24 special

இறங்கியது அமலாக்கத்துறை சிக்கப்போகும் திமுக முக்கிய புள்ளிகள்.. அரசியலில் அதிரடி திருப்பம்..!

Jaffer, ED
Jaffer, ED

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கு ரூ.2,000 கோடி ரூபாய் வரை போதை பொருள் கடத்தி வருமானம் ஈட்டி ஜாபர் சாதிக் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவரது வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.


திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் இவர், தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை தயாரித்து வந்தவர். டெல்லியில் போதை பொருள் கடத்தல் கும்பலில் ஒருவராக ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக ஜாபர் சாதிக் செயல்பட்டதாகவும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களை ஹெல்த் மிக்ஸ் பவுடர் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து கடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி திமுக ஆட்சிக்கு பெரும் அளவில் விமர்சனமும் களங்கமும் ஏரியார்படுத்தியது.

மேலும், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக என்.சி.பி அதிகாரிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. என்.சி.பி அதிகாரிகள் முன்னதாகவே ஜாபர் சாதிக் விவகாரத்தில் சினிமா துறையில் பலருக்கும் தொடர்பு இருப்பதாக சூசகமாக தகவல் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து டெல்லி என்.சி.பி அதிகாரிகள் இயக்குனரும் நடிகருமான அமீர்க்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகி வந்தார். அதன் தொடர்ச்சியாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜாபர் சாதிக் வீடு, அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடு, அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.

இதன்  மூலம் ஜாபர் சாதிக் மற்றும் அரசியல் முக்கிய தலைகள் சிக்கலாம் என கூறப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று திகார் சிறையில் இருந்த ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், அவரை விரைவில் சென்னை நீதிமன்றதில் ஆஜராகி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என தெரியவந்துள்ளது. ED கஸ்டடியில் ஜாபர் சாதிக் விசாரணையின் போது போதைப்பொருள் கடத்தியது தொடர்பாக யார் யார் பின்னணயில் இருந்தார்கள் என்றும் அந்த பணத்தை யாருக்கு கொடுத்தார் என்றும் போதை பொருள் கடத்த உறுதுணையாக இருக்கும் முக்கிய புள்ளிகள் யார் என்ற அனைத்து விவகாரமும் தெரியவரும் என எதிர்பார்கப்படுகிறது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது என்பது திமுகவில் இருக்கும் முக்கிய தலைகளுக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாம். விரைவில் ஜாபர் சாதிக்கை சென்னைக்கு கொண்டு வந்து காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அனுமதி கோரி அடுத்தகட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.