24 special

பிரதமர் உயிருக்கு கெடுவைத்த பஞ்சாப் விவசாயி! பகீர் பின்னணி...

modi, punjab
modi, punjab

பஞ்சாப்பை சேர்ந்த விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் சட்டபூர்வமாக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி செல்கின்ற பேரணியை கடந்த செவ்வாய்க்கிழமை முன்னெடுத்தனர். ஆனால் இவர்கள் டெல்லிக்குள் செல்ல முடியாதபடி போலீஸ் பேரணியை ஹரியானா எல்லையிலே தடுத்தனர். இதற்காக ஹரியானா எல்லையில் சிமெண்ட் தடுப்புகள் முள்வேலி படுக்கைகள் துணை இராணுவத்தினர் போலீசார் என பல அடுக்கு பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதோடு பேரணியை அமைதி படுத்தவும் போராட்டக்காரர்களை தடுக்கவும் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர். இருப்பினும் பஞ்சாப் ஹரியானாவின் எல்லையில் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகளின் போராட்டம் இன்னும் நீடித்து வருகிறது.


போராட்டம் நடைபெற்று வரும் அதே சமயத்தில் விவசாய சங்கத்தினுடன் மத்திய வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா, வணிகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல், உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தராய் ஆகியோர் மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் டெல்லியை நோக்கி செல்லும் விவசாயிகளின் பேரணி போராட்டத்தை தொடர்ந்து வந்ததும் பேரணியை தடுத்து நிறுத்த ஹரியானா போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் அதன் தாக்கத்தை குறைக்க விவசாயிகள் தண்ணீர் பாட்டில்கள், ஈர உடைகளை தடுக்கும் உபகரங்களாக பயன்படுத்தி வருகின்றனர் இதனால் தேசிய தலைநகர் கடும் போக்குவரத்து நெரிசலை சந்தித்தது. 

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் சில விவசாயிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான அச்சுறுத்தல் கொடுக்கும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதாவது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிரான கோபத்தில்  பிரதமர் மோடி பஞ்சாபில் காலடி எடுத்து வைத்தால் அவருக்கு பாடம் கற்பிக்கப்படும் என்றும் அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என பிரதமர் மோடியை அச்சுறுத்தும் வகையிலான பல வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவியது, இதற்கு பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இருப்பினும் தற்போது பிரதமர் மோடிக்கான அச்சுறுத்தல் குறித்த வீடியோக்கள் மேலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

அதாவது இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் பிரதமர் மோடி நிச்சயமாக கொல்லப்படுவார் மோடிக்கு கொல்லப்பட்டார் என்ற செய்தியை நீங்கள் கேட்பீர்கள் என பஞ்சாப் விவசாயிகள் வெளிப்படையாக மிரட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவுகிறது. இருப்பினும் அந்த வீடியோவின் உண்மைத்தன்மை இன்னும் கண்டறிய படாததால் பலர் அந்த வீடியோவில் பிரதமரை அச்சுறுத்தும் வகையில் பேசியதற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பஞ்சாபில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அரசாங்கம் பிரிவினைவாத சித்தாந்தத்தை தனது மாநிலத்தில் சுதந்திரமாக இயக்க அனுமதி விதித்துள்ளது என்று பல தரப்பிலிருந்து விமர்சனங்களும் கண்டனங்களும் குவிக்கிறது. அதோடு நாட்டின் பிரதமரை குறித்து தங்கள் மாநிலத்திலிருந்து இப்படி ஒரு மிரட்டல் செய்தி விடுக்கப்பட்டுள்ளது இதற்கு இன்னும் நீங்கள் மௌனம் காத்து வருகிறீர்கள் என்று கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர்.

அதாவது இன்னும் 2-3 ஆண்டுகளில் பிரதமர் மோடி கொல்லப்படுவார் - ஒரு விவசாயி போல் காட்சியளிக்கும் ஜிகாதி என்று கூறப்படுகிறார். இது போன்ற விஷயங்களை எப்போது வரை பொறுத்துக்கொள்வோம்? நாட்டின் பிரதமருக்கு பகிரங்க அச்சுறுத்தலை ஏற்க முடியாது. இது தான் பேச்சு சுதந்திரமா??? என்றும் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் பகவந்த்மான் ஆகியோரால் ஆதரிக்கப்படும் இந்த காலிஸ்தானி ஆதரவாளர்கள் இன்னும் 2-3 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி கொல்லப்படுவார் என்று வெளிப்படையாகக் கூறுகிறார்கள். தயவு செய்து பஞ்சாப் சட்டசபையை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை விதித்து இந்த பயங்கரவாதிகளை நசுக்கவும் என மத்திய அமைச்சர்களான அமித்ஷா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு கோரிக்கை வைப்பது போன்ற பதிவுகளும் இடப்படுகிறது.