தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு இருந்த 50 அடி உயரம் உள்ள கொடிக்கம்பத்தை நேற்று முன்தினம் காவல்துறை அராஜகத்தில் ஈடுபட்டு அகற்றியது. அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த இந்தக் கொடிக்கம்பத்தை அகற்றுமாறு அப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் போராட்டம் நடத்தியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.இதில் பாஜக நிர்வாகிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அதன் பின் பாஜக கட்சியின் முக்கிய நிர்வாகியான அமர் பிரசாத் ரெட்டி உட்பட 5-க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களை போலீசார் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாஜக மாவட்ட தலைவர் அண்ணாமலை திமுக அரசுக்கு எதிராக ஒருநாளைக்கு 100 கொடிகம்பங்கள் நடபடும் என்று அறிவித்திருந்தார். சும்மா இருக்கும் பாஜகவை திமுக அரசு சீண்டி பார்ப்பதாக பாஜக நிர்வாகிகள் அவேசத்தில் இருந்தனர். அண்ணாமலை அறிவித்த இந்த பதிலடி மூலம் மகிழ்ச்சியில் இருந்தனர்.இதற்கிடையில் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகிகளின் குடும்பத்தினரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று நேரில் சென்று சந்தித்து தைரியம் கூறினார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "இந்த சம்பவத்தை பொறுத்தவரை, நல்ல விஷயமாக தான் இதை நான் பார்க்கிறேன். ஏனென்றால், அரசியலை பொறுத்தவரை கைதுகளால் தான் தலைவர்களை உருவாக்க முடியும். அதனால, இப்படி நிறைய பொய் கேஸ்களை போட்டு, பாஜக தொண்டர்களை கைது செய்து உள்ளே போடுவதை ஒரு மாநிலத் தலைவராக நான் வரவேற்கிறேன்.
எங்களுக்கு தீர்க்கமான தலைவர்கள் இதன் மூலமாக கிடைப்பாங்க. இன்னைக்கு அப்படி ஒரு 6 தலைவர்களை திமுக இன்று உருவாக்கியுள்ளது.திமுக அரசு பாஜகவிற்கு எவ்வளவு நெருக்கடி கொடுத்து வந்தாலும் அது பாஜகவின் வளர்ச்சிக்காக மட்டுமே என்று நாங்கள் எடுத்துக்கொள்வோம்.தொடர்ந்து பேசிய அண்ணாமலை என்னை பொறுத்தவரை பாஜக நிர்வாகிகள் பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கைதாக கூடாது. அது கேவலம் மட்டுமல்ல அது தவறு. அதேபோல, மோசடி வழக்குகளில் கைதாக கூடாது. மற்றபடி, அரசியல் சம்பந்தமாக எந்த விஷயத்துக்கு வேண்டுமானாலும் கைது ஆகலாம். அது கட்சியை வளர்க்கத்தான் செய்யும். முடக்கிவிடாது. ஒரு சாதாரண கொடிக்கம்பம் பிரச்சினைக்கு ஒரு கமிஷனரை ராத்திரி 3 மணிக்கு வர வெச்சிருக்காங்க. இந்தியாவில் வேறு எங்கேயும் இது நடக்காதுங்கண்ணா.
கடந்த ஆண்டு கோவையில் ஒரு தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை ஒருவர் நடத்த முயன்றார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அது முன்கூட்டியே வெடித்ததால் பெரிய அளவில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. விசாரணையின் போது தான், அந்த நபர் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருக்குனு தெரியவருது. அவர் போலீஸாரால் கண்காணிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் போலீஸ் கோட்டை விட்டுட்டாங்க. இரண்டாவது, திருப்பூரில் தனது தோட்டத்தில் உட்கார்ந்து மது அருந்தியதை தட்டிக்கேட்டவரை குடும்பத்துடன் ஒரு கும்பல் வெட்டி கொலை செய்யுது. இந்த விஷயத்துலேயும் போலீஸ் கோட்டை விட்டுட்டாங்க.ஆனால், இப்போது யார் நேர்மையாக கொடிகம்பதை நட்டுருக்கா.. யாரு சரியா நடலைனு பார்க்குற வேலையை போலீஸ்காரங்கள் ரொம்ப சின்சியரா பண்ணிட்டு இருக்காங்க. இதுதான் தமிழ்நாட்டின் இன்றைக்கு இருக்கக்கூடிய சட்டம் ஒழுங்கு" என அண்ணாமலை காவல்துறையின் பணியை விமர்சித்து கூறினார்.