதும்" என திமுக மாவட்டச் செயலாளர்கள் வெளிப்படையாகப் பேசுகின்றனர்.காங்கிரஸ் இப்போது வெறும் 'சீட்'களுக்காக மட்டும் கெஞ்சவில்லை. "நாங்கள் ஒரு தொண்டு நிறுவனம் (NGO) அல்ல, அரசியல் கட்சி; எங்களுக்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும்" என மாணிக்கம் தாகூர் போன்ற எம்பிக்கள் பகிரங்கமாக முழங்குகின்றனர். அதுமட்டுமில்லாமல் டெல்லி கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகக் கருத்து கேட்ட ராகுல் காந்தி, "ஆட்சியில் பங்கு" என்ற கோரிக்கையில் உறுதியாக இருக்க அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. கூட்டத்திற்குப் பின் வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையில் எங்குமே 'திமுக' என்ற பெயர் இடம்பெறாமல், "தமிழக மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற காங்கிரஸ் முக்கிய பங்காற்றும்" என்று மட்டும் குறிப்பிட்டிருப்பது, திமுகவுடனான உறவில் ஏற்பட்டுள்ள கடும் விரிசலை உறுதிப்படுத்துகிறது

அதுமட்டுமில்லாமால் டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் ராகுல் காந்தியிடம் ஒரு உண்மையைப் போட்டு உடைத்துள்ளனர். "திமுகவின் பிடியில் இருந்து காங்கிரஸை மீட்க வேண்டும்; செல்வப்பெருந்தகை ஒரு கட்சித் தலைவராகச் செயல்படாமல், திமுகவின் ஊதுகுழலாகச் செயல்படுகிறார்" என்பதே அவர்களின் பிரதான குற்றச்சாட்டு. "திராவிட மாடல் ஆட்சியும், காமராஜர் ஆட்சியும் ஒன்றுதான்" என்று செல்வப்பெருந்தகை பேசியது, காங்கிரஸ் தொண்டர்களின் ரத்தத்தைக் கொதிக்கச் செய்துள்ளது. தங்களின் தனித்துவத்தை இழந்து, திமுகவின் வெற்றிக்காக மட்டும் உழைக்கும் ஒரு 'கூலிப் படையாக' காங்கிரஸ் மாறிவிடுமோ என்ற அச்சம் தொண்டர்களிடையே பரவியுள்ளது.

மேலும் காங்கிரசின் இந்த மிரட்டலுக்குப் பணிந்து 3 அமைச்சரவை இடங்களை விட்டுக்கொடுக்குமா? அல்லது ராகுல் காந்தி "விஜய் - காங்கிரஸ்" என்ற புதிய கூட்டணிக்கு திமுக  அச்சாரம் போடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.