அமலாக்கத்துறை விசாரணை செய்ய முயற்சிசெய்யும் நிலையில் திமுகவிற்கு இடி விழுந்தது போல மற்றொரு பெரிய அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.திமுகவின் முக்கிய தலைவராகவும், கிட்டத்தட்ட துணை முதல்வர் போன்று தமிழக அரசியலில் வலம் வந்து கொண்டிருந்த செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது மேற்கொண்ட பண மோசடியால் தற்போது அவர் அமலாக்க துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இருப்பினும் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் கைது செய்ய முற்படும்பொழுது அதற்கான மெமோவை வாங்க மறுத்து அதிகாரிகளை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது பிறகு தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது என்று கதறி அழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் இன்னும் இரண்டு தினங்களில் இவருக்கு காவிரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ள நிலையில் அதுவரையில் அமலாக்கத்துறை தனது கட்டுப்பாட்டில் செந்தில் பாலாஜி எடுத்து விசாரணை மேற்கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் செந்தில் பாலாஜியின் கைதிற்கு தமிழக முதல்வரே பாஜகவினரையும், அமலாக்க துறையையும் வன்மையாக கண்டித்திருந்தார். இதனால் தற்போது செந்தில் பாலாஜி பாதுகாப்பு படையினர் கண்கணிப்பிலும், காவல்துறை கட்டுப்பாட்டிலும் இருந்து வருகிறார்.
துப்பாக்கி ஏந்திய வீரர்களின் பாதுகாப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி இருக்கின்ற பொழுதும் திமுகவின் மூத்த அமைச்சர்கள் படையெடுத்து மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை காண்பதற்காக குவிந்து வருகின்றனர். ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி ஏக்நாத் ஷிண்டேவாக மாறி திமுகவை கைப்பற்றுவார் என்ற செய்திகள் பரவிக் கொண்டிருந்த வேளையில் தற்போது 60 எம்எல்ஏக்களை செந்தில் பாலாஜி தன் கையில் வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கனிம வளங்களை தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கடத்துவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்பொழுது செய்தியாளர்கள் சந்தித்த சீமான் கூறியதாவது, 'அமலாக்கத்துறையால் தற்போது கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டில் திமுகவின் 60 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். மேலும் திமுகவின் மூத்த நிர்வாகிகள் செந்தில் பாலாஜிக்கு மாதாமாதம் பணம் கொடுத்து வருகின்றனர்.
திமுகவின் பாதி பிரதிநிதிகள் செந்தில் பாலாஜி கட்டுப்பாட்டில் இருப்பதால் அவரை விசாரணை செய்யும் பொழுது பல உண்மைகள் வெளிவரும் செந்தில் பாலாஜி வாய் திறந்தால் முதல்வர் உட்பட்ட பலருக்கு பெரும் பாதிப்பாக அமையும் என்பதை உணர்ந்ததாலே திமுக இதில் அதிக வேகம் காட்டுகிறது. செந்தில் பாலாஜி மோசடிகளில் தான் பெற்ற பணத்தை எப்படி பிரித்துக் கொடுத்திருக்கிறார் என்பது விசாரணை மூலம் வெளிவந்தால் நம் அரசியலே அவ்வளவுதான் என்று முதல்வரே அச்சப்படுகிறார் என்று அறிவாளி வட்டாரங்களில் ரகசியமாக பேசப்பட்டு வந்த தகவலை வெளிப்படையில் போட்டு உடைத்தார் சீமான்.
ஏற்கனவே அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் தலைமறைவாக இருக்கிறார் என்ற தகவல் வெளியான நிலையில் இப்படி அமைச்சர் செந்தில்பாலாஜியின் கட்டுப்பாட்டில் 60 திமுக எம்.எல்.ஏ'க்கள் இருக்கிறார்கள் என்ற தகவல் அறிவாலயத்தை ஆட்டம்காண வைத்துள்ளது.
ஏற்கனவே மூத்த அமைச்சரான டி ஆர் பாலு, இன்னும் ஆறு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது என்ற பகிர் சம்பவத்தை செய்த பிறகு எப்படி ஆட்சி பிடிக்க போறோம் என்று சிந்தனையிலும் வருத்தத்திலும் திமுக இருந்து வருகிறது. இந்த நிலையில் திடீர் பகீர் தகவலும் வெளியாகி செந்தில் பாலாஜியிடம் இது பற்றி அமலாக்க துறையினர் கேள்விகள் கேட்க ஆரம்பித்தால் நாம் அனைவரும் மாட்டுவோமே என்று ஒட்டுமொத்த அறிவாலயமும் அச்சத்தில் இருந்த வருகின்றனர்.