24 special

உளவுத்துறை கொடுத்த தகவல் ...! அச்சத்தில் முதல்வர் ஸ்டாலின்

Senthil balaji, mk stalin
Senthil balaji, mk stalin

உளவுத்துறை வைத்து 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் முதல்வர் கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக அரசு தமிழகத்தில் 38 இடங்களில் வெற்றி பெற்றது, 38 இடங்களில் வெற்றி பெற்றாலும் எதிர்க்கட்சி பதவியே அவர்களுக்கு கிடைத்தது.  ஐந்து ஆண்டுகளில் திமுக சார்பில் 38 இடங்களில் வெற்றி பெற்ற எம்பிகள் எந்த ஒரு வளர்ச்சி பணிகளையும் செய்யவில்லை என்பது பொது மக்கள் கருத்தாக இருந்துவருகிறது. 


குறிப்பாக கனிமொழி, டி ஆர் பாலு, திருமாவளவன், தர்மபுரி எம்பி செந்தில்குமார், தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் என இப்படி திமுகவின் முக்கிய முகங்கள் வெற்றி பெற்றாலும் தங்கள் தொகுதிகளுக்கு எந்த ஒரு நலத்திட்டங்களையும் செய்யவில்லை என மக்கள் மிகவும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு சாதகமாக எதுவும் நடக்காது என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்த நிலையில் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒரு வருடத்திற்கு கொண்டாடுவதற்கும் திமுக அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஒரு வருட காலங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கலைஞரின் சிலையை நிறுவவும் சென்னையில் தற்போது நடைபெற்ற திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களாக நிறைவேற்றியது திமுக.

இதனோடு  சேர்த்து பல களப்பணிகளையும் திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இந்த கூட்டத்தில் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக 2024 ஆம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலமே உள்ளதால் அதற்கான தேர்தல் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று திமுக மாவட்ட செயலாளர்களுடன் ஜூம் காலில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைகளை மேற்கொண்டார். மேலும் அந்த ஜூம் காலில் சில மாவட்ட செயலாளருடன் கண்டிப்பாக முதல்வர் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. 

தற்போது இந்த தேர்தல் களப்பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சிக்குள்ளையே சர்வே எடுக்கவும் புதிய வேட்பாளர்களை அறிவிக்கலாமா அல்லது தற்போது இருக்கும் எம்பி களின் செல்வாக்கை ஆராய்ந்து அவர்களை தேர்தலில் நிறுத்தலாமா என்று ஆலோசனைகள் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. 

அதாவது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அடுத்த வருடம் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 39 இடங்களையும் வென்று மீண்டும் வெற்றியை பிடிக்க 39 இடங்களில் இவர்களை நிறுத்தலாம் என்று புதிய உத்தேச பட்டியலை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி தேர்வு செய்யப்பட்ட நபர்களின் செல்வாக்கை ஆராய்வதற்கு உளவுத்துறையை நாடி உள்ளதாகவும் பரபரப்பு தகவல் பரவி வருகிறது. 

உளவுத்துறை மேற்கொள்ள இருக்கும் ஆய்வில் புதிய நபர்களின் பெயர்கள் மட்டுமல்லாமல் தற்போது இருக்கும் எம்பிகளின் பெயர்களும் இடம் பெற்றிருப்பதாகவும் அவர்களைப் பற்றி மக்கள் மத்தியில் என்ன எண்ணம் உள்ளது என்பதை ஆராயவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. 

தோல்வி பயத்தின் காரணமாக இந்த முறை உளவுத்துறை அளித்த கோரிக்கை முதல்வரை அச்சத்திலும், பதட்டத்திலும் ஆழ்த்தியுள்ளது. இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டு அதன் காரணமாக மறுபடியும் ஆட்சியை இழந்தால் அடுத்த இரண்டு ஆட்சி காலத்திற்கு ஆட்சியைப் பிடிக்க முடியாது, எனவே இந்த மாதத்தில் அடுத்த வருடத்தில் வேட்பாளராக நிற்கவிற்கும் நபர்களைப் பற்றி ஆராய்ந்து அவர்களை மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெறவைத்து வெற்றி அடையலாம் என்று முதல்வர் ஸ்டாலின் கணக்கு போட்டு தற்போது இந்த உட்கட்சி சர்வேயில் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் இந்த முறை தேர்தலில் போட்டி போட உள்ள வேட்பாளர்களை நானே தேர்வு செய்கிறேன், அதுவும் உளவுத்துறையின் அறிக்கை மூலமாக  முடிவு செய்து கொள்கிறேன் என திமுக தலைமை குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.