24 special

அமலாக்கதுறையின் விசாரணை வளையத்தில் சிக்கி தவிக்கும் நபர்

Mk stalin, udhayanidhi stalin
Mk stalin, udhayanidhi stalin

உதயநிதியின் நெருங்கிய நண்பரை அமலாக்கத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது எனவும், எந்த நேரத்திலும் அமலாக்கத்துறை வசம் உதயநிதியின் நெருங்கிய நண்பர் சிக்கலாம் எனவும் பரபரப்பான தகவல்கள் வெளிவந்த காரணத்தினால் தற்பொழுது ஏற்கனவே ரெய்டு போன்ற நடவடிக்கைகள் காரணமாக அதிர்ச்சியாக இருக்கும் அறிவாலய தலைமை மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளது. முதல்வரின் மகன் மற்றும் திமுகவின் முக்கிய அமைச்சராக வலம் வருபவர் உதயநிதி, இவர் ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி நடத்தி வந்தார். இந்த ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கிட்டத்தட்ட 12 ஆண்டு காலம் 45 படங்கள் மட்டுமே வெளியிட்டிருந்தது. 


ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு இந்த இரண்டு ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்தது இப்படி குறுகிய காலத்திலேயே அதிக படங்களை விநியோகம் செய்த காரணத்தினால் எதிர்க்கட்சிகள் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் திரையுலகை ஆக்கிரமிப்பு செய்து விட்டதாக குற்றச்சாட்டை எழுப்பி வந்தனர். இது மட்டுமல்லாமல் உதயநிதி மற்றும் அவரது நெருங்கிய நண்பரான அண்ணா நகர் கார்த்தி ஆகியோர் சித்திரம் தொலைக்காட்சியை பிளாக் ஷீப் நிறுவனத்திடம் கைமாற்றி பிளாக்ஷிப் டிவி என நடத்துவதற்காக முயற்சி செய்த பொழுது அதற்கான உபகரணங்கள் வாங்கியதில் பிளாக் ஷீப் தொலைக்காட்சியின் மீது ஜிஎஸ்டி வரித்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக, சரியான கணக்கு காட்டாமல் தொலைக்காட்சி உபகரணங்களை வாங்கி உள்ளனர் எனவே இதனை நடவடிக்கை எடுக்க போகிறோம் என கூறிய ரெய்டில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 

இப்படி தொடர்ச்சியாக திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உதயநிதி மற்றும் அவரது நெருக்கமானவர்கள் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை மற்றும் ஜிஎஸ்டி அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருவதும் ஏதேனும் இவர்கள் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டால் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது உதயநிதி நெருங்கிய நண்பர் ஒருவர் அமலாக்க துறையின் கண்காணிப்பு வளையத்திற்குள் சிக்கி உள்ளது முதல்வர் குடும்பத்தை மேலும் அதிச்சியடைய வைத்துள்ளது.

சமீபத்தில், 'லைக்கா' சினிமா பட நிறுவனத்தில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, உதயநிதி அறக்கட்டளைக்கு நன்கொடை என்ற பெயரில் பணம் கைமாறி இருப்பதற்கான ஆவணங்கள் சிக்கின. இதன் பிறகு உதயநிதி அறக்கட்டளை மீது அமலாக்கத்துறை பார்வை பட்டது, யார் அது உதயநிதி அறக்கட்டளையை நிர்வகிப்பது, யாருக்கு சொந்தமானது உதயநிதி அறக்கட்டளை என அமலாக்கத்துறை தீவிர விசாரணையில் இறங்கியது.

பின் பல தகவல்களை அமலாக்கத்துறை கண்டுபிடித்து அறக்கட்டளையை நெருங்கியது. அதன் விளைவாக உதயநிதி அறக்கட்டளைக்கு சொந்தமான, 36.30 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கினர். வங்கி இருப்பில் இருந்த, 34.70 லட்சம் ரூபாயையும் முடக்கினர். ஆனால், அறக்கட்டளை நிர்வாகி பாபு, 'சட்ட விரோத பண பரிமாற்றமே நடக்கவில்லை' என மறுத்துள்ளார். அதனை தொடர்ந்து அமைச்சர் உதயநிதியும் எனக்கும் உதயநிதி அறக்கட்டளைக்கு எந்த சம்மந்தமும் இல்லை என்றார்.

மேலும் உதயநிதி அறக்கட்டளை குறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது: உதயநிதி அறக்கட்டளை அலுவலகத்தில், 12 மணி நேரம் நடத்திய சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கி உள்ளன. அதன் அடிப்படையில் தான், சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளன.

சட்ட விரோத பண பரிமாற்றத்தின் பின்னணியில், உதயநிதியின் நிழல் போல் செயல்படும் நெருங்கிய நண்பர் இருப்பது தெரியவந்துள்ளது. இவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளோம். சென்னையைச் சேர்ந்த இந்த நபரின் வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர். இப்படி உதயநிதியின் நெருங்கிய நண்பர் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் சிக்கி கண்கணிப்பில் இருப்பது முதல்வர் குடும்பத்தை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.