கடந்த அக்டோபர் மாதம் 12ம் தேதியில் சென்னை மற்றும் கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய ஏழு இடங்களில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சிக்கிம் மாநில அரசு லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்று வருமானம் ஏற்றியதாக கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் மீது புகார் எழுந்தது, இதனை அடுத்து 2019 ஆம் ஆண்டு வருமானவரித்துறை அதிகாரிகள் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.
இந்த லாட்டரி வியாபாரத்தில் முறைகேடாக 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதையும் அந்த பணத்தை நாற்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மார்ட்டின் முதலீடு செய்து கணக்கில் காட்டாமல் மறைத்திருப்பதாகவும் புகார் அடிப்படையில் சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
மார்ட்டின் லாட்டரி அதிபருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தியதில் 2021ல் மொத்தம் 277.59 கோடி 2022 இல் 173.48 கோடி மதிப்புகளில் பல இடங்களில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ஏற்கனவே முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத் துறையினர் இணைந்து கோவையில் மாட்டின் வீடு மற்றும் அவரோடு தொடர்புடைய இடங்களில் அக்டோபர் 12ஆம் தேதி ஆகிய இரு நாட்கள் ரெய்டு நடத்தினர்.
இந்த நிலையில் இன்று காலை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டு வருமானவரித்துறையால் மேற்கொள்ளப்பட்டது. இந்த ரெய்டு எ.வ.வேலுவுக்கு சொந்தமான 40 இடங்களில் நடந்ததாகவும் மற்றும் அவருக்கு நெருக்கமானதாகவும் அவரிடம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட அனைத்து இடங்களிலும் வருமானவரித்துறையினர் ஒரே நேரத்தில் நெருங்கி சோதனை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் கோவையில் எ.வ.வேலுக்கு மிகவும் நெருக்கமான மீனா ஜெயக்குமார் வீட்டிலும் ரெய்டு தீவிரமாக நடந்து வருகிறது.
கோவையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் மீனா ஜெயக்குமார் மற்றும் அவரது கணவர் ஆகியோர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு பணத்தின் முதலீடுகள் இருக்கிறதா அப்படி இருந்தால் எவ்வளவு கோடி ரூபாய் இருக்கிறது? எத்தனை கோடி கணக்கில் காட்டப்படாமல் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது? என கண்டுபிடிப்பதற்காக இந்த ரெய்டு நடத்தப்படுவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட மார்ட்டின் லாட்டரி ஏஜென்சிஸ் நிறுவனத்திற்கும் இந்த மீனா ஜெயக்குமாருக்கும் சிறு தொடர்பு இருப்பதாக சில செய்திகள் கசிந்துள்ளது, அதாவது லாட்டரி மனைவி லீமா ரோஷம் மீனா ஜெயக்குமாரும் மிக நெருங்கிய தோழிகளாம், இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக இருக்கும் காரணத்தினால் ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் நடந்த ரெய்டுக்கும் இன்று நடக்கும் ரெய்டிற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? அப்பொழுது ரெய்டு நடத்தும் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் தான் இப்பொழுது ரெய்டு நடத்தப்படுகிறதா? அல்லது மீனா ஜெயக்குமார் ஏற்கனவே லாட்டரி ரெய்டில் கிடைத்த ஆவணங்கள் மூலமாக சிக்கி தற்பொழுது எ.வ.வேலு வரை விவகாரம் நீடித்துள்ளதா என பல கேள்விகள் எழுந்துள்ளது.
இது குறித்து பல விமர்சனங்களும் இணையத்தில் முன்வைக்கப்பட்டு வருகிறது, இருப்பினும் வருமான வரித்துறை ரெய்டு முடித்து இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் ரெய்டு முடியும்போது கண்டிப்பாக இதுகுறித்து விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..