தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை யாத்திரையின் போது நடுத்தர வயது மதிக்க தக்க பெண் ஒருவர் அண்ணாமலையை சந்தித்து மனு கொடுப்பதற்காக வந்து இருந்தார் அவரிடம் செய்தியாளர் ஏன் அண்ணாமலையை சந்திக்க வந்து இருக்கிறீர்கள் என கேட்டார் அதற்கு என் மண் சார்ந்து அண்ணாமலையிடம் பேச வந்து இருக்கிறேன் அவரிடம் புகார் கொடுத்தால் நிச்சயம் நிறைவேறும் என வந்து இருக்கிறேன் என தெரிவித்தார்.
அதன் பிறகு அவர் சொன்னது தான் ஹைலைட் பிரதமர் மோடி குறித்து உங்கள் பார்வை என்ன என கேட்க எனக்கு மோடியை பிடிக்க ஒரே காரணம்தான் அவர் எங்க வேரை சரி செய்தால் பிரச்சனை சரியாகும் என நினைக்கும் தலைவர், நமது அண்டை நாடு இலங்கையில் சீனா காரன் மொத்தமா எடுக்க நினைத்த போது மோடி நினைத்து இருந்தால் பணத்தை கொடுத்து இருக்க முடியும் ஆனால் அவர் அப்படி செய்யலை அந்த நாட்டு மக்களை சரி செய்ய நினைத்தார்.
இங்க ஏதாவது ஒரு அரசியல் வாதியிடம் அந்த பொறுப்பு போயிருந்தா மக்களுக்கு 25 கோடி கொடுத்துட்டு அவங்க 25 கோடியை எடுத்துருபாங்க எல்லாரும் சமம் என பார்க்க கூடிய தலைவர் மோடி, உலக யோகா தினம் என்ற ஒன்றை ஆரம்பித்து அனைத்து உலக மக்களும் சமம் என நினைக்க வைத்தவர் மோடி. இப்போ அல்ல மீண்டும் மோடி தான் பிரதமராக வருவார் என அடித்து கூறி இருக்கிறார் பெண்மணி.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியை சேர்ந்த சாமானிய பெண்மணி பிரதமர் மோடியின் உலக நாகர்வுகள் குறித்து தனது கருத்தை ஆணி தரமாக அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடை பயணத்தின் போது தெரிவித்து இருப்பது பிரதமர் மோடி பற்றி தமிழக மக்கள் தற்போது புரிந்து கொண்டு வருவதை வெளிப்படுத்தி இருக்கிறது.
இது மட்டுமின்றி தற்போதைய தமிழக அரசியல் குறித்தும் பெண்மணி தனது கருத்தை அமைதியான முறையில் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்து இருப்பதும் பலரது கவனத்தை பெற்று இருக்கிறது.