முன்னாள் முதல்வரும் திமுகவின் தலைவருமான கருணாநிதி அவர்களின் நூறாவது பிறந்தநாள் இந்த வருடம் ஆரம்பிக்க உள்ள நிலையில், இந்த வருடம் முழுவதும் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை கொண்டாட திமுகவும், தமிழக அரசும் முடிவு செய்து பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதாவது கருணாநிதியின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட வேண்டும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஒரு வருடம் முழுவதும் திராவிட இயக்கத்தின் கொள்கை மற்றும் மக்களுக்கு திராவிட அரசு செய்த பணிகள் ஒவ்வொன்றையும் எடுத்து விளக்கி கருணாநிதியை பெருமைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் விழாக்களை ஏற்பாடு செய்திருக்கிறது திமுக. அந்த வகையில் சிதம்பரம் அண்ணாமலை நகரில் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை கொடியேற்றி இனிப்பு மற்றும் அன்னதானமும் வழங்கி கொண்டாடினர். அடுத்து மானூரில் மெயின் பஜார் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் தூவி அங்கிருக்கும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி உள்ளனர்.
அதேபோன்று ஆரணி அடுத்த வீரமங்கலம் கிராமத்திலும் கருணாநிதியின் நூறாவது பிறந்த நாளை திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஜெயராணி ரவி தலைமையில் கட்சியின் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி கொண்டாடினர். அதாவது கருணாநிதியின் நினைவுச் சின்னமாக பல்வேறு இடங்களில் பல்வேறு கட்டிடங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை அமைத்து வருகின்ற திமுகவிற்கு, கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம் திமுக ஆட்சியில் இருக்கும்போதே வருவது பெரு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதன் காரணமாகவே தங்களது கொண்டாட்டங்களை வேறு விதமான வகையில் கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு விதமான விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களை ஏற்படுத்தி கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை கொண்டாட திமுகவினர் முடிவு செய்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்ற நிலையில் ஓசூரில் உள்ள விளையாட்டு பெயர் பலகையில் கருணாநிதி விளையாட்டுத்திடல் என்று பொறிக்கப்பட்டிருப்பதை பாஜகவினர் கருணாநிதி பெயரை அழித்து ஒரு திடீர் சம்பவத்தை திமுகவினருக்கு செய்துள்ளனர்.
இப்படி திமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போது கருணாநிதி பெயரை பாஜகவினர் அழித்ததை சமூக வலைத்தளத்தில் வலதுசாரி ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். விளையாட்டு திடலில் பெயரை மாற்ற வேண்டும் என்று பாஜகவினர் போராடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு திமுகவின் மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ மயிலை வேலு சமூக வலைதளத்தில் தனது கண்டனத்தை தெரிவித்துளள்ளது
மயிலாப்பூர் எம்.எல்.ஏ மயிலை வேலு இந்த விடியோவை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பதிவில், 'அதாவது கழுதைகள் எல்லாம் புலி வேஷம் போட்டு ஆடுது பாத்துட்டு இருக்கீங்க.கோவனத்தோட ஓடவிடுங்கைய...சும்மா இவனுங்க வீடியோ எடுத்து செய்தியாக்க மட்டும்தான். மற்றபடி தொடை நடுங்கிகள்.சிங்கத்திடம் வந்து பூச்சாண்டி வேலையை காண்பிக்கிறார்கள்.
கட்டுப்பாடு என்ற வரிக்கும் ஒரு எல்லை உண்டு' என்று பதிவிட்டிருந்தார். மயிலாப்பூர் எம்எல்ஏவின் இந்த பதிவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜகவினர் சமூக வலைதளங்களில் எதிர்வினைகளை பலவாறு ஆற்றி வருகின்றனர். யாரை சொல்கிறீர்கள் ஏன் இப்படி சொல்கிறீர்கள் பாஜக செய்தது சரி என்று மயிலாப்பூர் எம்எல்ஏ மீது பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆவேசமாக பேசுகிறேன் என்ற பெயரில் மயிலாப்பூர் திமுக எம்எல்ஏ பேசி சமூக வலைதள வாசிகளிடம் குறிப்பாக பாஜகவினர்களிடம் கடுமையாக வங்கி கட்டி வருகின்றார்.