நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியான நிலையில், இந்திய அளவில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதி மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் தனித்து போட்டியிட்டது. தேர்தல் முடிவுககளை பொறுத்தவரை 40 தொகுதியையும் திமுக கூட்டணி கைப்பற்றியது.
பாஜக தலைமையிலான எண்டிஏ கூட்டணி 290 இடங்களிலும், இந்தியா கூட்டணி கட்சிகள் 235 இடங்களை பெற்றது. அண்டை மாநிலமான தெலுங்கானாவில் மக்களவை தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. ஆந்திராவில் மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 88 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 136 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஆளும் கட்சியான ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எதிர்கட்சி அந்தஸ்தை இழந்தது.
அதில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்றார் வரும் ஜூன் 12ம் தேதி அந்த மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இந்த நிலையில், நடிகரும் தமிழக வெற்றி கழக கட்சி தலைவருமான விஜய். சந்திரபாபு நாயுடு வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் தமிழக வெற்றி கழக எக்ஸ் தளத்தின் வாயிலாக பவன் கல்யாண் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். பல அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் விஜய்யின் இந்த வாழ்த்து சற்று உற்றுநோக்கி உள்ளது தமிழக அரசியல் வட்டாரங்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் அரசியலிலும் இந்த ஆண்டில் நுழைந்தார். விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார். விஜய்யின் அரசியலுக்கு ஆரம்பத்தில் ஆதரவு கொடுத்து வந்தாலும் தற்போது வரை கட்சியின் கொள்கை குறித்து எந்த வித அறிவிப்பும் கொடுக்கவில்லை. இதற்கிடையில், தமிழகத்தில் திமுக ஆட்சியின் அவலத்தை கண்டு விஜய் இதுவரை ஒரு அறிக்கையோ அல்லது ஒரு கண்டன குரலோ கொடுக்கவில்லை இது பேசு பொருளாக இருந்தது. இதனால் விஜய் திமுகவனின் பின்புலத்தில் இருந்து செயல்படுகிறார் என்ற கேள்வி தொடர்ந்து வந்தது.
ஒரு பக்கம் நாம் தமிழர் சீமானுடன் விஜய் அரசியலில் கூட்டணி மேற்கொள்வார் என கேள்விகள் வந்த நிலையில் விஜய் இது குறித்து எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அதேபோல், சீமான் மட்டும் நடந்தால் நல்லா இருக்கும் என தெரிவித்தார். இந்த நிலையில் தான் விஜய் மக்களவை தேர்தல் முடிவுக்கு தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்தார். இருப்பினும் தற்போது வரை நடிகர் விஜய் தமிழகத்தில் 40 தொகுதிகளில் வென்ற திமுக கூட்டணிக்கு ஒரு வாழ்த்து கூட தெரிவிக்காமல் இருக்கிறார். இது தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் தெலுங்கனாவுக்கு வாழ்த்து தெரிவித்தது திராவிட கட்சிகளுக்கு விழுந்த பெரும் அடியாக பார்க்கப்படுகிறது.
விஜய் தேசிய சித்தாந்தத்தை தான் பின்பற்றுகிறார் என ஒரு பக்கம் பேசப்படுகிறது ஏனென்றால் சந்திரபாபு நாயுடு தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கிறார் அதனாலே விஜய் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார் என இணையத்தில் பேச தொடங்கியுள்ளது. இதனால், சீமான் விஜயுடன் கூட்டணி மேற்கொள்ள மாட்டார். சீமான் தனித்து தான் 2026 தேர்தலையும் சந்திப்பார் என கூறப்படுகிறது.