
உலகம் இன்று மூன்றாம் உலகப்போரின் விளிம்பில் நின்று நடுங்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் பிடிவாதமும், ரஷ்யா-சீனாவின் ஆக்ரோஷமும், ஈரானின் ஆவேசமும் உலக வரைபடத்தையே மாற்றத் துடிக்கின்றன. இந்த வல்லரசு நாடுகள் தங்களின் 'ஹைட்ரஜன் குண்டுகள்' மற்றும் அதிநவீன ஆயுதங்களை காட்டி மிரட்டிக்கொண்டிருக்கும் வேளையில், ஒட்டுமொத்த உலகமும் அமைதிக்காகத் திரும்பிப் பார்ப்பது பாரத தேசத்தை நோக்கித்தான்!
டாலரை வைத்து உலக நாடுகளை மிரட்டும் அமெரிக்காவின் போக்கு இனி செல்லாது என்பதை இந்தியா உரக்கச் சொல்லத் தொடங்கியுள்ளது. ஒரு காலத்தில் அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தால் நாடுகள் அஞ்சின. ஆனால் இன்று, அமெரிக்காவையே எதிர்த்து நின்று, தனது நாட்டின் நலனுக்காக ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கியும், ஈரானுடன் உறவு பாராட்டியும் வரும் இந்தியாவின் துணிச்சல் உலக நாடுகளை வியக்க வைத்துள்ளது.
அமெரிக்கா தனது டாலரை ஒரு போராயுதமாகப் பயன்படுத்துகிறது. ஆனால், இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியா இப்போது 'ரூபாய் வர்த்தகத்தை' (Rupee Trade) உலக நாடுகளிடையே முன்னெடுத்துள்ளது.டாலருக்கு அடிபணியாமல், ரஷியா முதல் அமீரகம் வரை பல நாடுகளுடன் சொந்த கரன்சியில் வர்த்தகம் செய்து, அமெரிக்காவின் பொருளாதாரச் சுவரை இந்தியா தகர்த்து வருகிறது.அமெரிக்கா மற்ற நாடுகளைப் புறக்கணிக்க நினைத்தால், உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து அமெரிக்காவைப் புறக்கணிக்கும் நிலையை இந்தியா தலைமை தாங்கி உருவாக்கி வருகிறது.
ரஷ்யா மற்றும் வடகொரியாவிடம் இருக்கும் கடல் அடியில் வெடிக்கும் ஹைட்ரஜன் குண்டுகள் உலகையே சுனாமி போலத் தாக்கும் வல்லமை கொண்டவை. இத்தகைய பேரழிவு ஆயுதங்கள் ஒருபுறம், அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் மறுபுறம் என உலகம் போர்க்களமாக மாறினாலும், இந்தியா தனது ராணுவ வலிமையையும் ராஜதந்திரத்தையும் சரியாகப் பயன்படுத்தி வருகிறது.
"ஹிட்லர்களுக்கு ஸ்டாலின்கள் இருப்பது போல, டிரம்ப்புகளுக்கு புதின்கள் இருப்பது போல", இன்று உலகை ஆட்டிப்படைக்கும் சக்திகளுக்கு இணையாக, அமைதியையும் நீதியையும் நிலைநாட்ட நரேந்திர மோடியின் தலைமையிலான பாரதம் ஒரு விஸ்வரூப சக்தியாக எழுந்து நின்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் ஆயுதப் போட்டியில் குதித்தாலும், இந்திய ராணுவம் இன்று எவருக்கும் சளைத்தது அல்ல என்பதை நிரூபித்துள்ளது.
இமயமலையின் உறைபனி முதல் இந்தியப் பெருங்கடலின் ஆழம் வரை எதனையும் எதிர்கொள்ளும் நவீன ஏவுகணைகள் (Agni Series), ஒலியின் வேகத்தை விட வேகமாகச் செல்லும் பிரமோஸ் (Brahmos) ஏவுகணைகள் இந்தியாவின் பாதுகாப்புக் கேடயங்கள்.தற்சார்பு இந்தியா ஒரு காலத்தில் ஆயுதங்களுக்காக மற்ற நாடுகளை எதிர்பார்த்திருந்த இந்தியா, இன்று உள்நாட்டிலேயே விமானம் தாங்கிக் கப்பல்களையும் (INS Vikrant), தேஜஸ்போர் விமானங்களையும் தயாரித்து உலகை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ராணுவத்தளவாடங்கள் 90 நாடுகளுக்கும் மேல் இந்தியா ஏற்றுமதி செய்கிறது.
உலகின் எந்த ஒரு நாடும் செய்யத் துணியாத ஒரு அசாத்திய சாதனையை இந்தியா இன்று செய்து வருகிறது.ஒருபுறம் அமெரிக்காவுடன் 'குவாட்' (QUAD) போன்ற அமைப்புகள் மூலம் மிக நெருக்கமான பாதுகாப்பு உறவைப் பேணுகிறது. அதே நேரத்தில், மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தைப் பொருட்படுத்தாமல், ரஷ்யாவிடம் இருந்து மலிவான விலையில் கச்சா எண்ணெய் வாங்கியும், அதிநவீன S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பெற்றும் தனது நீண்ட கால நட்பை உறுதிப்படுத்துகிறது. எல்லைப் பிரச்சனைகள் இருந்தாலும், சீனாவுடன் பொருளாதார ரீதியாகவும், பிரிக்ஸ் (BRICS) நாடுகள் வழியாகவும் ஒரு நிலையான உறவை மெச்சத்தக்க வகையில் கையாண்டு வருகிறது. இந்திய பிரதமர்உலகத்தில் எங்கு சென்றாலும் சிவப்பு கம்பள வரவேற்பு, உலகத் தலைவர்களின் கட்டித் தழுவல் என மோடியின் வருகை ஒரு திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. உலகம் போற்றும் பாரதம் மோடியின் தலைமையில்
