24 special

திமுக பைல்ஸ்2 வெளியானால் என்ன ஆகும் என்று தெரியாமல் ...!அதிர்ச்சியில் திமுகவினர்

Annamalai,mk stalin
Annamalai,mk stalin

செந்தில் பாலாஜி தான் ஆரம்பத்தில் அண்ணாமலை திமுகவின் சொத்து பட்டியலை வெளியிடுவதற்கு காரணமாக அமைந்தார். அதாவது செந்தில் பாலாஜி அண்ணாமலை அணிந்திருந்த ரஃபேல் வாட்ச் பற்றி விமர்சிக்க அதன் முழு விவரங்களையும் வெளியிடுவதாக கூறி அதனுடன் திமுகவின் முக்கிய பிரமுகர்களின் சொத்து பட்டியலையும் வெளியிட்டு திமுகவினருக்கு வாழ்நாள்  அதிர்ச்சியை  கொடுத்தார் அண்ணாமலை. முன்னதாக விமர்சனங்கள் எழுந்த பொழுதே  ஏப்ரல் 14ஆம் தேதி ரபேல் வாட்ச் பில்லுடன் சொத்து பட்டியலையும் வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். அதன்படியே அன்றைய தினத்தில் திமுகவில் உள்ள முக்கிய பிரமுகர்களின் வெளிவராத சொத்துக்களின் உண்மை மதிப்பை சென்னையில் வீடியோ பதிவாக வெளியிட்டார். 


அந்த வீடியோ பதிவில் ஜெகத்ரட்சகன், எ வ வேலு, கே.என்.நேரு, கனிமொழி, கலாநிதி மாறன், டி ஆர் பாலு, கலாநிதி வீராசாமி, பொன்முடி, முதல்வரின் மகன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் என்று ஒவ்வொருவரின் தனித்தனி சொத்து மதிப்பை குறிப்பிட்டு இருந்தார் மேலும் இறுதியில் திமுக தலைவர்களின் முதற்கட்ட மொத்த சொத்து மதிப்பு என 1,34,317 கோடி என்று குறிப்பிட்டு பெரும் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டார். இதனால் தமிழக அரசியலே பெரும் ஆட்டம் கண்டுவிட்டது, ஏனென்றால் சொத்து பட்டியலை வெளியிட்டதற்கு பிறகு இந்த சொத்து பட்டியல் வெளியிடுவது இன்றுடன் நிர்க்கப்போவது இல்லை, ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழல்களை பட்டியலாக 2024 ஆம் ஆண்டிற்குள் வெளியிடுவேன் என்று கூறினார். மேலும் இப்படி வெளியிடப்படும் அனைத்து சொத்து மதிப்பும் சிபிஐ இடமும் தகவலாக கொடுக்கப்படும் என்ற கூடுதல் தகவலையும் அன்று கூறி அனைத்து கட்சியினரையும் பதைபதைக்க வைத்தார். 

அண்ணாமலை வெளியிட்ட திமுகவின் சொத்து பட்டியல் திமுகவின் அமைச்சரவை மாற்றும் அளவிற்கு தமிழக ஆளும் அரசின்  நிலைமையை கொண்டு போய் விட்டது. ஒரு வழியாக திமுகவின் அமைச்சரவையை  மாற்றி அனைத்து பிரச்சனைகளையும் ஓரம் கட்டி விட்டோம் என்று திமுகவினர் மூச்சு விடும் சமயத்தில் அண்ணாமலை கர்நாடக தேர்தலில் இருந்து திரும்பி வந்த பிறகு திமுகவின் சொத்து பட்டியல் இரண்டாம் பாகம் ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் என்று கூறி மற்றுமொரு மின்னல் அதிர்ச்சியை அறிவாலயத்திற்கு அளித்தார். தூத்துக்குடியில் நடைபெற்ற பாஜக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேகதாது அணை கட்டுவதற்கான எதிர்ப்பை திமுக அரசு ஒரு போதும் எடுத்து வைக்காமல் இருக்கிறது, இனியும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்து வந்தால் மேகதாது அணை தடுப்பு விஷயத்தை நாங்கள் கையில் எடுத்து அதனை தடுத்து நிறுத்துவோம் அதற்கான ஆற்றல் எங்களிடம் உள்ளது என்று தனது கண்டனத்தை தெரிவித்தார்.

பிறகு திமுகவின் சொத்து பட்டியல் இரண்டாம் பாகம் பற்றி கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதிலளித்த அண்ணாமலை, 'தமிழகத்தில் தற்போது டாஸ்மாக் மூலம் வரும் வருமானங்களே  22 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நடைபெறும் ஊழலை எதிர்த்து ஜூலை 9ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து என் மண் என் மக்கள்  என்பதன் அடிப்படையில் நடைபயணத்தை தொடங்க இருக்கிறோம், அதனுடனே திமுக அரசின் ஊழல் பட்டியலில் இரண்டாவது பாகத்தையும் கண்டிப்பாக வெளியிடுவேன் என்று கூறியுள்ளார். 

முன்னாடி வெளியிட்ட டி எம் கே பைல்ஸ் பார்ட் ஒன்' கே திமுக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டது இந்த நிலையில் டிஎம்கே பைல்ஸின் பார்ட் 2 வெளிவந்தால் என்னென்ன நடக்குமோ என திமுகவினர் பயந்து வருகின்றனர். மேலும் ஏற்கனவே ஒரு பக்கம் வருவாய்த்துறை மற்றொரு பக்கம் அமலாக்கத்துறை இறங்கி திமுகவினரை சுற்றி வளைத்து ரெய்டில் இறங்கி கொண்டிருக்கின்ற வேலையில், இந்த பார்ட் 2  வெளிவருவதால் என்ன செய்வது என்று அறிவாலயத்தில் உள்ளவர்களை தற்போது ஆலோசிக்க வைத்துள்ளது.