24 special

நீ எல்லாம் பேசவே கூடாது....! ஷர்மிளா விழுந்த பலத்த அடிகள்...!

dr sharmila, payilvan
dr sharmila, payilvan

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெண் நிர்வாகியாக உள்ள டாக்டர் ஷர்மிளா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். விடுதலை சிறுத்தைகளை ஆதரித்தும் திமுகவை தூக்கியும் பேசி வரும் டாக்டர் ஷர்மிளா சின்னத்திரையிலும் தற்போது முன்னணி சீரியல்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் திமுகவிற்கு ஆதரவாக பேசுகிறேன் என்ற பெயரில் பல நேரங்களில் விமர்சனங்களில் அவர் பெற்று வருவது வழக்கமாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷர்மிளா தனது சமூக வலைதளத்தில் தமிழ்நாடு என்று கூறுவதற்கு பதிலாக நமிழ்நாடு என்று பதிவிட்டது இணையங்களில் அதிக விமர்சனங்களை பெற்றது. அது மட்டும் இன்றி ஒரு கட்டத்தில் திமுக தொடர்ச்சியாக பின்னடைவுகளை சந்தித்து வந்ததும் பாஜகவின் செயலுக்கு திமுக வழிகாட்டுவது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வந்ததற்கும் ஷர்மிளா திமுகவை விமர்சித்தும் பதிவிட்டது திமுக நிர்வாகிகள் மத்தியிலேயே அதிர்ப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் யூடியூப் சேனல் பேட்டிகள் கலந்து கொண்டு பேசிய சர்மிளா திரையுலகின் விமர்சகராகவும் நடிகராகவும் இருந்து வரும் பயில்வான் ரங்க நாதனை குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பயில்வான் ரங்கநாதனும் ஷர்மிளாவை குறித்து தெறிக்கவிடும் வகையில் பேசியுள்ளார். இந்த வீடியோகள் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. அதாவது தமிழ் சினிமா பிரபலங்கள் பற்றிய தகவல்களை அதிகமாக கொண்டிருக்கும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் அவ்வப்போது சில சினிமா பிரபலங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டு பெரும் புயலை கிளப்புவார்.  இந்த நேரத்தில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி ஷர்மிளா, நடிகைகளை பற்றிய பயில்வான் ரங்கநாதன் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார், மிகவும் தவறாகவும் பேசி வருகிறார், ஆனால் நடிகர்கள் சினிமா அல்லாத மற்ற பிரபலங்களை பற்றி அவர் பேசுவதில்லை! அரசியல்வாதிகளை பற்றி அவர் வாய் திறப்பதே இல்லை! இதன் மூலம் அவர் கொண்டிருக்கும் நோக்கம் என்பது நடிகைகளை குறித்து பேசினால் எந்த மறுப்பையும் பேச மாட்டார்கள் கடந்து போய் விடுவார்கள் என்ற ஒரு எண்ணத்தில் இப்படி பேசுகிறாரா அல்லது நடிகர்களை நாம் சீண்டினால் அதற்கு பிரச்சினை வரும் என்பதை நினைத்து  இப்படி பேசுகிறாரா அல்லது ஒரு விதத்தில் பார்க்கக்கூடிய மக்கள் அனைவரும் நடிகை நடிகர்களின் அந்தரங்கம் குறித்து பேசுவது மற்றும் கேட்கும்  மனநிலையில் உள்ளார்களோ என்று எனக்கு தோன்றுகிறது ஏனென்றால் அவர் பேசும் வீடியோக்கள் அனைத்திற்கும் பார்வையாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்!

என்று பயவான் ரங்கநாதன் குறித்து பலவாறு பேசியிருந்தார். ஷர்மிளா பேசியதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே அந்த பேட்டி எடுத்தவரும் பேசிய வீடியோவும் இணையத்தில் வைரலானது. இதனை அடுத்து, பயில்வான் ரங்கநாதன் தனியார் youtube சேனலுக்கு பேட்டி அளிக்கும் போது டாக்டர் ஷர்மிளாவிற்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது இவர்கள் இருவருக்குமே என்னை குறித்து பேசுவதற்கு தகுதியை இல்லை! இப்போ இருக்கிற ஷர்மிளா முதன் முதலில் பேமஸ் ஆனது இதுல தெரியுமா? புதிரா புனிதமா என்ற ஒரு நேர்காணலில் இடம்பெற்று அதன் மூலமே பேமஸானார்! இந்த நிகழ்ச்சியை நான் தமிழன் டிவியிலேயே ஒளிபரப்பு செய்துள்ளேன். இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்தான் டாக்டர் ஷர்மிளா! அவர் தற்பொழுது என்னைப் பற்றி கேள்வி கேட்கிறார், எம்மா டாக்டர் நீதான் எம்பிபிஎஸ் படிச்சிருக்க இல்ல அப்புறம் எதுக்கு இந்த நேர்காணல் நிகழ்ச்சியில் எல்லாம் கலந்து கொண்ட? என்ற கேள்வியை முன் வைத்து ஷர்மிளாவை கடுமையாக விமர்சித்தார்.