Cinema

ஒரே ஒரு நிகழ்ச்சியில் மொத்த வாழ்க்கையும் மாறிப்போனது.... கண்ணீரில் மூழ்கிய சரிகமப!!

ZEETAMIL, SINGER SWETHA
ZEETAMIL, SINGER SWETHA

ஒரு குழந்தையை பெற்றெடுக்க பத்து மாதங்கள் சுமந்து அதற்குப் பிறகும் கண்ணும் கருத்துமாக பார்ப்பதற்கு அம்மா தேவை என்றால் ஒட்டுமொத்த குடும்பத்தையும் தாங்கி சுமப்பதற்கு தந்தை தேவைப்படுகிறார். மேலும் அந்த குழந்தை உலகத்தை குறித்து விசாலமாக அறிந்து கொள்வதற்கும் தந்தையின் வழிகாட்டுதலும் பாசமும் தேவைபடுகிறது. அதுமட்டுமின்றி பெண் குழந்தை என்றாலே அப்பாவிற்கு செல்ல பிள்ளைகள் தான் அம்மாவிடம் பகல் முழுவதும் வாங்கும் திட்டுக்களையும் அம்மாவுடன் போட்டுக் கொள்ளும் சண்டைகளையும் மாலை அப்பா வந்தவுடன் ஓடிச் சென்று கூறி அம்மாவிற்கு திட்டு வாங்கி கொடுக்கும் பல மகள்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது ஒரு குடும்பத்தில் நடக்கும் மகிழ்ச்சியான மற்றும் அழகான தருணங்கள். ஆனால் சில குழந்தைகளுக்கு அப்பாவின் கண்டிப்பு மட்டுமே கிடைக்கிறது. அப்பாவின் பாசத்தை பார்க்க முடியாமலும் ஏங்கி தவிக்கின்றனர்.


ஏனென்றால் கண்டிப்புடனும் தங்கள் பாசத்தை மறைத்து வைத்துமே சில அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். அப்படி வளர்த்த தன்மகள் தன் அப்பாவின் பாசத்திற்காக இத்தனை வருடங்களாக ஏங்கி தவித்துள்ளார் என்பதை பல வருடங்கள் கழித்து ஒரு தந்தை அறிந்து கொள்கிறார் என்றால் அவரது நெஞ்சம் நிச்சயமாக உருக்குலைந்து விடும் என்பதை விளக்கும் சம்பவம் ஒன்று சமீபத்தில் நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சியாக வளர்ந்து வந்து கொண்டிருக்கும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல சின்னத்திரை தொடர்கள் பல குடும்பப் பெண்களின் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த சேனலில் ஒளிபரப்பாகப்படும் நம்பர் ஒன் ரியாலிட்டி ஷோவான சரிகமப நிகழ்ச்சியும் பலரின் வரவேற்பையும் கவனத்தையும் பெற்றது. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் தொடங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சி மொத்தம் 23 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த ரியாலிட்டி ஷோவில் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் புது புது செக்மென்ட் மற்றும் ரவுண்டு நடைபெற்று வரும் இந்த ரியாலிட்டி ஷோவில் கடந்த வாரம் டெடிகேஷன் ரவுண்டு நடைபெற்றது. அந்த ரவுண்டில் ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு பாடலை தேர்வு செய்து அதனை தனக்கு பிடித்தவருக்கு டெடிகேட் செய்ய வேண்டும் அப்படி அந்த நிகழ்ச்சியின் போட்டியாளரான ஸ்வேதா என்பவர் தனது அப்பாவிற்கு ஒரு பாடலை டெடிகேட் செய்வதாக கூறி ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்ற பாடலை பாடி அரங்கத்தையே அதிர வைத்தார். மேலும் இந்தப் பாடலை இவர் பாடுவதற்கு முன்பாக தனது அப்பாவிற்கு ஒரு கடிதம் எழுதி இருப்பதாகவும் கூறி எனது அப்பாவை மேடைக்கு அழைத்து அந்த கடிதத்தை அவரையே படிக்க வைத்தார்.

அப்படி தன் மகள் கொடுத்த கடிதத்தை அவர் படிக்க ஆரம்பித்தார், அதில் எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் ஆனா உங்களுக்கு என்ன பிடிக்குமா? பிடிக்காதா என்று இதுவரைக்கும் எனக்கு தெரியவே தெரியாது நீங்க என்கிட்ட இதை சொன்னதும் கிடையாது, பாசத்தை காட்டி ஏதும் கிடையாது என குறிப்பிட்டு இருந்ததை அந்த தந்தை படித்த உடனேயே கண்ணீரில் வாயடைத்து போய்விட்டார் இதனை அடுத்து முழு கடிதத்தையும் அவரது மகளான ஸ்வேதா படித்து முடிக்க நிலை குலைந்து போன அந்த தந்தை தன் மகளின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதோடு இத்தனை வருடங்களாக உன்னை இவ்வளவு ஏங்க வைத்து விட்டேன் என்று அரங்கம் முழுவதையுமே கண்ணீர் ஆழ்த்திவிட்டார். இதனை அடுத்து ஸ்வேதா தனது நீண்ட நாள் ஆசையாக தன் தந்தையிடம் இருந்து முத்தம் மற்றும் அரவணைப்பை  பெற்றுக் கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் தனது மொத்த வாழ்க்கையும் மாறிவிட்டதாகவும் ஆனந்த கண்ணீரோடு ஸ்வேதா பேசியது பலரது மனதையும் பாசத்தில் கட்டி போட்டு விட்டது.