தமிழகத்தில் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்வது தொடர்கதையாகி விட்டது. இதன் ஒரு பகுதியாக சென்னை அரசுப் பேருந்து படிக்கட்டில் தொங்கிய பள்ளி மாணவர்கள் மற்றும் நடத்துனரை தட்டி கேட்டவருக்கு தமிழக அரசு கொடுத்த பரிசு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை குன்றத்தூர் அருகே நேற்று மாலை அரசு பேருந்தில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் பயணம் செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த சின்னத்திரை நடிகையும் பாஜக பிரமுகரான ரஞ்சனா நாச்சியார் அந்த அரசு பேருந்தை வழிமறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
படியில் தொங்கியபடி பயணம் செய்ததைக் கண்டித்த அவர், இறங்க மறுத்த மாணவர்களை அவர் அடித்தார்.மேலும் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கண்டித்தார். அதாவது, இப்படி மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்வதால் ஆபத்து நேரும் என்று உங்களுக்கு தெரியாதா? மாணவர்களிடம் அறிவுறுத்த மாட்டீர்களா? என்று நடத்துனரிடம் கோபத்தை வெளிப்படுத்தினார். இதனை சிலர் வீடியோ எடுத்து சமூக தளத்தில் பதிவிட்டனர்.
இந்த வீடியோவை கண்ட சிலர் நடிகை ரஞ்சனா செய்தது சரி என்று பாராட்டி வந்தனர். இதற்கு மாறாக சிலர் மாணவர்களை ஏன் அடித்தார்?, நடத்துனரை பணி செய்யவிடாமல் அவர் தடுக்கிறார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் நடிகை ரஞ்சனா மீது காவல் நிலையத்தில் புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் மாங்காடு போலீஸார் ரஞ்சனாவை அவரது வீட்டுக்கே சென்று கைது செய்தனர். மாணவர்களைத் தாக்கியது, அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யவந்த காவல்துறையினருடனும் நடிகை வாக்குவாதம் செய்தார். கைது ஆணை இருக்கிறதா? என்ன காரணத்துக்காக கைது செய்கிறீர்கள்? என்றெல்லாம் வினவினார். அந்தக் காட்சிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட நடிகை ரஞ்சனா நாச்சியார் தமிழக பாஜகவிலும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தின் பல இடங்களில் போதிய பேருந்து வசதி இன்றி படிக்கட்டுகளில் பயணம் செய்யும் அவல நிலை தொடர்கிறது.
இதுற்குறித்து கோரிக்கை வைத்தாலும் தமிழக அரசு கண்டுகொள்வதில்லை. இருப்பினும் சென்னையில் மாணவர்களின் உயிரை பொருட்படுத்தி நடிகை நிரஞ்சனா கேட்டதால் அவர் மீது வழக்கு பதிவு செய்வது எந்த விதத்தில் நியாயமாகும் என்று கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசு இதனை அரசியில் காழ்புணர்ச்சியில் பார்ப்பதாக குற்ற சாட்டை அரசியல் விமர்சகர்கள் முன் வைத்து வருகின்றனர்.