24 special

பங்களா போல் கட்டிய வீட்டால் அமைச்சர் செந்தில் பாலாஜியை தேடி வந்த வினை...!

Senthil balaji
Senthil balaji

கடந்த சில நாட்களாகவே அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய முக்கிய நபர்களின் இல்லங்களில் சோதனையை மேற்கொண்டு வந்தது மேலும் அந்த சோதனையில் செந்தில் பாலாஜியின் நெருங்கிய வட்டாரங்களான திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் உள்ள திமுக ஒன்றிய செயலாளர் வீராசாமிநாதன் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் மற்றும் கோயம்புத்தூரை சேர்ந்த டாஸ்மாக் சுப்பரவைசர் முத்து பாலன் ஆகியோரின் இல்லங்கள் உட்பட அலுவலகம் கிரானைட் தொழிற்சாலை என அனைத்து இடங்களும் அமலாக்க துறையின் சோதனையின் பிடியில் வசமாக சிக்கியது இப்படி அமலாக்க துறையின்  இரண்டாம் கட்ட சோதனையை தொடர்ந்து   செந்தில் பாலாஜி தொடர்புடைய அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடைபெற்றதில் பல அதிர வைக்கும் ஆவணங்களும் கணக்கில் வராத பல லட்ச ரூபாய் ரொக்க தொகையும் கைப்பற்றப்பட்டது.


ஏற்கனவே செந்தில் பாலாஜி பண மோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்தார் ஆனால் தற்போது அமலாக்கத்துறை மறுபடியும் மூன்று நாட்கள் தொடர்ந்து செந்தில் பாலாஜி தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தியதில் பல ஆதாரங்களை கைப்பற்றிய நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து மூன்று நாட்களுக்கும் மேலாக விசாரணையை தொடர்ந்து நடத்திவரும் நிலையில் விசாரணைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்து வருகிறார் என்ற செய்தியும் ஒரு புறம் வெளிவந்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் பண மோசடி செய்ததாக அமலாக்கத்துறை முதல் முறையாக செந்தில் பாலாஜியை சுற்றி வளைத்த நிலையில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ஆனால் தற்போது மீண்டும் மேற்கொண்ட சோதனையில் செந்தில் பாலாஜி கரூரில் மிகப்பெரிய பங்களா வீடு கட்டி வருகிறார் என்ற செய்தி வெளிவந்ததும் அளவிற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என்ற வழக்கில் தற்போது அமலாக்கத்துறை அவர் மீது நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்த விசாரணை முடிவில் செந்தில் பாலாஜிக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறது என்ற சோகத்தில் செந்தில் பாலாஜியின் தரப்பு இருந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன 

செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் சிக்கி புழல் சிறையில் இருந்து வந்த நிலையில் அதிலிருந்து தப்பிக்க கூட கொஞ்சம் வாய்ப்பு இருந்தது ஆனால் தற்போது செந்தில் பாலாஜி அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து கரூர் மாவட்டத்தில் பிரம்மாண்டமான பங்களாவை கட்டுவதற்கு அருண் அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்திடம்  கோடி கணக்கில் பணத்தை கொடுத்ததால் அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் விடுவிக்கப்பட்டாலும் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கண்டிப்பாக அமலாக்க துறையால் செந்தில் பாலாஜிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி இந்த வழக்கை கையில் எடுத்ததால் செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு வரப்போகிறது என அரசியல் விமர்சனங்கள் கூறி வருகின்றனர். இது மட்டுமில்லாமல் கடந்த கடந்த ஆட்சியில் செய்த பணமோசடி வழக்கு, வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்து அரண்மனை போல் வீடு கட்டிய வழக்கு இதெற்கெல்லாம் தண்டனை கிடைத்தால் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் சிறைவாசம் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும், மேலும் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை கூட ஏற்படலாம் எனவும் சட்ட வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.