கடந்த 2019 மற்றும் 2021 ஆகிய இரண்டு தேர்தல் களிலும் திமுக தமிழகத்தில் வெற்றி பெற்றது. 2021 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தது, 2019 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் 39 எம்பி களை திமுக கட்சி வென்றது, இந்த இரண்டு தேர்தல்களிலும் திமுகவின் இணையதள பிரச்சாரம் என்பது மிகவும் தீவிரமாக இருந்தது, அதிலும் குறிப்பாக எந்த தொலைக்காட்சியில் எந்த சேனலை மாற்றினாலும் விளம்பரத்திற்கு முன்பாக திமுகவின் பிரமோஷன் வீடியோக்கள் போன்று 'ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப் போறாரு' என்ற பாட்டு வெளியிடப்பட்டது. தேர்தலுக்கான பிரச்சாரத்தை மூன்று மாதங்களுக்கு முன்பாகவே சமூக வலைதளத்திலும் மக்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டு உள்ள தொலைக்காட்சி மூலமும் திமுக ஆரம்பித்தது.
இதற்காகவே தனி குழு ஒன்றை திமுக கட்சியில் அமைத்தனர், அவர்களே இந்த இணையதள பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள் என்றும் தகவல்கள் வெளியானது. அதுமட்டுமின்றி தெருக்கள் தோறும் போஸ்டர்கள், பேனர்கள், பஸ் ஸ்டாப் போஸ்டர்கள் என பெரும்பாலான இடங்களில் திமுக வின் பிரச்சாரம் மேலோங்கி இருந்தது. அதற்கு அடுத்தபடியாக தேர்தல் காலம் நெருங்கும் பொழுது திமுக தரப்பு வாக்குறுதியாக சிலவற்றை கொடுத்தது அதில் பட்டதாரி ஆசிரியர்கள் பகுதி நேர ஆசிரியர்கள் சிறப்பாசிரியர்கள் குடும்ப பெண்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரது கவனத்தையும் திமுக பெற்றது இதற்க்கு சமூக வலைதள பிரச்சாரங்கள் பெரும்பங்கு வகித்தது.ஆனால் ஆட்சி அமைந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகும் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது என பட்டதாரி ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் குடும்பத்தலைவிகள் மற்றும் செவிலியர்கள் என ஏராளம் பேர் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும் நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்பதை வலியுறுத்தியும் 50க்கும் மேற்பட்ட போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த போராட்டங்கள் அனைத்தும் திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஏற்பட்டது அவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டிருந்தால் நாங்கள் எதற்கு இந்த போராட்டங்களில் ஈடுபடுகிறோம் என்ற கருத்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இப்படி தொடர்ச்சியாக அதிருப்திகளை சந்தித்து வந்த காரணத்தினால் திமுகவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திமுக இணையதள குழுக்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருந்து வருவதால் என்ன பேசி பிரச்சாரத்தை மேற்கொள்வது இணையதளத்தில் எனவும் என்ன பேசி மக்களை நம் பக்கம் கவர்வது என்பது தெரியாமல் இருப்பதாகவும் பல திமுக ஆதரவு ஐடி கள் இனி நான் திமுகவிற்காக சப்போர்ட் செய்து பதிவிட மாட்டேன் என பதுங்கி ஓடிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாகவே 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை கணக்கில் வைத்து திமுகவின் அதிகாரப்பூர்வ ஐடி விங் இணையதளம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், 'சமூகவலைத்தள செயல்பாட்டாளர்களுடன் இணைகிறது திமுக ஐடி விங்! இணையதளத்தில் இயங்கிவரும் உடன்பிறப்புகளாகிய உங்களை நாடி வருகிறது கழக தகவல் தொழில்நுட்ப அணி! உங்களது சமூக வலைத்தளப் பக்கங்களைப் பதிவு செய்யுங்கள். கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுங்கள்! என விண்ணப்ப லிங்கையும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளது.
இதன் பின்ணியை விசாரிக்கும்போது முதல்வரை பார்ப்பதற்காவது ஆட்கள் சேருவார்கள் இதன் மூலம் நமது இணையத்தில் தொண்டர்களின் எண்ணிக்கையை அதிகபடுத்தலாம் என்ற நோக்கில் இந்த விளம்பரத்தை திமுக தரப்பு கொடுத்துள்ளது எனவும் திமுக ஐடி விங்கா ஆள விடுப்பா என தெறித்து ஓடுகிறார்கள் இணையவாசிகள் அதன் காரணமாகத்தான் இந்த அறிவிப்பு எனவும் கூறப்படுகிறது. மேலும் இதன் காரணமாகவே வேறு வழியில்லாமல் பிரசாந்த் கிஷோரை மேலும் பல கோடிகள் கொட்டிக்கொடுத்து மீண்டும் பணிக்கு திமுக அழைத்திருக்கின்றனர் என வேறு சில தகவல்களும் தெரிவிக்கின்றன.