24 special

டெபாசிட்டை இழந்த அதிமுக...... இரண்டாம் கட்ட தலைவர்களிடம் தலைமையில் இருந்து போன செய்தி... யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ரகசியமாக எடப்பாடி செய்த காரியம்...!!

EDAPADI, PMMODI
EDAPADI, PMMODI

தமிழகத்தில் சினிமா மற்றும் அரசியலில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியவர் எம்ஜி ராமச்சந்திரன். இவருக்கு சினிமாவில் மக்கள் கொடுத்த ஆதரவிற்காக திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இணைந்து அரசியலில் ஈடுபட்டு வந்தார். அதற்கு பிறகு மக்களுக்கு நேர்மையாகவும் ஊழலற்ற ஆட்சியை வழங்க வேண்டும் என்பதற்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை 1972 அன்று மதுரையில் நிறுவினார். இந்த கட்சிக்கும் எம்ஜிஆருக்கும் மக்கள் கொடுத்த பேராதரவை என்றும் நம்மால் மறக்க முடியாது அப்படிப்பட்ட செல்வாக்கை மக்கள் மத்தியில் கொண்டு இருந்தார். அவரது காலத்திற்குப் பிறகு ஜெயலலிதாவும் துவண்டு கிடந்த அதிமுகவை தூக்கி நிறுத்தியதோடு தமிழகத்தில் பெரும்பான்மையான ஒரு கட்சியாகவும் அதிமுகவை வலுப்பெறச் செய்து மக்களின் அம்மாவாக திறம்பட செயலாற்றினார். 


ஆனால் எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு எப்படி ஒரு திண்டாட்டத்தில் அதிமுக விடப்பட்டதோ அதேபோன்று ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு அதிமுக பெரும் திண்டாட்டத்தில் சிக்கியதோடு சிதறு தேங்காய் போல உடைந்து விட்டது. 2017ல் எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும் ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும் பொறுப்பேற்கப்பட்டார். அதற்குப் பிறகு நடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சரிவை சந்திக்க அதிமுகவிற்குள் உட்கட்சி பூசல் அதிகரித்து இரண்டு அணியாக பிரிந்தது. ஆனால் 2022 அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்து வருகிறார். மேலும் எடப்பாடி பழனிசாமியின் அணிக்கே கட்சியின் சின்னமும் பெயரையும் பயன்படுத்துவதற்கான உரிமை இருந்து வருகிறது. இருப்பினும் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவின் வரலாற்றிலேயே காணாத பல சருக்களையும் பின்னடைவையும் கண்டுள்ளது. முன்னதாக நாடாளுமன்ற தேர்தலை மத்தியில் ஆளும் தரப்பில் இருந்த பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வந்த அதிமுக பாஜக உடனும் பல வாக்குவாதம் மற்றும் ஏற்பட்ட உரசல்களால் பாஜகவின் கூட்டணியையும் முறித்துக் கொண்டது.

இதற்கு மிக முக்கிய காரணமாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசினார், அதன் காரணமாகவே இந்த கூட்டணி முடிவுக்கு வருகிறது என அதிமுக தரப்பில் கூறப்பட்டாலும் 2024 லோக்சபா தேர்தலில் பாஜக அதிமுகவிற்கிடையே 20/20 என்ற தொகுதி பங்கீட்டுக்கு அதிமுக ஒத்துவராமல் இந்த முடிவை எடுத்ததாகவும் மற்றொரு தரப்பில் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தேர்தல் அறிவிப்புகளுக்கு பிறகு அதிமுக கூட்டணி ஏதும் அமைக்காமல் மத்தியிலும் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைத்துக் கொள்ளாமல் தேர்தலை சந்தித்தது. அதோடு கடைசி நேரத்தில் தேமுதிக உள்ளிட்ட மூன்று கட்சிகளோடு கூட்டணி அமைத்துக் கொண்டு 32 தொகுதிகளில் நேரடியாக களம் கண்டது. மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது அதிமுக இந்த முறை பல தொகுதிகளிலிருந்து எம்பிகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்பப் போகிறது என எடப்பாடி பழனிச்சாமி சூளுரைத்ததும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது. 

ஆனால் தற்போது வெளியான தேர்தல் முடிவுகளை பார்க்கும் பொழுது இனி அதிமுக என்ன ஆகும் என்பது கேள்விக்குறியாக மாறி உள்ளது. அதாவது தமிழ்நாட்டில் 32 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக தென் சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர் மற்றும் தேனி ஆகிய ஏழு தொகுதிகளில் டெபாசிட்டை இழந்து, ஒன்பது தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கும் மூன்று தொகுதிகளில் நான்காவது இடத்திற்கும் தள்ளப்பட்டு பெருத்த ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. அதே சமயத்தில் இதுவரை இல்லாத வகையில் தனி கட்சியாக பாஜக எதிர்கொண்ட இந்த தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் இரண்டாம் இடத்தில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பாஜகவின் வாக்கு வங்கி தமிழகத்தில் உயர்ந்துள்ளதையும் அதிமுகவின் வாக்கு வங்கியானது டெபாசிட்டை இழக்கும் வகையில் குறைந்துள்ளதையும் பார்க்க முடிகிறது. இனி அதிமுகவின் நிலைமையை யோசிக்கும் பொழுது மிகவும் பரிதாபமாக இருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் இந்த தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு அனைத்து அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களையும் அழைத்து எடப்பாடி பழனிசாமி ஒரு சந்திப்பு நடத்தியுள்ளதாகவும் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என ஆலோசனை நடத்தி வருவதாகவும் வேறு சில தகவல்கள் அதிமுக வட்டாரத்தில் இருந்து கசிந்துள்ளன....