24 special

அள்ள அள்ள பணம்..! ஜெகத்ரட்சகன் ரெய்டு தகவல்கள்...!

jagathrakshakan
jagathrakshakan

எம்ஜிஆர் அதிமுக வின் தலைவராக இருந்த காலத்தில் அதிமுகவில் இருந்தவர் தற்போதைய திமுக எம்பி ஜெகத்ரட்சகன். 2009 ஆம் ஆண்டு இவர் திமுகவில் இணைந்த பிறகு திமுகவிலேயே தொடர்ந்து வருகிறார். தற்போது ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என்றும், நிலக்கரி சுரங்க முறைகேடுகள் குறித்த புகார்களும் ஜெகத்ரட்சகன் மீது சுமத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக 2020 ஆம் ஆண்டு ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி இருந்தது, அதுமட்டுமின்றி ரூபாய் 89.19 கோடி மதிப்பில் வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்து சொத்துக்களை குவித்துள்ளதாக அமலாக்கத்துறை அந்த சொத்துக்களை முடக்கம் செய்தது. 


இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஜெகத்ரட்சகன் மீது சுமத்தப்படும் குற்றங்களும் நடத்தப்படும் சோதனைகளும் தொடர்ந்து  நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் தற்போது வருமானவரித்துறை ஜெகத்ரட்சகனின் வீடு அலுவலகம் ஹோட்டல் மற்றும் அவரது உறவினர்கள் வீடு அலுவலகங்கள் போன்ற இடங்களில் சோதனை நடைபெற்று வருவது நான்காவது நாளை எட்டி உள்ளது. இதுவரை வருமானவரித்துறை அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களும் பணங்கள் குறித்த எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை இருப்பினும் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு மாறுபட்ட கோணத்தில் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது சென்னையில் கோடம்பாக்கம், மகாலிங்கபுரம் மற்றும் அடையாறு , கஸ்தூரிபா நகர் போன்ற இடங்களில் இருக்கும் அவரது வீடுகளில் ரெய்டுகளில் இறங்கியுள்ளனர். மேலும் ஜெகத்ரட்சகனின் அதிகாரத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பாலாஜி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, ரேலா மருத்துவமனை உள்ளிட்ட பால இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் சென்னையை தாண்டி தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற இந்த சோதனையில் பணம் ஏதும் கைப்பற்ற படவில்லை எனவும் கூறப்பட்டது. 

ஆனால் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை இட சென்ற இடங்களுக்கு பணம் எண்ணும் இயந்திரத்தை எடுத்துச் சென்றதாகவும், ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடத்தில் ரகசிய அறை ஒன்றில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத்தான் வருமானவரித்துறை எதிர்பார்த்ததாகவும் வருமானவரித்துறை எதிர்பார்த்தது போலவே பல கோடிகள் பிடிபட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை ரெய்டு நடத்துகிறது என்ற செய்தியே திமுக தரப்பிற்கு பேரிடியாக அமைந்துள்ள நிலையில் தற்போது மற்றுமொரு அதிர்ச்சி தகவலை வருமானவரித்துறை அறிவாலயத்திற்கு கொடுத்துள்ளது. அதாவது இனி சோதனைகள் மேற்கொள்ளப்படும் கோணம் என்பது மாறுபட்டதாக இருக்கும் என்றும் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொள்ளும்போது கிடைக்கும் தகவல்களை வைத்து அடுத்தடுத்து இடங்களில் ரெய்டு நடத்தப்பட உள்ளதாக வருமானவரித்துறை வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளது. 

மேலும் ஜெகத்ரட்சகன் யார் யாரிடமெல்லாம் பணம் கொடுத்துள்ளார்,, யார் யார் அவரிடம் இருந்து பணம் பெற்றுள்ளார்கள் என்பது குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளதாம்! எப்படியும் ஜெகத்ரட்சகன் இந்த வாரத்தில் சிக்க மாட்டார் என்று திமுக நினைத்துக் கொண்டிருந்த நிலையில் ஜெகத்ரட்சகன் மீது தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை அவர்களுக்கு பேரடியாக அமைந்துள்ளது இது போதாது என்று அடுத்த வாரமே மற்றொரு திமுகவின் முக்கிய தலை சிக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.