பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்து முடிந்த சில நொடிகளிலேயே காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஆம் ஆத் வெளியிட்ட அறிக்கை பின் உள்ள தகவல், கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்களை அப்செட் செய்துள்ளது.
அடுத்த ஆண்டு நடக்க உள்ள மக்களவை தேர்தலில், பாஜகவின் மோடி அலையை வீழ்த்த வேண்டும் என்றால், அதற்கு அனைவரும் ஓரணியில் திரண்டால் மட்டுமே முடியும் என்ற நிலைக்கு எதிர்க்கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன. அதன்படியே பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்து, பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று, எதிர்க்கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார்.
பாட்டனாவில் சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஒன்றிணைவு பற்றி விவாதிக்கப்பட்ட இந்த முதல் கூட்டத்திலேயே ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியை எச்சரித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கூட்டத்திற்குப் பிறகு, அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். ஆனால் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. அதேபோல
தமிழக முதல்வர் ஸ்டாலினும் செய்தியாளர் சந்திப்பில் இடம் பெற வில்லை. டெல்லியில் அதிகாரிகளை நியமிப்பது குறித்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டம் தொடர்பான விவகாரத்தில் காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என ஆம் ஆத்மி வலியுறுத்தியது. இருப்பினும், காங்கிரஸ் இதில் மவுனமாகவே இருந்து வந்தது. இதற்கிடையே கூட்டம் முடிந்த சில நொடிகளில் ஆம் ஆத்மி காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் பகிரங்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டும் ஷாக் கொடுத்திருக்கிறார்.
அந்த அறிக்கையில் “மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக 11 கட்சிகள் குரல் கொடுத்துள்ளன.. காங்கிரஸ் கட்சி மட்டும் இந்த விவகாரத்தில் எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை.. பங்கேற்க மாட்டோம்: காங்கிரஸின் மவுனம் அதன் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.. அனைத்து பிரச்சினைகளிலும் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் காங்கிரஸ், இதில் மவுனமாக இருப்பது ஏன்" என காங்கிரஸை கடுமையாக சாடியுள்ளது.
மேலும், அவசர சட்டத்தைக் காங்கிரஸ் எதிர்க்கவில்லை என்றால் இனி வரும் கூட்டங்களில் கலந்து கொள்ள மாட்டோம் என்றும் ஆம் ஆத்மி காங்கிரஸ் கட்சியை எச்சரித்துள்ளது. ஏனெனில் 2013ம் ஆண்டு முதன் முறையாக டெல்லி சட்டமன்ற தேர்தலில் வென்றதில் இருந்தே காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே உரசல் உள்ளது. தேசிய அளவில் விருட்சமாக வளர்ந்திருந்தாலும் காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மியை பார்த்து அஞ்சியே ஆக வேண்டும் என்ற அளவிற்கு தற்போது வளர்ந்துள்ளது. டெல்லியை அடுத்து பஞ்சாப் பக்கம் வெற்றிக்கொடியை பறக்கவிட்டுள்ள ஆம் ஆத்மியின் அடுத்த டார்க்கெட் தமிழகம் தான் எனக்கூறப்படுகிறது. இதற்காக தமிழகத்தில் இருந்து கூட 30 ஆயிரம் புதிய மெம்பர்களை ஆம் ஆத்மி இணைத்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ், பாஜகவிற்கு அடுத்தபடியாக 3வது பெரிய தேசிய கட்சியாக உருவெடுக்க திட்டமிட்டுவருவதால் தான் ஆம் ஆத்மி இந்த கூட்டத்தில் பங்கேற்றதாகவும், அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் முன்னிலையிலும் வைத்து தனது கெத்தை உறுதிப்படுத்தவே அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸை சேலஞ்ச் செய்ததாகவும் அரசியல் வட்டாரத்தில் விவாதங்கள் கிளம்பியுள்ளன.
இது ஒருபக்கம் இப்படி இருக்க, நேற்று கூட்டம் முடிந்து விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், நான் முக்கியமாக சில கருத்துக்களை முன் வெச்சி இருக்கேன்....கூட்டம் முடிந்த பிறகு பிலைட்டுக்கு நேரமாகி விட்டதால்.. சாப்பிடாமல் கூட அங்கிருந்து கிளம்பி... பிளைட்டில் தான் சாப்பிட்டேன் .. அதனால் தான் அங்கு நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொள்ள வில்லை என கூறினார்.சரி நீங்க டைம் ஆச்சின்னு வந்துடீங்க... அரவிந்த் கெஜ்ரிவால் ஏன் கலந்துக்கல என கேட்டதற்கு கொஞ்சம் கடுப்பாகி... அத அவர் கிட்ட தான் கேட்கணும்னு சொல்லிட்டு கொஞ்சம் அப்சட்டா போய்ட்டே இருந்துட்டாரு முதல்வர். அடுத்த கூட்டம் ஷிம்லா வில் நடைபெறும் என சொல்லி இருந்தாலும்.... இப்போதைக்கு அரவிந்த் கெஜ்ரிவாலை எப்படி சமாளிப்பார்கள்... அடுத்த கூட்டம் நடைபெறுவவதற்குள் ஓரளவு பேசி ஒத்து வருவார்களா மாட்டாங்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கணும்.