கடந்த பொங்கலுக்கு விஜயின் வாரிசு படமும், அஜித்தின் துணிவு படமும் வெளியானது. இதில் விஜய் படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனம் பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. போட்டி போட்டுகொண்டு இரு ரசிகர்களும் படத்தை கண்டு மகிழ்ந்தனர். இந்த வருட பொங்கலுக்கு அப்படி ரசிகர்கள் போட்டி போட்டுகொண்டு காணும் வகையில் படம் வெளியாகவில்லை என்பது உண்மை. முன்னனி நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை.
வளர்ந்து வரும் நடிகர்களான தனுஷின்கேப்டன் மில்லர் படமும், சிவகார்த்திகேயனின் அயலான் படமும் இன்று வெளியாகிள்ளது. பல சச்சரவுகளை தாண்டி இன்று வெளியான அயலான் படம் ரசிகர்களை எதிர்பார்த்த அளவுக்கு முழுமையடைய செய்ததா அல்லது தனுஷின் துப்பாக்கியில் இருந்து ஒரு குண்டு முன்னோக்கி சென்றதா என்ற குழப்பம் ரசிகர்களிடையே நிலவி வருகிறது. அந்த வகையில் இரன்டு படத்தையும் கண்ட இருவேறு ரசிகர்கள் இணையத்தில் வெளியாகிள்ளது.
அந்த வரிசையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியானது அயலான படம். சயின்ஸ் பிக்சன் கதைதான் அயலான். 4 வருடங்களுக்கு மேல் இப்படத்தை எடுத்தார்கள். அதற்கு காரணம் சிவகார்த்திகேயன் மட்டுமே. ஆனால், அயலான் படத்தின் டீசர், டிரெய்லர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில்தான் பொங்கல் விருந்தாக இப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. பல இடங்களிலும் காலை 9 மணிக்கு இப்படம் வெளியானது. இந்நிலையில், படம் பார்த்த ரசிகர்கள் பலரும் இப்படம் நன்றாக இருப்பதாக டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
குறிப்பாக இப்படத்தின் VFX காட்சிகளை இயக்குனர் ரவிக்குமார் சிறப்பாக கையாண்டிருப்பதாக பலரும் வருகின்றனர். இது கண்டிப்பா அயலான் பொங்கல்தான். காமெடி, சண்டை காட்சிகள், பாடல்கள், செண்டிமெண்ட், பின்னணி இசை என எல்லாமே நன்றாக இருக்கிறது என ஒருவர் பதிவிட்டுள்ளார். இப்படியாக அயலான் படத்திற்கு பாசிடிவ்வான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. விண்வெளியிலிருந்து பூமிக்கு வரும் ஏலியன் பற்றிய கதை என்பதால் இப்படம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் நடிப்பில் அருண் மாதேஷ் வரன் இயக்கத்தில் உருவான படம் கேப்டன் மில்லர். இந்த படமும் இன்று வெளியானது. 1930ல் நடக்கும் கதையை அருண்மாதேஸ்வரன் சிறப்பாக கையாண்டிருக்கிறார். அவரின் கடும் உழைப்பு இப்படத்தில் தெரிகிறது. வழக்கம்போல் தனுஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதேபோல், பிரியங்கா மோகனும் அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார்’ என வினியோகஸ்தர் தனஞ்செயன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஜிவி பிரகாஷின் இசை மற்றும் படத்தின் உருவக்கம் சிறப்பாக இருக்கிறது என ஒருவர் பதிவிட்டு ஐந்துக்கு 3.5 மதிப்பெண்களை கொடுத்திருக்கிறார் சிலரோ கேப்டன் மில்லர் ஒரு எபிக் பிளாக் பஸ்டர் திரைப்படமாக இருக்கும் எனவும் பதிவிட்டு வருகிறார்கள். ஆனாலும், அனைத்து ரசிகர்களுக்கும் இப்படம் பிடிக்குமா, இது ஒரு வெற்றிப்படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த இரண்டு படத்தை தாண்டி அருண் விஜய் நடிப்பில் வெளியான மிஷன் சேப்ட்டர் 1 படமும் வெளியானது எமி ஜாக்சன் நடிப்பில் வெளியான கபடம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்று வருகிறது . ஒரு சிலர் படத்திற்கு ஐந்துக்கு 2.5 கொடுத்து வருகின்றனர். முதல் நாள் வசூலை வைத்து எந்த படம் பொங்கல் ரேஷனில் வெற்றி பெற்றது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.