Cinema

இப்போது தெரியுதா யார் மிச்சர் சாப்பிடுவது என்று? சூர்யாவை வச்சு செய்யும் சூர்யாவின் பழைய நண்பர்கள்....

actor surya
actor surya

கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தின் போது சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக போராட்டம் ஒன்று நடைபெற்றது, ஜல்லிக்கட்டு தடை விவகாரம் தொடர்பாக குறிப்பாக திமுக காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை கொண்டுவரப்பட்டுவிட்டதே  இனியும் அப்படியே விடக்கூடாது நாம் எப்படியாவது ஜல்லிக்கட்டை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என மாணவர்களும், இளைஞர்களும் அங்கு கூடி போராட்டம் நடத்தினர். அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தது, அதிமுக ஆட்சியில் இருக்கும் பொழுது திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது அந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொள்ள அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சென்றார், நீங்கள் கலந்து கொள்ள வேண்டாம் எனக் கூறி அவரையும் அந்த போராட்டக்களத்தில் இருந்த இளைஞர்கள் திரும்ப அனுப்பினார்கள்.


அதனை தொடர்ந்து அப்பொழுது ஆட்சியில் இருந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீது அதிக அதிருப்தி இருந்தது. இவர் எதுவும் செய்ய மாட்டேன் என்கிறார்! அவரது கட்சி வேலைகளை மட்டும் பார்த்துக் கொள்கிறார் என கூறி அதிருப்தி அலை அதிகமாக வீசியது. ஆனாலும் பிரதமர் மோடி ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தலையிட்டு ஜல்லிக்கட்டுக்கு உள்ள தடையை நீதிமன்றத்தில் சென்று பாஜக தரப்பில் போராடி மீட்டு ஜல்லிக்கட்டு அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. அந்த சமயத்தில் தமிழ் திரையுலகத்திலிருந்து ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பல ஆதரவு குரல்கள் எழுந்தன. 

இப்போது அமைதியாக இருக்கும் நடிகர் சூர்யா அப்போது பெரும் போராளியாக வலம் வந்து கொண்டிருந்தார், அந்த ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் சூர்யா தனது சமூக வலைதள பதிவில் 'இப்பொழுது மிச்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது நாம் தானே நண்பர்களே' என கூறி நக்கலாக பதிவு ஒன்றை வெளியிட்டார். அப்போது அது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக சென்று கொண்டிருந்தது, இந்த நிலையில் தற்போது அதே பதிவை குறி வைத்து சூர்யாவை அதே இடதுசாரிகள் தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அமீரை பற்றி கூறிய விவகாரம் தான் தற்பொழுது தமிழ் திரையுலகத்தில் பேசு பொருளாக மாறி வருகிறது. தயாரிப்பாளர் ஞானவேல்ராஜ் பேசிய பேச்சுக்கு சூர்யா குடும்பத்தை குறிவைத்து இடதுசாரிகள் குறிப்பாக சூர்யாவுடன் இருந்து கடந்த ஆட்சியில் போராளியாக குரல் எழுப்பி வந்தவர்கள் தற்போது சூர்யா குடும்பத்தை எதிர்த்து திட்ட ஆரம்பித்துள்ளனர். 

சூர்யா ஏன் பேசமாட்டேன் என்கிறார்! கார்த்திக் என் பேச மாட்டேன்! என்கிறார் என பல குரல்கள் எழும்பி வருகின்றன. இந்த நிலையில் இப்பொழுது 'சூரியா ஏன் பேசமாட்டேன் என்கிறார், இப்பொழுது மிச்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது சூர்யாவா?' என கூறி சூர்யாவின் பதிவையே மீண்டும் வைரலாக்கி வருகின்றனர் இடதுசாரி இணையவாசிகள். அப்பொழுது சூர்யா செய்தது இப்பொழுது சூர்யாவுக்கு எதிராக திரும்பி விட்டது என கமெண்ட்கள் பறக்கின்றன. ஏற்கனவே இடதுசாரிக்களுடனான பழக்கத்தினால் நாம் மரியாதையை இழந்து விட்டோம், தற்பொழுது யாரிடமும் உதவி கேட்டு நிற்க முடியவில்லை என சிவகுமார் குடும்பம் புலம்பி வரும் நிலையில் இப்படி சூரியாவையும் குறி வைத்து இடதுசாரிகள் மோசமாக திட்டி வருவது இனி சூர்யாவின் திரை வாழ்க்கை முடிவடைந்து விட்டதா என்ற சந்தேகத்தை பல சினிமா உலகை சார்ந்தவர்கள் மத்தியில் விமர்சனங்களை எழுப்ப வைத்து விட்டது. இந்த விவகாரம் அடுத்ததாக வரவிருக்கும் கங்குவா படத்தின் வசூலிலும் எதிரொலிக்கும் என தெரிகிறது.