24 special

என்னடா இது சிறுத்தை காத்து தாமரை பக்கம் அடிக்குது...? மாறும் அரசியல் களம்...!

annamalai, thirumavalavan
annamalai, thirumavalavan

I.N.D.I.A கூட்டணியில் தற்போது மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சில தகவல்கள் கசிகின்றன. குறிப்பாக கடந்த வாரம் சோனியா காந்தி திமுக ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றிக்காக சென்னை வந்து சென்றார், சென்னை வந்து சென்ற பிறகு திமுகவிலிருந்து தமிழக காங்கிரஸ் கட்சிக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் காரணத்தினால் இது சரியாக வராது என்பது போன்ற கருத்தை தெரிவித்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்கள் முன்பு பாஜக அதிமுக கூட்டணி உடைந்த பிறகு கண்டிப்பாக தமிழகத்தில் இருக்கக்கூடிய கட்சிகள் கூட்டணி மாறலாம் என பேச்சுக்கள் எழுந்தன.


இந்த நிலையில் I.N.D.I.A கூட்டணியில் தமிழகத்தில் முக்கிய இடத்தில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை இன்று நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது போது மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக அமைப்பு பொதுச்சாளர் கேசவ விநாயகம் உடன் இருந்துள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மறைந்த பங்காரு அடிகளார் மறைவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் சென்று அவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்றார்.

அப்பொழுது அவர் சென்று விட்டு திரும்பி வரும் பொழுது பாஜக சார்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் பங்காரு அடிகளார் குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்றனர். அப்பொழுது இருவரும் எதிரே சந்தித்துக் கொண்டனர், குறிப்பாக தமிழகத்தின் அரசியலில் இரு துருவங்களாக இதுவரை இருந்து வந்த அண்ணாமலை மற்றும் திருமாவளவன் சந்திப்பு பல அரசியல் பிரமுகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது, இந்த சந்திப்பின் பின்னணியை பாஜக தரப்பில் விசாரித்த பொழுது எதேச்சையாக நடந்த சந்திப்பதுதான் மற்றபடி இந்த சந்திப்புக்கு அரசியல் காரணம் எதுவும் இல்லை என கூறினார்கள். 

விசிக தரப்பில் கேட்ட பொழுது 'எதிரே வரும்பொழுது அகதற்காக முகத்தை திருப்பி கொண்டா செல்ல முடியும்' என கூறப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பின் பின்னணி, இந்த சந்திப்பு அடுத்த கட்டமாக எது போன்று அரசியல் நிகழ்வுகளில் மாற்றம் ஏற்படுத்தும் என சில அரசியல் விமர்சகர்களிடம் கேட்ட பொழுது 'திருமாவளவன் தற்பொழுது எந்த நிமிடம் வேண்டுமானாலும் திமுக கூட்டணியில் இருந்து பிரிந்து விடலாம் என்ற சூழலில் இருந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் ஒன்று அதிமுக கூட்டணி செல்வார், அடுத்தபடியாக வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கக்கூடிய பாஜக கூட்டணிக்கு திருமாவளவன் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை! ஏனெனில் கடந்த இரண்டு முறை தேர்தலில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இருந்து கொண்டு எதிர்க்கட்சி எம்பியாகத்தான் இருந்து வருகிறார். 

திருமாவளவன் பாஜகவுடன் சேரும் பட்சத்தில் கண்டிப்பாக திருமாவளவனுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருக்கும் அப்படி இருக்கும் சூழலில் திருமாவளவன் ஏன் பாஜக கூட்டணியை யோசிக்க கூடாது? என்ற கேள்வியை முன்வைக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். ஆனால் இந்த சந்திப்பு குறித்து இதுவரை திருமாவளவனோ அல்லது அண்ணாமலையோ எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் இன்னும் தேர்தலுக்கு 6 மாத காலம் மட்டுமே இருப்பதால் கூட்டணி மாறுதல்கள் நடக்க இருக்கும் சமயத்தில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது...