24 special

திமுக பாஜக இடையே அதிகரித்துள்ள மோதல் ...!மோடி எடுத்துள்ள முக்கிய முடிவு...!

Modi ,annamalai
Modi ,annamalai

தமிழக அரசியல் களம் தகிக்கும் வேளையில் பிரதமர் மோடியின் முடிவு ஒட்டுமொத்த திமுக கூட்டணியை தூக்கமில்லாமல் செய்துவிட்டது.மின்சார மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி திமுகவின் முக்கிய பிரமுகராக இருந்தார் அவர் மீது எழுப்பப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்வதற்கு அமலாக்கத் துறையினர் கைது செய்தனர், கைது செய்ய முற்படும் வேலையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தற்போது நீதிமன்ற காவலிலும் இருந்து வருகிறார் இதனை கண்டித்து திமுகவின் மூத்த அமைச்சர்கள் என பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர் அதுவும் அமலாக்கத்துறை பாஜகவின் அறிவுறுத்தலின் அடிப்படையிலே செந்தில் பாலாஜி கைது செய்துள்ளது என்றும் குற்றம் சுமத்தி வருகின்றனர். திமுக நிர்வாகிகள் மட்டுமல்ல தமிழக முதல்வர் மு க ஸ்டாலினும் இதனை கூறி சர்ச்சை ஏற்படுத்தும் விதத்தில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். 


அதில் விசாரணைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறிய பிறகும் அவருக்கு நெஞ்சுவலி ஏற்படும் அளவிற்கு நெருக்கடி கொடுத்துள்ளது பாஜகவின் அமலாக்கத்துறை. அவர்களின் செயல்பாடு கண்டனத்திற்கு உரியது வன்மையாக கண்டிக்கிறேன், விசாரணை அதிகார அமைப்புகளை தன் கையில் வைத்துக் கொண்டு தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பழிவாங்கும் வழியில் பாஜக சென்று கொண்டிருக்கிறது. தலைமைச் செயலகத்தில் அவரது அறையில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது போல் நாடகம் நடத்தி நேரத்தை விரயப்படுத்தியுள்ளார்கள். எங்களால் தலைமை செயலகத்திற்கு உள்ளே புகுந்து ரெய்டு நடத்த முடியும் என்பதை காட்டுவதற்காகவே இதனை செய்துள்ளனர். சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற செயல்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது ஏன்? இதன் மூலம் அமலாக்கத்துறை அதிகாரிகளை ஏவியவர்களின் குரூர சிந்தனை புலப்படுகிறது என்று பாஜகவை நேரடியாகவே வன்மையாக கண்டித்தார். 

முதல்வரின் இந்த கண்டன அறிக்கைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எதிர்ப்பதிவை பதிவிட்டார். தொட்டுப்பார் சிந்திப்பார் என்றெல்லாம் பேசுவது கட்சியின் மேடைகளிலே கூட்டம் கலையாமல் பார்த்துக் கொள்வதற்காக ஒரு சாதாரண மேடைப்பேச்சாளர் பேசும் தொனி ஆனால் திரு ஸ்டாலின் அவர்களே நீங்கள் இப்படி பேசுவது நீங்கள் வகிக்கும் முதலமைச்சர் என்ற பதவிக்கு உகந்ததா என்பதை சிந்தித்துப் பாருங்கள், தமிழகத்தில் எத்தனையோ குற்றங்கள் நிகழ்ந்த போதும் வாய் திறக்காமல் இருந்த நீங்கள் கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவத்தின் பொழுதும் கண்டனம் தெரிவிக்காமல் இருந்த நீங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினவர் மீது சுமத்தப்படும் புகார் பற்றி பொங்கி எழுவது நீங்கள் வகிக்கும் பதவிக்கு அழகா? என்று முதல்வருக்கு பதிலடி கொடுத்தார். 

இதற்கு அடுத்ததாக பாஜக மாநில செயலாளர் ஆக உள்ள எஸ் ஜி சூர்யா சமூகப் பிரச்சினையை பற்றி தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்ட காரணத்திற்காக அவர் இரவோடு இரவாக கைது செய்துள்ளனர். முன்னதாக பல இடங்களில் பாஜக நிர்வாகிகள் சில காரணங்களை கூறி கைது செய்யப்படுவதும் நிகழ்ந்து கொண்டே உள்ளது.  திமுகவின் ஒவ்வொரு ஊழல்களையும் குற்றங்களையும் பாஜகவினர் அவ்வப்போது மக்கள் மத்தியில் எடுத்து வைத்து வருகின்ற காரணத்தினால் திமுக அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இவ்வாறான காரியங்களை மேற்கொண்டு வருகின்றனர் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். 

இதனால் திமுக மற்றும் பாஜக இடையிலான மோதல் தற்போது அதிகரித்துள்ளது. இந்த விவகாரங்கள் அனைத்துமே பிரதமர் அலுவலகத்திற்கு உடனடி தகவலாக கொண்டு சேர்க்கப்படுகிறதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நானே நேரடியாக வருகிறேன் என பிரதமர் மோடி தமிழக தேர்தல் களத்தில் இறங்க உள்ளார் என பரபர தகவல் வெளியாகி உள்ளது. 

பிரபல பத்திரிக்கைக்கு கிடைத்த தகவலின்படி, 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வாரணாசியுடன் ராமநாதபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட வியூகம் அமைப்பதாக கூறப்படுகிறது. ராமர் கோவிலின் சிறப்புடன் ராமேஸ்வரத்திற்கு நேரடி தொடர்பு உள்ளதாகவும் ராமர் பாலமும் அருகில் இருப்பதால் ராமேஸ்வரத்தில் பாஜக களம் அமைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி மோடி ராமேஸ்வரத்தில் போட்டியிடுவதற்கு பின்னணியில் தென்னிந்தியாவில் தற்போது பாஜக வலுவாக காலூன்ற வேண்டும் என்ற திட்டத்தின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கடந்த முறை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையின்போதும் இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் ஆலோசித்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.