Tamilnadu

திருநெல்வேலியில் "பாஜக" அலுவலகம் திறந்ததில் இத்தனை சம்பவம் இருக்கா பிரபல வழக்கறிஞர் பகிர்ந்த தகவல்!

thirunalveli bjp office
thirunalveli bjp office

தமிழகம் முழுவதும் தங்கள் கட்சிக்கு சொந்தமாக அலுவலகங்கள் அமைத்து அதன் மூலம் நிரந்தர பணியாளர்களை கொண்டு கட்சியின் அன்றாட நிகழ்வுகளை நடத்தவும் கட்சியை வளர்க்கவும் பாஜக முடிவு செய்து செயல்பட்டு வருகிறது அதையடுத்து நேற்றைய தினம் பாஜக தேசிய தலைவர் "நட்டா" புதிதாக கட்டப்பட்ட அக்கட்சியின் அலுவலகங்களை திறந்து வைத்தார்.


அதில் திருநெல்வேலியில் கட்டப்பட்ட கட்டிடமும் ஒன்று, இது குறித்து நெல்லையை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் "குற்றாலநாதன்" கட்சி அலுவலகம் எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்ற தகவலை தெரிவித்துள்ளார் அதில், நெல்லை பா.ஜ.க அலுவலக திறப்பு விழா!இன்று விழாவில்  மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் கூறியது போல ஒவ்வொரு தொண்டனின் ரத்தம் சதையோடு பிணைந்தது இந்த அலுவலகம்,ஆம் இப்படி ஒரு அலுவலகம் அமையுமா என எத்தனையோ தொண்டர்களின் பலவருட கனவு!

1996  நான் கல்லூரியில் நுழைந்த காலகட்டம்  அப்போது சட்டமன்ற தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலும் சேர்ந்து நடந்தது. திருநெல்வேலி பாராளுமன்றத்திற்கு திரு.பொன்னையாதேவர் திருநெல்வேலி சட்டமன்றத்துக்கு திரு.சிதம்பரம் பாளையங்கோட்டை சட்டமன்றத்துக்கு திரு.வேலு வேட்பாளர்கள் தற்போது மூவருமே இப்போது இறைவனடி சேர்ந்துவிட்டனர்.

காலையிலேயே டிபன் சாப்பிட்டு வீட்டிலேயே ஒரு தயிர் சாத பொட்டலத்தோடு ஊர் ஊராக சென்று தேர்தல் வேலை செய்த காலத்தில் போஸ்டரை வைப்பதற்கு கூட இல்லாமல் பல தொண்டர்களின் வீடும் , தொழில் செய்யும் இடமும் தான்  இரவுபகலாக அலுவலகமாக இயங்கியது.

பல பொறுப்பாளர்களின் வீட்டு மொட்டை மாடியில் தண்ணீர் தெளித்து தரை சூட்டை குளிர வைத்து கூட்டம் நடக்கும். மண்டபம் பிடிக்க காசு கிடையாது . மொட்டை மாடியில ஒரு 60 வாட்ஸ் குண்டு பல்பு . சில சமயம் கரன்ட் இழுக்க முடியாலைன்னா  மண்ணெண்ணெய் விளக்கு மத்தியில் கூட்டம். எங்கள் வீடு நிரம்ப வாக்காளர் ஜாபிதா,  பூத் சிலிப்,  அதை எழுத 5பேர் என G.கண்ணன் , நடுவை கோபால், பி.எஸ்.மணிகண்டன் போன்றோர் வீட்டிலும் இப்பிடி தான் இருந்தது.இன்னும் பலர் உள்ளனர். 

இதெல்லாம் மூன்று தலைமுறைக்கு முன்பல்ல 25 வருஷத்துக்கு முன்பு.  25 வருஷத்துக்கு அப்புறம் தமிழ்நாட்டுல அதுவும் திருநெல்வேலியில இப்பிடி அலுவலகம் வரும்னு கனவில் கூட நினைத்திருக்க மாட்டோம். நெல்லையில் பெரிய பெரிய கட்சிகளுக்கே கூட இப்படி அலுவலகம் இல்லை. தன்னையும் தன் குடும்பத்தையும் வளர்காமல் கட்சியை சித்தாந்தத்தை வளர்க்க உழைத்த தலைவர்களின் தொண்டர்களின் வியர்வை துளியும் ரத்தமும் இந்த கட்டிடத்தின் சிமெண்ட் கலவையோடு கலந்தது. ஆரம்ப காலத்தில் கட்சி பணியாற்றிய ஆயிரகணக்காண தொண்டர்களே இதன் அஸ்திவாரம். இது தனி நபர் சொத்தல்ல கட்சி அறக்கட்டளை சொத்து. 

 ஒவ்வொரு தொண்டனும் நேரடியாக செங்கல் கூட வாங்கி கொடுக்காவிட்டாலும் கூட இந்த மிக பிரமாண்டமான விருட்சத்திற்கு எங்களை போல பல்லாயிரம் பேர்  என்றோ விட்ட ஒரு குவளை தண்ணீரில் தழைத்தது என்ற ஆனந்த கண்ணீரோடு என குறிப்பிட்டுள்ளார் குற்றாலநாதன். மொத்தத்தில் பாஜக தனது நீண்ட கால திட்டங்களை பட்டியல் போட்டு சரியாக நிறைவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.

more news from tnnews24