கோபி நயினார் தன்னை ஒரு சமூக செயல்பாட்டாளர் எழுத்தாளர் போன்று காண்பித்துக்கொண்டு திரைப்பட இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கி நயன்தாரா நடித்து வெளியான படம் தான் அறம். 2017 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு கதை மற்றும் இயக்கம் இரண்டுமே கோபி நாயினர்தான். கோபி நயினார் எழுத்தாளர் மற்றும் இயக்குனர் என்பதையும் தாண்டி விசிக மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் இலங்கைத் தமிழரான சியாமளா தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜ் மற்றும் விசிக பிரமுகரும், இயக்குனருமான கோபி நயினார் அறம் படத்தை இயக்கிய பிறகு 2018 ஆம் ஆண்டு சியாமளாவிற்கு அறிமுகமாகிறார், அதாவது சில சினிமா நட்பு வட்டாரங்கள் மூலமாக தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜ் என்பருடன் பழக்கம் ஏற்பட்டு அவர் வழியில் கோபி நயினாரின் நட்பு கிடைத்தது என்று சியாமளா கூறியுள்ளார், பிறகு நடிகர் ஜெய் வைத்து கருப்பு நகரம் என்ற பெயரில் திரைப்படத்தை கோபி நயினார் இயக்குவதாக சியாமளவிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த படத்தை புரட்சிகரமாக இயக்குகிறோம், நிறைய புரட்சி கருத்துக்கள் இந்த படத்தில் இருப்பதால் படத்திற்கு தயாரிப்பாளர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது, படத்திற்கு தயாரிப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள் அதனால் தாங்கள் ஒரு தயாரிப்பாளராக இருக்கிறீர்களா என கேட்டு கொண்டதற்கு இணங்க சியாமளா ஒப்புதல் அளித்து இந்த படத்திற்கு ஒரு தயாரிப்பாளராக மாறி உள்ளார்.
ஒப்புதல் அளித்த பெயரில் 5 லட்சம் ரூபாய் மட்டும் பணமாக கையில் கொடுத்துவிட்டு, பிறகு பல தவணைகளாக முப்பது லட்சம் ரூபாயை, சியாமளா கொடுத்துள்ளார். இந்த படத்தின் பூஜையில் கலந்துகொண்டு மேலும் இந்த படத்திற்கான மூன்று நாட்கள் சூட்டிங்கில் கலந்து கொண்டுவிட்டு பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பியுள்ளார் சியாமளா. இந்த படத்திற்கான தயாரிப்பாளராக மாறுவதற்கு ஒப்புதல் அளித்த போது ஆறு மாதத்தில் இந்த படத்தின் வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு திரையரங்குகளில் வெளியிடலாம் மேலும் படத்தின் லாபத்தில் 25 சதவீதத்தையும் தருகிறோம் என்று ஒப்புதல் போட்டுள்ளனர் தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜ் மற்றும் இயக்குனர் கோபி நயினார். சியாமளா பிரான்ஸ் திரும்பிய பிறகு விஜய் அமிர்தராஜ் மற்றும் கோபி நயினாரையும் தொடர்பு கொள்ள முயற்சித்த சியாமளாவிற்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.
தொடர்ந்து சியாமளாவால் அவர்கள் இருவரையும் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்துள்ளது. பிறகு விஜய் அமிர்தராஜ் மற்றும் இயக்குனர் கோபி நயினாரிடம் தான் ஏமாற்றபட்டிருப்பதை புரிந்து கொண்ட சியாமளா காவல்துறை ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். தற்போது இயக்குனர் கோபிநாத் விசிகவின் மாவட்ட செயலாளராக உள்ளதால் விசிக தலைவர் தொல் திருமாவளவன் இந்த விவகாரத்தில் தலையிட்டு தனது பணத்தை மீட்டு தர வேண்டும் என சியாமளா வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இதில் முதல்வரும் தலையிட்டு தனக்கு உதவி புரிய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இப்படி புரட்சி பேசணும் பணம் கொடு என பிரான்ஸ் பெண்மணியிடம் விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் பணம் பிடுங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இப்படி கடந்த சில நாட்களாகவே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தொடர்ச்சியாக புகார் தெரிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விசிக மற்றும் திமுகவிற்கு இடையே சற்று உரசல் இருக்கிறது, இந்த நிலையில் விசிகவின் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் காரணத்தினால் அடுத்த நடைபெறும் தேர்தல்களில் இவர்களது கூட்டணி தொடருமா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் தற்போது எழுந்துள்ளது.