"பொண்டாட்டி வீட்டிலேயே வாடகைக்கு இருந்தீர்களே" அது போன்றா, கிண்டல் செய்த சிதம்பரதிற்கு அதே மொழியில் பதிலடி கொடுத்த பத்திரிகையாளர்!Cithaparam and narayanan
Cithaparam and narayanan

தமிழகத்தில் பாஜகவிற்கு சொந்த கட்டிடங்கள் கட்டப்பட்டதை முன்னாள் மத்திய அமைச்சர் கிண்டல் செய்து ட்விட்டரில் பதிவிட்ட நிலையில், அவருக்கு ஒரே நாடு இதழின் தலைமை ஆசிரியரும் பிரபல பத்திரிகையாளருமான நம்பி நாராயணன் பதிலடி கொடுத்துள்ளார்.

சிதம்பரம் எந்த மொழியில் பதிலடி கொடுத்தாரோ அவருக்கு புரியும் வண்ணம் அதே மொழிநடையில் பதிலடி கொடுத்துள்ளார் நம்பி நாராயணன். தமிழகத்திற்கு நேற்று வருகை தந்த பாஜக தேசிய தலைவர் நட்டா, அக்கட்சியின் புதிய அலுவலங்ககளை திறந்து வைத்தார்.தமிழகத்தில் பா.ஜ.க,வை பலப்படுத்தும் பணியில், தேசிய தலைமை தீவிரம் காட்டி வருகிறது.இதற்காக, அனைத்து மாவட்டங்களிலும், பா.ஜ.,வுக்கு மாவட்ட கட்சி அலுவலகங்கள் கட்டப்பட உள்ளன.

முதல் கட்டமாக 17 மாவட்டங்களில், மாவட்ட அலுவலகம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. திருப்பூர், நெல்லை, திருப்பத்துார் மற்றும் வாணியம்பாடியில் பணிகள் முடிந்த நிலையில் அதனை அக்கட்சி தலைவர் நட்டா திறந்து வைத்தார், இந்த சம்பவத்தை சூசகமாக கிண்டல் செய்த பா.சிதம்பரம், கட்சி எழும்புகிறதோ இல்லையோ கட்டிடங்கள் எழும்புகின்றது. நான்கு நகரங்களில் மாவட்ட கட்டிடத்தை திறக்கும் கட்சிக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டு இருந்தார்.


இதற்கு பதில் அளித்த நம்பி நாராயணன், பொண்டாட்டி வீட்டில் வாடகைக்கு இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சருக்கு தேசத்துக்கு பாடுபடும் கட்சியைப் பற்றி புரியாது என பதிலடி கொடுத்துள்ளார், அதாவது பா.சிதம்பரம் அமைச்சராக இருந்த காலத்தில் அவரது மனைவி வீட்டில் வாடகைக்கு இருப்பதாக அரசு பணத்தில் வாடகை செலுத்தி வந்தார் என்ற செய்தியை நினைவு படுத்தும் விதமாக பதிலடி கொடுத்துள்ளார் நம்பி நாராயணன்.

எதிர்வரும் உத்திர பிரதேச தேர்தலில் காங்கிரஸ் 5 இடத்தை பிடித்தாலே ஆச்சர்யம் என கருத்து கணிப்புகள் சொல்லிக்கொண்டு இருக்க தமிழகத்தில் பாஜக கட்சி அலுவலகத்தை கிண்டல் செய்யும் சிதம்பரம், பல மாநிலங்களில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சியின் பரிதாப நிலையை நினைத்து பார்க்கவேண்டும் எனவும் சித்தம்பரதிற்கு முறையான பதிலடி கிடைத்து வருகிறது. நம்பி நாராயணன் கொடுத்த பதிலடி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.

Share at :

Recent posts

View all posts

Reach out