24 special

ஸ்டாலின் கண்முன்னே நடந்த அந்த சம்பவம்…! இதை யாரெல்லாம் நோட் பண்ணீங்க…!

Rnravi
Rnravi

2023ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவையில் நடைபெற்றது.சட்டப்பேரவை கூட்டத்தொடரைப் பொறுத்தவரை மரபுப்படி ஆளுநர் உரையுடன் இன்றைய கூட்டத்தொடர் ஆரம்பமானது. ஆளுநர் ஆர்.என்.ரவி அனைவருக்கும் வணக்கம் எனக்கூறியதுமே, 'தமிழ்நாடு வாழ்க', 'எங்கள் நாடு தமிழ்நாடு' என முழுக்கமிட்டு ஆளுநருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர்.  


தமிழ்நாடு மக்களுக்கு எதிராகச் செயல்படும் ஆளுநரை சட்டப்பேரவையில் இருந்து வெளியேற வேண்டும் என்ற முழக்கமிட்டவாறே திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தன. 

பொது நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் பேசியதை மனதில் வைத்துக்கொண்டு திமுக கூட்டணி கட்சியினர் மிகவும் தரக்குறைவாகவும், ஆளுநர் உரைக்கு இடையூறு செய்யும் வகையிலும், 'தமிழ்நாடு வாழ்க', 'எங்கள் நாடு தமிழ்நாடு' என அவரது இருக்கைக்கு முன்னால் நின்று கோஷங்களை எழுப்பினர். இந்த அனைத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அருகிலேயே நடந்த போதும் அவரோ, திமுக எம்.எல்.ஏ.க்களோ எதுவும் தெரியாது போல் அமர்ந்திருந்தனர். 

ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி இதையெல்லாம் பொருட்படுத்தாது ‘முதல் கூட்டத்தில் உரையாற்றுவதில் பெரு மகிழ்ச்சி. என் இனிய தமிழக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள்” . தொடர்ந்து அரசின் கொள்கை விளக்கங்கள், நலத் திட்டங்களின் நிலை தொடர்பாக 40 நிமிடங்கள் வரை உரையாற்றினார். இறுதியாக  ‘வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!

வாழிய பாரத மணித்திரு நாடு’ என்ற பாரதியாரின் பாடலை சுட்டிக்காட்டிய அவர், வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த் எனக் கூறி உரையை நிறைவு செய்தார். 

தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் நீட் தேர்வு குறித்த நிலைப்பாடு உட்பட பல விஷயங்கள் பற்றி ஆளுநர் பேசியிருந்தாலும் அவர் தவிர்த்த சில வார்த்தைகளை வைத்துக்கொண்டு அவையிலேயே திமுக நாடகமொன்றை அரங்கேறியது. தமிழ்நாடு அரசு அச்சடித்து கொடுத்த ஆளுநர் உரையில் இருந்த திராவிட மாடல், பெண்ணுரிமை, தமிழ்நாடு, பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கருணாநிதி படிக்கவில்லை என்றும், சட்டம் ஒழுங்கில் தமிழகம் தலைசிறந்து விளங்குவதாக உரையில் குறிப்பிட்டிருந்த பொய்யை ஆளுநர் வாசிக்கவில்லை என்றும் உடன்பிறப்புகள் கொந்தளித்தனர். 

ஆளுநரை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொடக்கம் முதலே இருந்ததால் இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனது பங்கை செயல்படுத்த தொடங்கினார். தமிழ்நாடு அரசு தயாரித்து, மாண்புமிகு ஆளுநர் அவர்களால் இசைவளிக்கப்பட்டு, அச்சிடப்பட்ட உரையை முறையாக முழுமையாகப் படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல. சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்றும் ஆகும்.

 ஆகவே சட்டமன்றப் பேரவை விதி 17-ஐத் தளர்த்தி, இன்றைக்கு அச்சிடப்பட்டு, மாண்புமிகு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும், அவைக்குறிப்பில் ஏற வேண்டும் எனும் தீர்மானத்தையும், அதேபோல, இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இணைத்து, விடுத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என்னும் தீர்மானத்தையும் முன்மொழிகிறேன். இத்தீர்மானத்தை பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார். 

திமுக எழுதிக்கொடுத்த புகழ்ச்சி உரையை அப்படியே படிக்க வேண்டும் என எந்த ஒரு அரசியல் சாசனமும் இல்லாத நிலையில், ஆளுநர் நேரடியாக அவமதிக்கப்பட்டது சோசியல் மீடியாவில் பெரும் கொந்தளிப்பை உருவாகியுள்ளது. ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்ற மரியாதை கூட இல்லாமல் ஆளுநரை இப்படி பேரவையில் வைத்து அவமதிக்கலாமா? என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.