24 special

வெளியானது உத்தேச பட்டியல்! சூடான தேர்தல் களம்!

tamilisai , kanimozhi
tamilisai , kanimozhi

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களில் உள்ள நிலையில் தேர்தலுக்கான நடவடிக்கைகள் அனைத்தும் தமிழகம் மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் கட்சிகள் தீவிரமாக இறங்கி வேலை பார்த்து வருகிறது. மேலும் தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைத்தல் வாக்கு சீட்டு இயந்திரங்களை சரிபார்த்தல் என அனைத்து வேலைகளிலும் தேர்தல் தலைமை ஆணையம் ஈடுபட்டு வருகிறது. நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் 2024 பொருத்தவரையில் பாஜக பெரும்பான்மையான இடத்தை பிடித்து மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்றும் பிரதமராக மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி அமர்த்தப்படுவார் என்பதும் கடந்த சில நாட்களாக வெளிவரும் பிரபல தனியார் பத்திரிகைகளின் கருத்துக்கணிப்பு முடிவுகளாக உள்ளது. ஆனால் மத்தியில் பாஜக கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சி அமைத்ததை போன்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற கூடாது என்பதற்காக இண்டி கூட்டணி மத்தியில் அமைக்கப்பட்டு நாட்டில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் இதற்கு ஆதரவளித்தது.


நாட்டில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு கட்சியை எதிர்க்கும் படியான நடவடிக்கைகளில் ஈடுபட்டதும் பாஜகவிற்கு சற்றும் சரிவை ஏற்படுத்தவில்லை அதற்கு மாறாக இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொடர் சரிவும் பின்னடைவுகளும் ஏற்பட்டு வந்தது. இதனை அடுத்து எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைவதற்கு ஆரம்ப புள்ளியாக இருந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இண்டி கூட்டணியில் இருந்து வெளியேறினார்! இவரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இருந்த சிலர் தற்போது பாஜகவில் இணைய உத்தேசம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் சில முக்கிய புள்ளிகள் ஏற்கனவே இணைந்து விட்டனர். இப்படி கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ள முடிவுகளுக்கு ஏற்ப அரசியல் சூழலும் நிலவி வருவது பாஜகவின் வெற்றியை உறுதி உள்ளது. இதனால் தேர்தலுக்கான நடவடிக்கைகளில் அடுத்த கட்ட நடவடிக்கையாக வேட்பாளர்கள் அறிவிப்பு தான் நடைபெறும் அதன்படி தமிழகத்தில் மிக முக்கிய கட்சிகளாக உள்ள திமுக, காங்கிரஸ், பாஜக, அதிமுக போன்ற கட்சிகள் யாரை வேட்பாளராக எந்த தொகுதிகள் நிறுத்தலாம் என்பது குறித்த உத்தேச பட்டியல்களை தற்போது இணையத்தில், கட்சி வட்டாரங்களில் அதிகமாக உலா வருகிறது.

அதன் படி தென் சென்னையின் எம் பி வேட்பாளராக திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி, மக்கள் நீதி மய்யம் சார்பில் கமலஹாசன், அதிமுக சார்பில் ஜெயவர்த்தன் மற்றும் பாஜக சார்பில் எஸ் ஜி சூர்யா அல்லது கரு நாகராஜன் அல்லது மைத்ரேயன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதேபோன்று திருநெல்வேலியில் திமுக சார்பாக கிரகாம்பெல் அல்லது பூங்கோதை ஆவடி அருணா அல்லது அலெக்ஸ் அப்பாவும் போன்றோரும் காங்கிரஸ் சார்பாக ராமசுப்பு மற்றும் பீட்டர் அல்போன்ஸ், அதிமுக சார்பாக பால் துறை, ஏ கே ராஜன், தேவா கேப்ரியல் ஜெப ராஜன்  எனவும் பாஜகவில் நயினார் நாகேந்திரன் அல்லது தமிழிசை சௌந்தரராஜன் அல்லது அன்னபூர்ணா போட்டியிட வாய்ப்பிருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் பாஜகவிடம் சமத்துவ மக்கள் கட்சி சார்பாக சரத்குமார் அந்த தொகுதியை கேட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. 

இதேபோன்று கன்னியாகுமரியில் காங்கிரஸில் விஜய் வசந்த் அதிமுகவில் நசரேத் பசிலியான், பாஜகவில் பொன் ராதாகிருஷ்ணன் அல்லது தமிழிசை சௌந்தர்ராஜன் அல்லது ஐயப்பன் ஆகியோர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பாக கனிமொழி அல்லது ஜோயல், அதிமுக சார்பாக சுதாகர் அல்லது ஆண்ட்ரூஸ் மணி அல்லது தியாகராஜ நட்டர்ஜி, பாஜக சார்பாக சசிகலா புஷ்பா அல்லது சித்ராங்கதன் அல்லது ராஜ கண்ணன் அல்லது விவேகம் ரமேஷ் ஆகியோர்களின் எவரேனும் ஒருவர் ஒரு கட்சி சார்பாக வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று உத்தேச பட்டியல் வெளியாகி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.