தமிழகத்தில் இதுவரை திமுக அதிமுக என்ற இரு பெரும் கட்சிகளே மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த நிலையில் தற்போது பாஜகவின் வளர்ச்சி என்பது தற்பொழுது எந்த கட்சியினராலும் எதிர்பாராத வகையில் அமைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் தனது ஆளும் திறனை திமுக மற்றும் அதிமுக இழந்து வருவதாக கூறப்படுகிறது! முன்னதாக அதிமுக பாஜக கூட்டணியில் இருந்த பொழுது திமுக, தேசிய அளவில் பாஜகவை எதிர்ப்பதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட 26 கட்சிகள் ஒன்றிணைந்து அமைத்த எதிர்க்கட்சிகள் கூட்டணியான INDI கூட்டணியில் இணைந்தது மட்டுமின்றி பாஜக இனி மத்தியிலும் சரி எங்கேயுமே பாஜக ஆட்சியை அமைக்க விடக்கூடாது பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு முக்கிய நடவடிக்கைகளில் INDI கூட்டணி ஈடுபட்டு வருகிறது.
அதன்படியாக இதன் முதல் மூன்று கூட்டங்கள் நடைபெற்றது அதில் திமுகவும் கலந்து கொண்டது ஆனால் ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிந்த பிறகு இதன் நான்காவது கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் திடீரென அந்த கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. ஏனென்றால் ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகளில் மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்தது இதற்கு முக்கிய காரணம் திமுக என்று பேசப்பட்டதால், திமுகவை கூட்டணியில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும் என்பதை அதே கூட்டணியில் இருந்து மற்ற மிக முக்கிய கட்சிகள் தீர்மானமாக தெரிவித்து இக்கூட்டணியின் நான்காவது கூட்டத்தை புறக்கணித்தாலே INDI கூட்டணியில் நான்காவது கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
அதே சமயத்தில் திமுக தமிழகத்தில் ஆளும் காலத்தில் பல எதிர்ப்புகளையும் அதிருப்திகளையும் பெற்று வருகிறது தொடக்கத்திலிருந்து சரிவுகளை பெற்று வரும் திமுக இனி 2024 தேர்தலில் எப்படி அதிக அளவில் எம் பிகளை கொண்டுவரப்போகிறது என்பதே கேள்விக்குறியாக உள்ள நிலையில் திமுகவின் கூட்டணியில் உள்ள மற்ற சில கட்சிகள் வேறு கட்சிக்கு தாவலாம் என யோசனையில் இருந்த பொழுது அதிமுகவும் பாஜகவும் கூட்டணி முறித்துக் கொண்டது திமுக கூட்டணி கட்சிகளுக்கு இது புதிய வாய்ப்பாக அமைந்தது இதனால் திமுகவின் கூட்டணி கட்சிகள் அதிமுகவில் இணைவதற்கான வேலைகளில் இறங்கி வருவதாகவும் ரகசிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதே கருத்தில் உடன்பட்டு இருக்கும் தமிழக காங்கிரசும் திமுகவின் கூட்டணியிலிருந்து விலகினால் மட்டுமே தமிழகத்தில் ஒரு நல்ல அதிகாரத்தில் இருக்க முடியும் ஏனென்றால் தேசிய அளவில் இதே திமுகவால் தான் நாம் பெரும் இழப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறோம் அதேபோன்று தமிழகத்திலும் நடக்காது என்று என்ன நிச்சயம் என காங்கிரஸ் வட்டாரங்களை பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது. அதோடு தமிழகத்தில் திமுக நாளுக்கு நாள் பின்னடைவுகளை சந்தித்து வருவதால் காங்கிரஸ் தற்பொழுது முரண்டு பிடிக்க ஆரம்பித்துள்ளது, அதாவது 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் வழக்கத்தை விட 16 தொகுதிகளை தமிழகத்தில் கேட்டுள்ளதாகவும் அந்த பதினாறு தொகுதிகளில் கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நெல்லை, திண்டுக்கல், தென்காசி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், மயிலாடுதுறை போன்ற திமுக இதற்கு முந்தைய தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளை காங்கிரஸ் திமுகவிடம் கேட்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை முன்கூட்டியே அறிந்த அறிவாலயம் அதெல்லாம் முடியவே முடியாது இந்த முறை ஐந்து தொகுதிகளுக்கு மேல் கொடுக்கவே கூடாது! அனைத்தையும் அவர்களுக்கு கொடுத்துவிட்டு நாம் என்ன செய்வது இதற்கு மேல் அவர்கள் கூட்டணி முறித்துக் கொண்டு சென்றால் செல்லட்டும் என்று அறிவாலயம் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அதனால் திமுக காங்கிரஸ் கூட்டணி என்பது தேர்தல் வரை செல்லாது என அரசியல் விமர்சிகர்கள் இப்போதே கூறி வருகின்றனர்.