லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து திரைக்கு இந்த மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ள படம் "லியோ" இப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், திரிஷா உள்ளிட்ட பல நட்சித்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் இந்த படத்தை காண நாடு முழுவதும் ஆர்வத்துடன் காத்து இருக்கின்றனர். இன்னிலையில் லோகேஷ் கனகராஜ்க்கு இந்த லியோ படம் தனது சினிமா வாழ்க்கையில் 5வது படமாகும். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய்க்கும், இயக்குனர் லோகேஷுக்கும் பிரச்னை ஏற்பட்டதால் தான் லோகேஷ் அவரது எக்ஸ் தளத்தில் இருந்து தனது லியோ படத்தின் பெயரை நீக்கிவிட்டதாக தகவல் வந்தன. ஆரம்பதில் எடுத்த மாநகரம்,கைதி,மாஸ்டர்,விக்ரம் ஆகிய படங்களின் பெயரை மட்டும் போட்டு இருந்தார். இதன் மூலம் ரசிகர்கள் இருவருக்கும் சண்டையின் காரணமாக லியோ பெயரை எடுத்துள்ளார் என கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து சமூக தளத்தில் ஒருவர் 'விஜய்க்கும் லோகேஷுக்கும் பிரச்சினை நடந்தது உண்மைதான். எங்களுக்கு எல்லாம் தெரியும்' என பதிவிட்டிருந்தார். அந்த பதிவை பார்த்த இயக்குனரும், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் லைக் செய்திருந்தார், உடனே அன்லைக் செய்து விட்டார். ஆனால் இந்த பதிவை போட்ட சமூக ஆர்வலர் லைக் செய்ததை ஸ்க்ரீன் ஷாட் எடுத்துள்ளார். லோகேஷுக்கும், விஜய்க்கும் நடந்த கசப்பான யதார்த்தம் உண்மைதான் அதனால தான் விக்னேஷ்சிவன் முதலில் லைக் செய்துள்ளார் என்று பதிவிட்டு இருந்தார். இந்த போஸ்டும் வைரலானதை அடுத்து வியாஜி ரசிகர்கள் சமூக தளத்தில் நேற்று விக்னேஷ் சிவன் மட்டுமின்றி, நயன்தாரவையம் திட்ட ஆரம்பித்தனர். சமூக தளத்தில் வைரலானதை சுதாரித்து கொண்ட விக்னேஷ் சிவன், இதற்கு விளக்கமளித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.அதில், "அன்பான விஜய் சார் ரசிகர்களே, லோகி ரசிகர்களே குழப்பத்திற்கு மன்னிக்கவும். மெசேஜையும், அதில் உள்ள தகவலையும் பார்க்காமல் லைக் செய்து விட்டேன். லோகேஷ் கனகராஜின் வீடியோக்களை லைக் செய்யும் பாணியில் லைக் செய்தேன்.
நான் லோகேஷின் மிகப்பெரும் ரசிகன். விஜய் சாரின் பிரமாண்ட ரிலீசான லியோவை எதிர்பார்த்துள்ளேன். நயன்தாராவின் வீடியோக்களுக்கு லைக் போடுவதைப் போன்று லோகேஷ் கனகராஜின் வீடியோவை பார்த்து மெசேஜை பார்க்காமல் லைக் செய்து விட்டேன். தவறு என்னால் ஏற்பட்டது. எனவே உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் என்னை மன்னிக்க வேண்டும். உங்களைப் போன்று அக்டோபர் 19 ஆம் தேதி 'லியோ' ரிலீஸுக்காக காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.இருப்பினும் கடந்த சில தினங்களுக்கு முன் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தளத்தில் லியோ படத்தின் பெயரை நீக்கி இருந்தார். இதனால் இயக்குனருக்கும், நடிகருக்கும் கருத்து வேறுபாடு காரணமாகவே இப்படி செய்திருப்பார் என்று பேசும் பொருளாக மாறியது. தற்போது லியோ படத்தின் பெயரை சேர்த்துள்ளதால் அது அதிகாரபூர்வாகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.