பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்ட ஒரு வாரத்திற்குள்ளே அப்போது நிதி அமைச்சராக இருந்த பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ ஒன்றை மூத்த அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். அவரைத் தொடர்ந்து பலரும் அதனை பகிர்ந்து பல பார்வையாளர்களை அது பார்க்க வைத்தது பல கேள்விகளையும் எழுப்பியது. ஏனென்றால் அந்த ஆடியோ பதிவில் அன்றைய நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகிய இருவரின் சொத்து குவிப்பு பற்றி முழுமையாக பேசியிருந்தார். அதாவது உதயநிதி மற்றும் சபரீசன் ஆக இருவரும் ஒவ்வொரு வருடமும் வருமானத்தை அதிக அளவில் குவித்து வைத்துள்ளனர், அது தற்போது முப்பதாயிரம் கோடி அளவிற்கு வளர்ந்து நிற்கிறது, இதை எப்படி சமாளிப்பது என உதயநிதியும், சபரீசனும் யோசித்து வருகிறார்கள் என்று பி டி ஆர் பேசிய வாக்கியங்கள் அதில் இடம் பெற்று இருந்தது.
இந்த ஆடியோ ரிலீசிற்கு பிறகு சிறிது காலம் மௌனம் காத்த பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பிறகு அதில் இருப்பது தன்னுடைய குரல் அல்ல என்று மறுத்தார், அதனைத் தொடர்ந்து முதல்வர் வீட்டிற்கும் சென்று இதனை பற்றி தனது விளக்கத்தை கூறி வந்தார் என்று சொல்லலாம். இதற்கிடையில் அமைச்சவை மாற்றம் திமுகவில் கண்டிப்பாக நடைபெறும் அதிலும் முக்கியமாக நிதியமைச்சர் ஆக உள்ள பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கண்டிப்பாக மாற்றப்படுவார் என்று அரசல் புரசலாக செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக அமைச்சரவை மாற்றமும் நடைபெற்றது. மேலும் இந்த அமைச்சரவை மாற்றத்தில் நிதியமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை மாற்றப்பட்டது. அதோடு இதில் புதிய அமைச்சராக டி ஆர் பி ராஜா பொறுப்பேற்றார் மற்றும் பால்வளத்துறை நாசர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இப்படி தனது அமைச்சரவை மாற்றத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களை மாற்றிய முதல்வர் மு க ஸ்டாலின் தனது வெளிநாட்டு பயணங்களை முடித்து வந்த பிறகு மீண்டும் அமைச்சரவை மாற்றத்தில் ஈடுபடலாம் என்று சில தகவல்கள் வந்துள்ள நிலையில், வருமானவரித்துறையினர் ரெய்டு மற்றும் கள்ளச்சாராய இறப்புகள் போன்றவை அமைச்சரவை மாற்றத்தை துரிதமாக நடந்த முதல்வர் ஸ்டாலினுக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த முறை மூன்று முக்கிய துறைகளில் மாற்றம் இருக்கும் என தெரிகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட மாத இடைவெளியில் முதல்வரின் பார்வைக்கு ஒவ்வொரு துறை சார்ந்த ரிப்போர்ட் உளவுத்துறை வழங்குவது வழக்கமாம். அதன்படி தற்போது கொடுக்கப்பட்ட ரிப்போர்ட்டில் சில துறைகள் பற்றி முக்கியமாக மூன்று துறைகள் பற்றி அதிக அளவு புகார்கள் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
போக்குவரத்து துறை, பால்வளத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறையிலும் தற்போது விவகாரங்கள் வெடித்து வருவதாகவும் தெரிகிறது இந்த மூன்று துறைகளுமே தற்போது முக்கிய துறைகளாக அடுத்து நடக்கவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் பார்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனுடன் கள்ளச்சாராய இறப்புகள் விவகாரத்தால் செந்தில் பாலாஜி பெரும் தலைவலியாக தற்போது அமைந்துள்ளதால் அவர் பெயரும் இந்த அமைச்சரவை மாற்றத்தில் அவர் பெயரும் இடம்பெறும் என்று தெரிகிறது.
மேலும் அடுத்து நடக்க இருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடமிருந்து டாஸ்மாக் துறை கண்டிப்பாக பறிக்கப்பட வேண்டும் என்று மூத்த அமைச்சர்களே திமுக தலைமையிடம் வலியுறுத்துவதாகவும் அப்படி செந்தில் பாலாஜியின் பதவி பறிக்கப்படவில்லை எனில் மூத்த தலைவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட தயாராக உள்ளதாக திட்டமிட்டு உள்ளதால் இந்த முறை செந்தில் பாலாஜியின் பெயர் கண்டிப்பாக அமைச்சரவை மாற்றத்தில் இடம்பெறும் என்றே தெரிகிறது.