நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய விபத்தாக தற்போது ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்து பார்க்கப்படுகிறது மேலும் இந்த விபத்து பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வெளிநாட்டு தலைவர்களும் இந்த செய்திக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளதால் இதற்கான காரணங்களை தற்போது ரயில்வே அமைச்சகம் விசாரித்து வருகின்றது. ஒடிசா மாநிலத்தில் பாலசோர் மாவட்டத்தில் சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டலம் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் மாற்று பாதையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் கோரமண்டலம் எக்ஸ்பிரஸின் பத்து பெட்டிகள் தடம் புரண்டு எதிர் தண்டவாளத்தில் விழுந்துள்ளது இதனால் அந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த பெங்களூரு - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலும் அதில் மோதி கோர விபத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பாலசோர் மாவட்டத்தில் நடைபெற்ற விபத்து ஏற்பட்ட இடத்தில் உடனடியாக விரைந்து அங்கு தனது நடவடிக்கை பணிகளை மேற்கொண்டது மட்டுமல்லாமல் அங்கு நிலைமை சீராகி அந்த தடத்தில் ரயில்கள் செல்லும் வரையில் அங்கிருந்து நேரடியாக மேற்பார்வையிட்டார். மேலும் இந்த விபத்து பற்றி நடைபெற்ற முதல் கட்ட விசாரணையில் சென்னை சென்று கொண்டிருந்த கோரமண்டலம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு முதலில் சிக்னல் கிடைத்ததாகவும் பிறகு அது திரும்பி பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது இதனாலையே லூப் லைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது கோரமண்டலம் எக்ஸ்பிரஸ் படு வேகமாக மோதியதாகவும் அதனாலயே மாற்று தண்டவாளத்தில் கோரமண்டலம் எக்ஸ்பிரஸின் சில பெட்டிகள் விழுந்ததாகவும் கூறப்படுகிறது இதனை அறியாமல் இதே சமயத்தில் பெங்களூரு ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலும் சிதறி கிடந்த பெட்டிகள் மீது மோதி இந்த விபத்து ஏற்பட காரணமாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விபத்திற்கு பல தலைவர்களும் வெளிநாட்டு பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்ற சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடி விபத்து ஏற்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார், இந்த நிலையில் திமுக எம் பி ஆ. ராசா இந்த விபத்து பற்றி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது தேசிய அளவில் பேசும் பொருளாக மாறி வருகிறது. அதாவது இந்த விபத்து நடந்ததற்கு காரணம் தனிமனிதரா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்று கேள்வி எழுப்பியதுடன், அனைத்து இடங்களுக்கும் சென்று வந்தே பாரத் ரயில்களை துவங்கி வைத்து விளம்பரம் தேடிக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி இதில் ஏன் கவனம் செலுத்தவில்லை? ரயில்வே அமைச்சரும் இந்த விபத்தில் ஊமையாக இருந்து வருகிறார். இத்தனை உயிர்கள் பறிபோய் உள்ளது இதற்கு பொறுப்பேற்க போவது யார்? தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு சிறிய நிகழ்வு ஏற்பட்டால் அதனை பெரிதாக்குபவர்கள் தற்போது அமைதியாக இருப்பதற்கு காரணம் என்ன? என்று ஆ ராசா பிரதமர் மோடியையும் ஒட்டுமொத்த பாஜக அரசையும் இந்த விபத்தில் சம்மந்தப்படுத்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
ஏற்கனவே திமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகளின் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத் துறையினரின் ரெய்டுகள் நடைபெற்று வருகின்ற நிலையில், நடந்து முடிந்த இந்த விபத்திற்கு பாஜகவே தான் காரணம் என்ற வகையில் ஆ ராசா பேசியிருப்பது டெல்லி பாஜகவினரை கடுமையாக கோபப்படுத்தியுள்ளது. மேலும் திமுகவின் முக்கிய அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி வருமானவரித் துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவமும், தற்போது ஆ ராசாவின் இந்த சர்ச்சைக்குரிய விமர்சனத்தாலும் பிரதமர் அலுவலகம் கடுமையான கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி ஆ.ராசா பேசியதன் காரணமாகவே வரும் காலங்களில் ரெய்டு மற்றும் பிற நடவடிக்கைகள் அதிகமாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒடிசா ரயில் விபத்திற்கு கருத்து தெரிவிக்கிறேன் என்ற பெயரில் திமுகவை மற்றொரு வம்பில் கோர்த்து விட்டுள்ளார் ஆ ராசா