24 special

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து....ஸ்டாலினுக்கு பாடம் புகுட்டிய அண்ணாமலை!

mk stalin, annamalai
mk stalin, annamalai

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தாலே தமிழக மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை அரசு அலுவலர்களுக்கும்  பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் திமுக அரசு என்றாலே கொலை, கொள்ளை, அரசு அலுவலர்களுக்கு அரிவாள்  வெட்டு போன்ற குற்ற சம்பவங்கள் திமுக ஆட்சி காலத்தில் தலைவிரித்து ஆடுவது தொடர்கதையாகி வருகிறது .இதன் தொடர்ச்சியாக திருச்சியில் உள்ள தனியார் வங்கியில் சொத்தை  அடமானம் வைத்து பங்குதாரர்கள் 2 பேர் வங்கியில்  கடன் பெற்றனர். அந்த கடனை வங்கியில் திரும்ப செலுத்தவில்லை.  பல முறை அவர்களுக்கு வங்கி தரப்பில் இருந்து நோட்டிஸ் அனுப்பியும் அவர்கள் கடனை  திரும்ப செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.


இதனால்   திருச்சி நீதிமன்றம்  மற்றும் மாவட்ட கலெக்டர் உத்தரவின் படி அடமானம் வைத்த சொத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டனர், நேற்று திருச்சி மேற்கு தாலுகா மண்டல துணை தாசில்தார் பிரேம்குமார் தலைமையில் 4 வங்கி அதிகாரிகள் காஜாமலை லூர்த்துசாமி காலனியில் உள்ள அடமான சொத்தை ஜப்தி செய்ய சென்றனர்.  அப்போது, அங்கு உரிமையாளர்கள் அடியாட்கள் 25 பேரை வரவழைத்து தாசில்தார் மற்றும் வங்கி ஊழியர்கள் மீது கொலை மிரட்டல் விடுத்து தாக்கியதாக தெரிகிறது. இதனையடுத்து காவல்துறை விசாரணை நடத்தியதில் உரிமையாளர்கள் திமுக பிரமுகர்கள் என்று தெரியவந்தது.

படுகாயம் அடைந்த 5 பேரும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.இந்த தாக்குதலை கண்டித்து, வருவாய்துறை அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், அக்., 19, 20ல், பணி புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. இருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தாக்குதல் நடத்திய திமுக பிரமுகர்கள் அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் என்பதால் காவல் துறை அவர்களை  செய்யவில்லை அவர்கள் மீது வழக்குகளும்  செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் " திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, அரசு அதிகாரிகள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது. 

மணல் திருடர்களைத் தடுத்த கிராம நிர்வாக அலுவலர், அவரது அலுவலகத்திலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.பல அலுவலர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்கள் தொடர்கிறது. அரசு அதிகாரிகளுக்கே இந்த நிலை என்றால், சாதாரண பொதுமக்கள் நிலை என்ன ஆகும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. உடனடியாக, பாதிக்கப்பட்ட மண்டல துணை வட்டாட்சியர் திரு. பிரேம்குமார் அவர்கள் கூறிய புகாரில் தெரிவித்துள்ளவாறு, தாக்குதலில் ஈடுபட்ட அமைச்சர் K.N.நேரு அவர்களின் வலதுகரமான திமுக பகுதி கழக செயலாளர் காஜாமலை விஜய் மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட குண்டர்கள் அனைவரையும் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனியும் அரசு அதிகாரிகள் மீது இது போன்ற திமுகவினரின் தாக்குதல்கள் தொடர்ந்தால், மோசமான எதிர்விளைவுகள் இருக்கும் என்றும் திமுக அரசை எச்சரிக்கிறேன் என்று வலியறுத்திள்ளார். 

திமுக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டு முடிவடைந்த நிலையில் இதுவரை தமிழநாட்டில் பல இன்னல்களை மக்கள் சந்தித்து இருக்கின்றனர். முன்னதாக தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளையை தட்டி கேட்டதற்கு கேட்டதற்கு அவர் அலுவலகத்திலேயே அலுவலகத்திலேயே சரமாரியாக வெட்டிக் கொண்டனர். இதுவும் இதுவும் திமுக பிரமுகர்கள் என தெரியவந்தது.இதுபோல் தமிழகத்தில் திமுக ஆட்சி காலத்தில்  கொலை சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.