24 special

டிஸ்மிஸ் ஆர்டர் நிறுத்தம்....!பின்னணியில் அரசியல் இருக்கிறதா...?

Rnravi,pm modi
Rnravi,pm modi

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மீண்டும் கடும் எதிர்ப்பைதெரிவித்துள்ளன திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள்.இலாகா இல்லாத அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜியைநீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என தமிழக முதலமைச்சர்ஸ்டாலின் கூறிவிட்டார். இந்த விவகாரம் தற்போது நாடு முழுவதும்ஒரு புதிய விவாதத்தை அரசியல் சாசனத்தைத தொடர்புபடுத்தி தொடங்கிவைத்துள்ளது. 


ஜூன் மாத இறுதியில் தலைநகர் டெல்லி விரைந்த ஆளுநர் ரவி, அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரம் தொடர்பாக முக்கியஅதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். தினமும் ஆளுநர்என்ற முறையில் மாநிலத்தில் நடக்கும் விஷயங்களை நோட் போட்டு மத்திய உள்துறை கொடுப்பது நடைமுறை. இந்த முறை விஷயம் கொஞ்சம் வேறுமாறியாக இருக்கிறது என்பதை ஆளுநர் ரவி புரிந்துகொண்டார். மே மாதம், செந்தில்பாலாஜிதொடர்புடைய JOB Racket வழக்கை உச்சநீதிமன்றம் மீண்டும் திறந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தால்உயிரற்றுபோன வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிராமசுப்ரமணியன் மீண்டும் புதுபித்தார். 

ஜூன் 14 ஆம் தேதி செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. கைது தொடர்பான ஆவணத்தை அதிகாரிகளிடம்இருந்து வாங்க மறுத்த செந்தில்பாலாஜி, நான் மாநிலத்தின் அமைச்சர்என்னையே கைது செய்வீர்களா என்ற ஆவேசமாக பேசியுள்ளார்.ஆனால் யாரும் அறியாத உண்மை என்னவென்றால், அன்றுசெந்தில்பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தவே இல்லை.ஐ.ஓ. என சொல்லக்கூடிய ஐ.ஆர்.எஸ் அதிகாரி கார்த்திக்தாசரி, அன்று இரவு 12.30க்கு தான் செந்தில்பாலாஜியின் தமிழக அரசு பங்களாவுக்கு சென்றுள்ளார். அதற்கு முன்புவரை நடந்தது எல்லாமே, சோதனை தான். 

இவ்வளவு நடந்துவிட்ட பிறகும், செந்தில்பாலாஜியைஇலாகா இல்லாத அமைச்சராக தொடர முதலமைச்சர் ஸ்டாலின்முடிவெடுத்தார். அமைச்சராக செந்தில்பாலாஜி தொடரக்கூடாதுஎன முடிவெடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார். இருப்பினும் சிறிது நேரத்திலேயேஅந்த உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டது. திரும்பபெறவில்லை.

1999 ஆம் ஆண்டு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி Vs மத்திய அரசு என்ற வழக்கில் ஆளுநர் குறித்துமுக்கியமான விஷயத்தை உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.தன் அதிகாரத்துக்கு உட்பட்டதாக கருதும் விஷயத்தில் ஆளுநர்முடிவெடுக்கலாம். அதில் நீதிமன்றம் தலையிடாது, இதைஏன் செய்தீர்கள் எனவும் கேள்வி கேட்காது என தெளிவாக கூறியுள்ளது.அதேபோல அரசியல் அமைப்பு சட்டம் 154வது பிரிவின் படிமாநிலத்தின் ஆளுராக இருப்பவர், தன் அதிகாரத்தைநேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிறைவேற்ற முடியும் என கூறியுள்ளது. Appointing the Chief Ministerஎன்பது அரசியல் அமைப்பு, ஆளுநருக்கு கொடுத்திருக்கக்கூடியசிறப்பு அதிகாரம். பணி அமர்த்த அதிகாரம் இருப்பவருக்குபணியில் இருந்து நீக்க அதிகாரம் இல்லை என்ற கேள்வியும்இத்துடன் சேர்த்தே எழுகிறது.

Discretionary Powers என்ற பிரிவில் ஆளுநருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தையும், நம்மால் புறம்தள்ள முடியாது. தனது அதிகாரத்துக்கு உட்பட்டது தான்என தெரிந்து தான், சட்ட ஆலோசனைகளை கேட்டுசெந்தில்பாலாஜியை டிஸ்மிஸ் செய்திருக்கிறார். இருந்தாலும்அந்த உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது.


பிரதமர் மோடியின் நேரடி தலையீடு காரணமாகவே ஆளுநரின் டிஸ்மிஸ் ஆடர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.ஆயிரம்மடங்கு எதிரியாக இருந்தாலும் நேரடிதொடர்பு என்பது இரண்டு கட்சிகளுக்கும் இருந்தேதீரும். ஏற்கெனவே ஜி-ஸ்கொயர் நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்திய நேரத்தில், யாரும் எதிர்பார்க்காத விடியத்தில் டெல்லி சென்றார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.

இக்கட்டான சூழ்நிலையில் இருவருக்கும் மத்தியில் லாபி செய்யும் தலைகளை நேரடியாக முதலமைச்சர்சந்திக்க திட்டமிட்டிருந்தார். அதுவும் கடைசியில் நடக்கவில்லை.விமானநிலையமாக இருந்தாலும் பரவாயில்லை என்றரீதியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைநேரடியாக ஸ்டாலின் சந்தித்தார். பாஜகவுடன் பேச, அந்த கட்சியின் மூத்த தலைவராக இருந்தஒருவருடன் நேரடி தொடர்பில் இருக்கிறது திமுக.


சென்னையில் தனது மகள் மற்றும் அவரது தொழில்சார்ந்த தொடர்புகளை வைத்திருக்கும், அந்த மூத்த புள்ளி, திமுக தலைமையுடன் நெருக்கமாகவே இருக்கிறார். அவரின் மூலமே சில முக்கியமான செய்தி, பாஜக தலைமையிடம் பறிமாறப்பட்டுள்ளதாகதெரிகிறது. இந்த விவகாரத்தில் அதுவே நடந்திருக்ககூடும்என நம்பப்படுகிறது. அதனால் தான் வழக்குபோட்டுசந்திப்போம் என முழங்கிய திமுக தலைவர்கள் கூடநிறுத்திவைப்பு தகவல் வந்தவுடன் சத்தமில்லாமல் அடங்கிவிட்டார்களாம்.எது இருப்பினும் ஆளுநரின் உத்தரவு நிறுத்திவைப்பு தானே தவிர வாபஸ் அல்ல...