24 special

பாஜக பழிவாங்க நினைத்த திமுகவிற்கு அதிர்ச்சி தகவல்... கொடுத்த டெல்லி மேலிடம்...!!

mk stalin, natta
mk stalin, natta

திமுக அரசாங்கத்தால் தொடர்ச்சியாக பாஜகவினர் பழி வாங்கப்பட்டு வருவதாக தமிழக பாஜகவினர் தொடர்ச்சியாக ஆளும் கட்சியான திமுகவை விமர்சனம் செய்து வந்தனர். மேலும் வெள்ளி கிழமை அல்லது தொடர் விடுமுறை நாட்களில் பாஜகவினரை கைது செய்து சட்ட உதவிகள் கிடைக்காத வண்ணம் பழி வாங்கும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக அண்ணாமலை குற்றம் சுமத்தி இருந்தார்.இந்த சூழலில் தான் தற்போது பாஜக தேசிய தலைவர் நட்டா உத்தரவின் பேரில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருக்கிறது, இது குறித்து டெல்லி பாஜக வெளியிட்ட அறிக்கையில்,


தமிழக அரசால், பாஜகவினர் எதிர்கொண்டு வரும் தாக்குதல் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 4 பேர் கொண்ட குழுவை அமைத்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா நேற்று இரவு உத்தரவு எனவும் இந்தக் குழு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து அறிக்கையை பாஜக மேலிடத்திடம் விரைவில் வழங்கும். இந்த 4 பேர் கொண்ட குழுவில், கர்நாடக முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவை உறுப்பினருமான டி.வி.சதானந்த கவுடா, மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனரும், மக்களவை உறுப்பினருமான சத்யபால் சிங், ஆந்திர மாநில பாஜக தலைவர் டி.புரந்தேஸ்வரி, மக்களவை உறுப்பினர் பி.சி. மோகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பாஜக தேசிய பொதுச் செயலர் அருண் சிங் அறிக்கை மூலம் இதை உறுதி செய்துள்ளார். ஜெ.பி.நட்டாவின் இந்த அறிவிப்புக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.இது குறித்து அண்ணாமலை தெரிவித்ததாவது கடந்த 2 ஆண்டுகளாக பாஜகவின் சமூக ஊடக நிர்வாகிகள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு வருகின்றனர்.நள்ளிரவு மற்றும் அதிகாலையில் கைது செய்வது, வார இறுதி நாட்கள் அல்லது தொடர் விடுமுறை நாட்களில் கைது செய்வது போன்ற செயல்களில் திமுக அரசு ஈடுபடுகிறது.சமூக மற்றும் முக்கிய ஊடகங்களில் பிரபலமானவர்களை குறிவைத்து கைது செய்வதில் திமுக அரசு தீவிரம் காட்டுகிறது.

இதுபோன்ற அத்துமீறல்களையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் இந்த குழு வெளிச்சத்துக்கு கொண்டு வரும் என நம்புகிறோம் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.வரும் நாட்களில் விரைவில் இந்த 4 பேர் கொண்ட குழு திமுக அரசால் பாதிக்கப்பட்ட பாஜக தொண்டர்கள் பாஜக ஆதரவாளர்கள் இல்லங்களில்  சென்று ஆய்வு செய்யவும் எது போன்ற அடக்குமுறையை ஆளும் திமுக அரசு செய்கிறது என்ற விளக்கத்தை பாஜக தேசிய தலைவர் நாட்டாவிற்கு கொடுப்பார்கள்.அதன் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட போராட்டம் மட்டுமல்லாமல் அரசியல் சானக்கிய ஆட்டத்திற்கும் பாஜக தயாராகும் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் மேற்கு வங்கத்தில் பாஜக தொண்டர்கள் மீது மம்தா அரசு தொடர் அடக்குமுறையை பயன்படுத்த இறுதியில் மம்தா அரசு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டதுடன் நெருக்கடிக்கு காரணமாக இருந்த மம்தா பேனர்ஜி மருமகன் தற்போது அமலாக்கதுறை பிடியில் சிக்கி தவித்து வருவது குறிப்பிடித்தக்கது.இதே போல் தமிழக பாஜக தொண்டர்களை குறிவைத்து கைது செய்துவரும் திமுக முக்கிய பிரபலம் மற்றும் அவருக்கு உதவும் IAS,IPS அதிகாரிகள் மீதும் விரைவில் நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது.