24 special

ஆளை விடுறா சாமி....! செந்தில்பாலாஜிக்கு விழுந்த அடியால் கையெடுத்து கும்பிடும் முக்கிய துறை...!

Senthil balaji, muthusamy
Senthil balaji, muthusamy

தற்போது இலாகா இல்லாத அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சராக இருந்தபோது டாஸ்மார்க் நிறுவனங்களில் நடைபெறாத ஊழலே கிடையாது என்ற அளவிற்கு அரசியல் விமர்சகர்களும், எதிர்க்கட்சிகளும், மக்களும் புகார் கூறி வந்தனர். 24 மணி நேரமும் டாஸ்மார்க் நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும், அரசு குறிப்பிட்ட நேரத்தை தவிர பிற நேரங்களிலும் பார்க்கள் இயங்குவதாகவும் கூறப்பட்டது.


இப்படி பணி நேரங்களைத் தவிர பிற நேரங்களில் இயங்கிய டாஸ்மார்க் கடைகளில் மது பிரியர்கள் மதுக்களை வாங்கி அருந்தியதால் தஞ்சையில் இரண்டு உயிர்களும் பலியானது. இதற்கு முன்னதாகவே அரசாலே மதுபானங்கள் விற்கப்பட்டாலும் அது போதாது என்று கள்ளச்சாராயங்களும் காய்ச்சப்பட்டு சமூக விரோதிகளால் விற்கப்பட்டது. இதனால் பல பேர் உயிரிழந்தனர். 

20 ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் உயிர் இழப்பு என்ற செய்தியும் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. இந்த பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க டாஸ்மார்க் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பத்து ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கூடுதலாக விற்கப்படுகிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்தது.

கரூர் கம்பெனி என்று கூறப்படும் கரூர் கேங் டாஸ்மார்க் ஊழியர்களிடம் மிரட்டி பணத்தை வசூலிப்பதாகவும் அதனாலயே மதுபானங்களுக்கு இப்படி கூடுதல் ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும் டாஸ்மார்க் ஊழியர்களே வெகுண்டு பேசிய வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பானது. 

இன்னும் சில கடைகளில் உள்ள ஊழியர்களே நீங்களாவது இதை வீடியோ எடுத்து போடுங்கள். அப்படியாவது இவர்களது அராஜகம் ஒழியட்டும் என்று வேதனையின் உச்சத்தில் பேசும் அளவிற்கு அந்த வீடியோக்கள் வைரலாக இணையத்தில் உலா வந்தது! இப்படி தொடர்ந்து தமிழகத்தில் டாஸ்மார்க் நிறுவனத்தால் பெரும் அராஜகங்கள் தலை தூக்க ஆரம்பித்த சமயத்தில் வருமானவரித்துறை ஈடுபட்ட ரெய்டு நடவடிக்கையால் டாஸ்மாக் துறையில் சற்று சலசலப்பு குறைந்தது.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு தற்போது இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வருகிறார், மேலும் தன்னை சுற்றிலும் வழக்குகளால் பினையப்பட்டு அடுத்த தீர்ப்பு வந்தால் அவர் கைது என்ற அளவிற்கு அவரது நிலைமை தற்போது நிலவுகிறது. செந்தில் பாலாஜி வகித்திருந்த மதுவிலக்கு ஆயத்திர்வை துறை அமைச்சர் பதவி முத்துசாமிக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் திமுக மேலிடம் டாஸ்மார்க் துறை தான் திமுக அரசிற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி கெடுகிறது என்று உணர்ந்து அதனை சீர்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள உள்துறைச் செயலாளர் அமுதா, டாஸ்மார்க் மேலாண்மை இயக்குனர் விசாகன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் என இந்த மூவர் கூட்டணியை அமைச்சர் முத்துசாமி தன் கையில் வைத்துக்கொண்டு டாஸ்மார்க் நிறுவனத்தில் புதிய செயல் திட்டங்களை கொண்டு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி இயங்கப்படும் டாஸ்மார்க் கடைகளை மூடவும், அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்கப்பட்டால் அந்த ஊழியரை பணியில் இருந்து நீக்கவும், அதோடு ஊழியர்களின் கோரிக்கையாக உள்ள சம்பள உயர்வு, பணி பாதுகாப்பு, மின் கட்டணம், இறக்கு கூலி, உடைந்த பாட்டில்களுக்கு ஆகும் செலவு போன்றவற்றிலும் நடவடிக்கைகளை எடுக்கவும், பில் போட்டு மதுபானங்களை விற்பனை செய்யவும் கணினி மயமாகவும் பல ஆலோசனைகள் இந்த மூவர் கொண்ட அணியுடன் அமைச்சர் முத்துசாமி மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இனி டாஸ்மார்க் நிறுவனத்தால் திமுக அரசுக்கு எந்த ஒரு கெட்ட பெயரும் வரக்கூடாது என்ற வகையில் அமைச்சர் முத்துசாமி இறங்கி வேலை பார்த்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. முன்னதாக செந்தில்பாலாஜிக்கு விழுந்த அடியாலையே தற்போது டாஸ்மார்க் துறையில் இப்படி போன்ற மாற்றங்கள் நடைபெறப் போகிறது என்றும் அரசியல் பார்வையாளர்களும், மக்களும் விமர்சித்து வருகின்றனர்.